தமிழரசுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழரசுக் கழக மாநாடு

தமிழரசுக் கழகம் ம. பொ. சிவஞானம் 1946 நவம்பர் 21 நாளில் சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது.[1] இந்திய விடுதலைக்கப் பிறகு தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து அவற்றுக்காகப் போராடும் நோக்கோடு இந்த அமைப்பு செயல்பட்டது. ம.பொ.சி இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார். சென்னை தமிழகத்திற்கு தலைநகராக ஆனதற்கு ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகமே காரணமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசுக்_கழகம்&oldid=2896779" இருந்து மீள்விக்கப்பட்டது