உள்ளடக்கத்துக்குச் செல்

வே. செந்தில்பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே. செந்தில்பாலாஜி
மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
29 செப்டம்பர் 2024 முதல் – 27 ஏப்ரல் 2025
முன்னையவர்
பதவியில்
7 மே 2021 – 16 சூன் 2023
முன்னையவர்பி. தங்கமணி
பின்னவர்
துறையற்ற அமைச்சர்
பதவியில்
16 சூன் 2023 – 12 பிப்ரவரி 2024
போக்குவரத்து துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
16 மே 2011 – 28 சூலை 2015
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
ஓ. பன்னீர்செல்வம்
ஜெ. ஜெயலலிதா
முன்னையவர்கே. என். நேரு
பின்னவர்பி. தங்கமணி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிகரூர்
பதவியில்
மே 2019 – மே 2021
தொகுதிஅரவக்குறிச்சி
பதவியில்
நவம்பர் 2016 – செப்டம்பர் 2018
தொகுதிஅரவக்குறிச்சி
பதவியில்
மே 2006 – மே 2016
தொகுதிகரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
செந்தில்குமார்

21 அக்டோபர் 1975 (1975-10-21) (அகவை 50)
ராமேஸ்வரப்பட்டி, கரூர், தமிழ்நாடுஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1996 – 2000 & 2018 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000–2017)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1994–1996)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2018)
துணைவர்மேகலா செந்தில் பாலாஜி
பிள்ளைகள்எஸ். நந்தினி (மகள்)
பெற்றோர்தந்தை : பி.வேலுசாமி கவுண்டர்
தாயார் : பழநியம்மாள்
கல்விஇளங்கலை வணிகவியல்
பணிஅரசியல்வாதி,
இணையத்தளம்https://senthilbalaji.in/

வே. செந்தில்பாலாஜி (V. Senthilbalaji, பிறப்பு: அக்டோபர் 21, 1975) அரசியல்வாதி ஆவார். இவர் கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 14 திசம்பர் 2018 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[2] கட்சியில் சேர்ந்தவுடன் இவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 23 மே 2019 அன்று சட்டமன்ற உறுப்பினராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்ற பிறகு இவர் டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். முதல்வரை மாற்றுமாறு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்துக்கு மனு அளித்ததற்காக 18 செப்டம்பர் 2017 அன்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

2011-ல் நடந்த 14வது சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவர் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[3]. 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் அதிமுக கட்சியில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இளமைக் காலம்

[தொகு]

வே. செந்தில்குமார் என்னும் இயற்பெயரை உடைய வே. செந்தில் பாலாஜி என இவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆதரவுக்கு இனங்க அவ்வாறு பெயர் மாற்றி வைத்து கொண்டார் இவர் கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் வேலுசாமி கவுண்டர்–பழநியம்மாள் இணையாருக்கு மகனாக ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு அசோக்குமார் எனும் ஒரு தம்பி உள்ளார்.

கல்வி

[தொகு]

கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். அரசியல் ஆர்வத்தின் காரணமாக அப்படிப்பை 16.4.1995ம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பட்டப்படிப்பை 1995ஆம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்த செந்தில்பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2000மார்ச் 13ஆம் நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளைப் பெற்றார். இதன்பிறகு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்தும் 27 சூலை 2015இல் நீக்கம் செய்யப்பட்டார்.[4] ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் டி. டி. வி. தினகரன் ஆதரவாளராக இருந்த இவர். 2018 திசம்பர் 14 அன்று திமுகவில் இணைந்தார்.[5]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் போட்டி

[தொகு]
தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவிகிதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவிகிதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 கரூர் அதிமுக வெற்றி 47.00 வாசுகி முருகேசன் திமுக 43.84
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 கரூர் அதிமுக வெற்றி 61.18 ஜோதிமணி இதேகா 34.10
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 அரவக்குறிச்சி அதிமுக வெற்றி 53.51 கே. சி. பழனிசாமி திமுக 39.13
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 அரவக்குறிச்சி திமுக வெற்றி 56.45 வி. வி. செந்தில்நாதன் அதிமுக 34.54
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 கரூர் திமுக வெற்றி 49.31 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 43.28

வகித்த பதவிகள்

[தொகு]

கட்சிப் பதவிகள்

[தொகு]
  • 2000 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2004ஆம் ஆண்டு அதே கட்சியின் கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார்.
  • 2007 மார்ச் 11ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனார்.
  • 2007 மார்ச் 21ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார்.
  • 2015 சூலை 27ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6]

அரசாங்கப் பதவிகள்

[தொகு]
  • 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
  • 2011 மே 16ஆம் நாள் முதல் 27 சூலை 2015 முடிய தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.
  • 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

விவாதங்கள்

[தொகு]

2011–2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலைகளுக்காக லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பல FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 2023 ஜூன் மாதம் அமலாக்க இயக்குனரகம் (ED) அவரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது.[7] 2024 செப்டம்பரில் நீண்டகால காவலுக்கு பின் உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.[8][9]

ஜாமீனுக்குப் பிறகு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டது நீதிமன்றத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது.[10] 2024 ஆகஸ்டில் சிறப்பு நீதிமன்றம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது.[11] 2025 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரணை தாமதத்தை குறித்துக் கேள்வி எழுப்பி, தமிழக அரசு முழுமையான வழக்கு மேலாண்மை திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.[12]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
  2. DIN (2018-12-14). "18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி". Dinamani. Retrieved 2024-04-08.
  3. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
  4. http://www.dinamalar.com/news_detail.asp?id=1305743
  5. "அரசியல் எதிரிகளை பழிவாங்க திமுகவில் இணைந்தாரா செந்தில்பாலாஜி?". கட்டுரை. இந்து தமிழ். 15 திசம்பர் 2018. Retrieved 15 திசம்பர் 2018.
  6. த இந்து மின்னிதழ் 2015 சூலை 27
  7. "Senthil Balaji's arrest by ED, judicial custody legal: Madras High Court". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-07-14. Retrieved 2025-08-30.
  8. WebDesk. "அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்". tamil.indianexpress.com. Retrieved 2025-08-30.
  9. Muruganandham, T. (2024-09-26). "After Supreme Court relief, Senthil Balaji all set to become Minister again". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-30.
  10. PTI (2025-04-23). "Supreme Court warns DMK Minister Senthil Balaji: Quit or lose bail". BusinessLine (in ஆங்கிலம்). Retrieved 2025-08-30.
  11. Staff, T. N. M. (2025-04-24). "Resign as minister or bail will be cancelled: Supreme Court to Senthil Balaji". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-08-30.
  12. "Supreme Court not to cancel Senthil Balaji's bail in ED case as DMK leader steps down as Tamil Nadu minister". The Indian Express (in ஆங்கிலம்). 2025-04-29. Retrieved 2025-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._செந்தில்பாலாஜி&oldid=4396479" இலிருந்து மீள்விக்கப்பட்டது