தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Jump to navigation
Jump to search
தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசியல் கட்சி ஆகும். முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி. வேல்முருகனால், இக்கட்சி 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் நாளன்று தொடங்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இருந்த கருத்து வேறுபாட்டினால் தி. வேல்முருகன் இக்கட்சியைத் தொடங்கினார்.[1][2] கட்சித் தலைமை அலுவலகம் சென்னை, போரூரில் அமைந்துள்ளது.