இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சின்னம்
தலைவர் இ.அகமது
செயலாளர் நாயகம் கே. எம். காதர் மொகிதீன்
நிறுவனர் நவாப் சலீம் முல்லாகான்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
இணையதளம்
http://www.indianunionmuslimleague.in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.

சுதந்திர இந்தியாவில்[தொகு]

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

தலைவர்கள்[தொகு]

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா ஆகியோர் பணியாற்றினர். தற்போது முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ.அகமது அகில இந்தியத் தலைவராக உள்ளார்.

தமிழகத்தில் அப்துல்சமது அப்துல் லத்தீப் ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் தமிழக தலைவராக உள்ளார்.

ஆதாரம்[தொகு]