தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 717: | வரிசை 717: | ||
தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. |
தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. <ref> [https://www.bbc.com/tamil/live/india-56642501 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 71.79 சதவீத வாக்குப்பதிவு - சென்னையில் குறைந்த பட்ச வாக்குப்பதிவு]</ref> |
||
{| class="wikitable" |
{| class="wikitable" |
19:08, 8 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை நடப்புத் தேர்தலைப் பற்றியது. எனவே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் வரை தகவல்கள் அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகலாம். |
| |||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான அனைத்து தொகுதிகள்: 234 அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
தமிழ்நாடு தேர்தல் வரைபடம் (தொகுதி-வாரியாக) | |||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.[3][4] 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
பின்னணி
தமிழ்நாடு அரசியலில் மாநிலத்தின் இரண்டு முன்னணித் திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) ஆகியவை கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2011 தேர்தலில், ஜெ. ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக, மு. கருணாநிதி தலைமையிலான திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தனது பெரும்பான்மையை 135 இடங்களுடன் தக்க வைத்துக் கொண்டது. திமுக 98 இடங்களைக் கைப்பற்றியது.[5] 2021 இன் 16-வது சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்னர் நடைபெறும் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும்.
2016 இல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 ல் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எடப்பாடி க. பழனிசாமி, பதில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் கீழ் இணைத் தலைமையை அஇஅதிமுக ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, பழனிசாமி முதலமைச்சராகவும், பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் ஆயினர்.
2018 இல் மு. கருணாநிதியின் இறப்பின் பின்னர், அவரது மகன் மு. க. ஸ்டாலின் திமுகவின் தலைமையை ஏற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், திமுக-தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளில் 38 ஐக் கைப்பற்றியது. இதே காலப்பகுதியில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில், திமுக 13 இடங்களையும், அஇஅதிமுக 10 இடங்களையும் கைப்பற்றின.
தேர்தல் குறிப்புகள்
- தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[6][7]
- 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
- வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[6]
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
- கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[8]
- 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[9]
- தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
- வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. [10]
தேர்தல் அட்டவணை
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[11]
நிகழ்வு | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 |
வாக்காளர் புள்ளிவிவரங்கள்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[12][13] சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[14][15]
பொது வாக்காளர்கள் | சேவை வாக்காளர்கள் | வெளிநாட்டு வாக்காளர்கள் | மொத்தம் வாக்காளர்கள் |
---|---|---|---|
6,27,47,653 | 72,853 | 3,243 | 6,28,23,749 |
மொத்தம் வாக்காளர்கள் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் வாக்காளர்கள் |
---|---|---|---|
3,09,95,440 | 3,19,40,880 | 7,192 | 6,29,43,512 |
தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும்[16][17], திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[18] [19]
அரசியல் நிலவரம்
- தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
- அதிமுக கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. [20]
- அதிமுக கூட்டணியில் பாசக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [21]
- அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [22]
- அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன. [23][24]
- அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது..[25]
- ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்குகின்றனர். .2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [26]
- திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது [27]
- தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். [28]
அதிமுக கூட்டணி ஆதரவு
- ஜெயலலிதா கூறியபடி நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.[29]
- சாதி மத சார்பற்ற நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.[30]
- நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[31]
- ஜாதி இனம் பாகுபாடின்றி ஆட்சிபுரியும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது.[32]
- தமிழக விவசாயிகளின் தேவை அறிந்து செய்வதால் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.[33]
- மேலும் மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம் போன்ற அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.[34]
திமுக கூட்டணி ஆதரவு
- ஐந்து கோரிக்கையுடன் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு அதரவு அறிவித்தது.[35][36]
- விஸ்வகர்மா சமூகத்தினருக்கு ஏற்ற தேர்தல் வாக்குறுதியினால் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.[37]
- தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.[38]
- மதச்சாா்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னணி தெரிவித்தது[39]
- மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.[40]
- மேலும் புதிய திராவிட கழகம்[41], திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம்[42], புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி[43] போன்ற அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சிகளும் கூட்டணிகளும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அஇஅதிமுக | படிமம்:Edappadi K. Palaniswami.png | எடப்பாடி கே. பழனிச்சாமி | 179 | ||
பாட்டாளி மக்கள் கட்சி | பாமக | படிமம்:S Ramadoss EPS.jpg | ச. இராமதாசு | 23 | ||
பாரதிய ஜனதா கட்சி | பாஜக | படிமம்:LMurugan.jpg | எல். முருகன் | 20 | ||
தமிழ் மாநில காங்கிரசு | தமாகா | ஜி. கே. வாசன் | 6 | |||
பெருந்தலைவர் மக்கள் கட்சி | பெதமக | என். ஆர். தனபாலன் | 1 | |||
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | தமமுக | பெ. ஜான் பாண்டியன் | 1 | |||
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் | மூமுக | ஸ்ரீதர் வாண்டையார் | 1 | |||
மூவேந்தர் முன்னணிக் கழகம் | அஇமூமுக | சேதுராமன் | 1 | |||
புரட்சி பாரதம் | புபாக | ஜெகன்மூர்த்தி | 1 | |||
பசும்பொன் தேசிய கழகம் | பதேக | ஜோதி முத்துராமலிங்கம் | 1 |
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
திராவிட முன்னேற்றக் கழகம் | திமுக | படிமம்:Stalinmk.png | மு. க. ஸ்டாலின் | 173 | ||
இந்திய தேசிய காங்கிரசு | இதேகா | படிமம்:K.S.Alagiri.jpg | கே. எஸ். அழகிரி | 25 | ||
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | சிபிஐ | படிமம்:R.Mutharasan.jpg | இரா. முத்தரசன் | 6 | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சிபிஎம் | படிமம்:K. Balakrishnan (CPI-M).jpg | கே. பாலகிருஷ்ணன் | 6 | ||
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | விசிக | படிமம்:Thol.Tirumavalavan.jpg | தொல். திருமாவளவன் | 6 | ||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | மதிமுக | வைகோ | 6 | |||
இந்திய யூனியன் முசுலீம் லீக் | இயூமுலீ | படிமம்:K. M. Kader Mohideen.jpg | கே. எம். காதர் மொகிதீன் | 3 | ||
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | கொமதேக | படிமம்:E.R.Eswaran.jpg | ஈ. ஆர். ஈஸ்வரன் | 3 | ||
மனிதநேய மக்கள் கட்சி | மமக | படிமம்:M. H. Jawahirullah.jpg | ஜவாஹிருல்லா | 2 | ||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | அஇபாபி | பி. வி. கதிரவன் | 1 | |||
தமிழக வாழ்வுரிமைக் கட்சி | தவாக | படிமம்:T Velmurugan.jpg | தி. வேல்முருகன் | 1 | ||
மக்கள் விடுதலைக் கட்சி | மவிக | படிமம்:S K Murugavel Rajan.jpg | சு. க. முருகவேல் ராஜன் | 1 | ||
ஆதித்தமிழர் பேரவை | ஆதபே | இரா. அதியமான் | 1 |
அமமுக கூட்டணி
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | அமமுக | படிமம்:Pressure Cooker symbol.png | டி. டி. வி. தினகரன் | 161 | ||
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | தேமுதிக | விசயகாந்து | 60 | |||
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | இசஜக | படிமம்:Pressure Cooker symbol.png | வி. எம். எஸ். முகமது முபாரக் | 6 | ||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | அஇமஇமு | டி. எஸ். வகீல் அகமது | 3 | |||
கோகுல மக்கள் கட்சி | கோமக | படிமம்:Pressure Cooker symbol.png | எம். வி. சேகர் யாதவ் | 1 | ||
மருது சேனை சங்கம் | மசேச | கரு. ஆதிநாராயணன் | 1 | |||
விடுதலை தமிழ் புலிகள் கட்சி | விதபுக | குடந்தை அரசன் | 1 | |||
மக்கள் அரசு கட்சி | மஅக | எஸ். இரஜினிகாந்த் (எ) அருண்மொழி வர்மன் |
1 |
மக்கள் நீதி மய்யம்
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
மக்கள் நீதி மய்யம் | மநீம | கமல்ஹாசன் | 142 | |||
இந்திய ஜனநாயகக் கட்சி | இஜக | படிமம்:Indian Election Symbol Auto Rickshaw.png | பச்சமுத்து பாரிவேந்தன் | 40 | ||
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | சமக | சரத்குமார் | 33 | |||
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி | தமஜக | படிமம்:TMJK Head.jpg | கே. எம். சரீப் | 9 | ||
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | ஜத(ச) | தேவ கௌடா | 3 |
சகாயம்+
வ. எண் | கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|
1. | சகாயம் அரசியல் பேரவை | உ. சகாயம் | 20 | ||
2. | தமிழ்நாடு இளைஞர் கட்சி | 15 | |||
3. | வளமான தமிழக கட்சி | 1 |
எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்
கட்சி | சின்னம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|
நாம் தமிழர் கட்சி | நாதக | சீமான் | 234 | ||
பகுஜன் சமாஜ் கட்சி | பசக | ஆம்ஸ்ட்ராங் | 160 | ||
புதிய தமிழகம் கட்சி | புதக | க. கிருஷ்ணசாமி | 60 | ||
இந்தியக் குடியரசுக் கட்சி | இகுக | சி. கே. தமிழரசன் | 16 |
வேட்பாளர் பட்டியல்
வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:
தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் | ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் | நிராகரிக்கப்பட்ட மனுக்கள் | திரும்பப் பெறப்பட்ட மனுக்கள் |
---|---|---|---|
7,255 | 4,274 | 2,543 | 438 |
கருத்துக் கணிப்புகள்
வெளியிட்ட நாள் | நிறுவனம் | திமுக + காங்கிரஸ் |
அதிமுக + பாஜக |
Lead | இழுபறி | |||
---|---|---|---|---|---|---|---|---|
மமுகூ | தேஜகூ | அமமுக | மநீம | மற்றவை | ||||
6 சனவரி 2021 | Lok Poll[44] | 180 – 185 | 45 – 50 | 1 – 3 | – | 0 – 1 | 130-140 | - |
18 சனவரி 2021 | ABP News C-Voter | 158 – 166 | 60 – 68 | 2 – 6 | 0 – 4 | 0 – 4 | 90-106 | - |
18 சனவரி 2021 | IANS [45] | 162 | 65 | 2 | 0 | 2 | 98 | - |
27 பெப்ரவரி 2021 | ABP News- CVoter[46] | 154 - 162 | 58 - 68 | 1 - 5 | 2-6 | 2 - 5 | 88 - 96 | - |
8 மார்ச் 2021 | Times Now - CVoter[47] | 158 | 65 | 3 | 5 | 3 | 93 | - |
15 மார்ச் 2021 | ABP - CVoter[48] | 161 - 169 | 53 - 61 | 1 - 5 | 2 - 6 | 3-7 | 100 - 116 | |
22 மார்ச் 2021 | புதியதலைமுறை - APT [49] | 151-158 | 76-86 | 65 | - | |||
24 மார்ச் 2021 | Spick Media - MCV [50] | 158 | 74 | 2 | 0 | 0 | 84 | - |
24 மார்ச் 2021 | டைம்ஸ் நௌவ் - CVoter [51] | 177 | 49 | 3 | 3 | 2 | 128 | - |
25 மார்ச் 2021 | ஜனநாயகம் டைம்ஸ் நெட்வொர்க் [52] | 182 | 51 | 1 | 0 | 0 | 131 | - |
31 மார்ச் 21 | ஜூனியர் விகடன்[53] | 163 | 52 | 0 | 1 | 0 | 111 | 18 |
02 ஏப்ரல் 21 | மாலை முரசு[54] | 151 | 54 | 1 | 1 | 0 | 97 | 27 |
02 ஏப்ரல் 21 | தந்தி டிவி[55] | 124 | 52 | – | – | – | 72 | 58 |
04 ஏப்ரல் 21 | நக்கீரன்[56] | 172 | 22 | – | – | – | 150 | 40 |
வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. [57]
முடிவுகள்
எண் | மாவட்டம் | வாக்குப்பதிவு % |
---|---|---|
1 | திருவள்ளூர் | 68.73 |
2 | சென்னை | 59.40 |
3 | காஞ்சிபுரம் | 69.47 |
4 | வேலூர் | 72.31 |
5 | கிருட்டிணகிரி | 74.23 |
6 | தர்மபுரி | 77.23 |
7 | திருவண்ணாமலை | 75.63 |
8 | விழுப்புரம் | 75.51 |
9 | சேலம் | 75.33 |
10 | நாமக்கல் | 77.91 |
11 | ஈரோடு | 72.82 |
12 | நீலகிரி | 69.24 |
13 | கோயமுத்தூர் | 66.98 |
14 | திண்டுக்கல் | 74.04 |
15 | கரூர் | 77.60 |
16 | திருச்சிராப்பள்ளி | 71.38 |
17 | பெரம்பலூர் | 77.08 |
18 | கடலூர் | 73.67 |
19 | நாகப்பட்டினம் | 69.62 |
20 | திருவாரூர் | 74.90 |
21 | தஞ்சாவூர் | 72.17 |
22 | புதுக்கோட்டை | 74.47 |
23 | சிவகங்கை | 68.49 |
24 | மதுரை | 68.14 |
25 | தேனி | 70.47 |
26 | விருதுநகர் | 72.52 |
27 | ராமநாதபுரம் | 67.16 |
28 | தூத்துக்குடி | 70.00 |
29 | திருநெல்வேலி | 65.16 |
30 | கன்னியாகுமரி | 68.41 |
31 | அரியலூர் | 77.88 |
32 | திருப்பூர் | 67.48 |
33 | கள்ளக்குறிச்சி | 78.00 |
34 | தென்காசி | 70.95 |
35 | செங்கல்பட்டு | 70.95 |
36 | திருப்பத்தூர் | 74.66 |
37 | ராணிப்பேட்டை | 74.36 |
முடிவுகள்
|
---|
இவற்றையும் காண்க
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021
- தேர்தல் நடத்தை நெறிகள்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
- அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021
- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
- கேரள சட்டமன்றத் தேர்தல், 2021
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 2016 முதல் இன்றுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அடங்குவர்.
மேற்கோள்கள்
- ↑ Writer, Staff (2021-03-04). "Tamil Nadu assembly polls: 'NDA will work to fulfil Amma's dream'". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ "Tamil Nadu Assembly polls | DMK to field candidates in 174 seats" (in en-IN). The Hindu. 2021-03-09. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/tamil-nadu-assembly-polls-dmk-to-field-candidates-in-174-seats/article34030202.ece.
- ↑ "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
- ↑ "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
- ↑ "Victorious Jayalalithaa hails people's faith in AIADMK". தி இந்து. 19 May 2016.
- ↑ 6.0 6.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
- ↑ தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
- ↑ தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
- ↑ 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
- ↑ திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?- முழு விவரம்
- ↑ தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
- ↑ [1]
- ↑ "TamilNadu Final Electoral list,2021". பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "EC Releases Electoral Roll for Tamil Nadu Assembly Elections 2021". News18 (in ஆங்கிலம்). 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ [2]
- ↑ அதிமுக தேர்தல் அறிக்கை: 163 அறிவிப்புகள் முழு விவரம்
- ↑ அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்
- ↑ திமுக தேர்தல் அறிக்கை
- ↑ திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- ↑ BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
- ↑ #BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!
- ↑ #BREAKING: பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் எவையெவை? - வெளியானது பட்டியல்!
- ↑ அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- ↑ #BREAKING அ.தி.மு.க-வின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியானது!
- ↑ 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக: பென்னாகரத்தில் ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு போட்டி
- ↑ உதயசூரியன்; தம்பி இரட்டை இலை: ஆண்டிபட்டியில் 2-வது முறையாக கோதாவில் இறங்கிய சகோதரர்கள்!
- ↑ திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - முழு நிலவரம்!
- ↑ பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட்
- ↑ "அ.தி.மு.க. 100 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் - ஏ.சி.சண்முகம் அறிக்கை". மாலைமலர். https://www.maalaimalar.com/news/district/2021/03/15160750/2439582/Tamil-news-AC-Shanmugam-says-ADMK-100-Years-of-Success.vpf. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "தலைமை நிலைய செய்தி வெளியீடு". தமிழ் மாநில முஸ்லீம் லீக். https://twitter.com/Tmmlsheik/status/1368223854229737476. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!". சமயம். https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/actor-karthik-extends-his-support-to-aiadmk/articleshow/81449055.cms. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவு : தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவிப்பு :". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/645774-.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தமிழக விவசாயிகள் சங்கம் சேலத்தில் அறிவிப்பு.". சமயம். https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-farmers-association-announces-support-for-aiadmk-led-alliance-in-salem/videoshow/81553134.cms. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "அதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் ஆதரவு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/election-2021/642807-13-small-parties-supports-admk.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி கடிதம்". நியூஸ்18. https://tamil.news18.com/news/tamil-nadu/humanitarian-democratic-party-supports-dmk-alliance-sur-424419.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "5 கோரிக்கைகளுடன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மஜக.. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு வேண்டும்.... Read more at: https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu". ஆசிய நெட் நியூஸ். https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "கைவினைஞா் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/mar/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3581999.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஒவைசியால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/642490-support-for-the-dmk-alliance-owaisi-cannot-make-an-impact-in-tamil-nadu-indian-tawheed-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழக மக்கள் முன்னணி முடிவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/mar/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3583353.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/645504-support-for-dmk-alliance-in-elections-unity-muslim-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "வேட்டுவ கவுண்டர்களின் புதிய திராவிட கழகம் உட்பட 50 இயக்கங்கள் - சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு". இன் இந்தியா. https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-election-50-movements-assosiciations-support-to-dmk-alliance-415122.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "திமுக கூட்டணிக்கு பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646446-.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ "திமுக கூட்டணிக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646126-.html. பார்த்த நாள்: 17 March 2021.
- ↑ https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19
- ↑ Bureau, IANS News (2021-01-18). "IANS Election 2021 Opinion Poll LIVE: The ruling #AIADMK-led #NDA alliance will face a major setback in the Assembly polls in #TamilNadu scheduled later this yr, as the #DMK-led #UPA is predicted to win 162 seats in the 234-member Assembly". twitter and Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ Bureau, ABP News (2021-02-27). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ "https://twitter.com/timesnow/status/1368951697398136834". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "ABP CVoter Opinion Poll 2021". ABP Website (in ஆங்கிலம்).
- ↑ "Puthiyathalaimurai - APT Opinion Poll 2021". Puthiyathalaimurai Website (in ஆங்கிலம்).
- ↑ "Spick Media MCV Network Opinion Poll 2021". SpickMedia (in ஆங்கிலம்).
- ↑ "https://twitter.com/timesnow/status/1374729085025284103". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "Tweet". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ "மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?". ஜூனியர் விகடன்.
- ↑ "தேர்தலில் 151 இடங்களை திமுக கைப்பற்றும் – மாலை முரசு கருத்துக்கணிப்பில் தகவல்". மாலை முரசு.
- ↑ "மக்கள் யார் பக்கம் | தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு". தந்தி டிவி.
- ↑ "உங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி? - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்". nakkheeran. 4 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 71.79 சதவீத வாக்குப்பதிவு - சென்னையில் குறைந்த பட்ச வாக்குப்பதிவு