தமிழ்த் தேசியக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் தேசியக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழ்த் தேசியக் கட்சி 1962-64 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1962ல் ஈ. வெ. கி. சம்பத்தால் தொடங்கப்பட்டது. சம்பத் திராவிடர் கழகத் (திக) தலைவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் மூத்த சகோதரர் கிருஷ்ணசாமியின் மகனாவார். 1949ல் கா. ந. அண்ணாதுரை தி.க.விலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தொடங்கிய போது, சம்பத் அவருடன் இணைந்து கொண்டார். அடுத்த பன்னிரெண்டாண்டுகள் திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். பின்னர் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். 1962 சட்டமன்றத் தேர்தலில் போடியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோல்வியடைந்தது. 1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]