வார்ப்புரு பேச்சு:திராவிட அரசியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சிவாஜி கணேசன் தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்திருந்தாலும் அவர் தொடங்கிய தமிழக முன்னேற்ற முண்ணனி திராவிட இயக்கம் ஆகாது. அதேபோல விஜயகாந்த் தொடங்கியுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பெயரில் திராவிடம் என்னும் சொல் இருந்தாலும் இது திராவிட இயக்கம் ஆகாது. ஏனெனில், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான (1) இந்திய தேசிய எதிர்ப்பு (2) இந்துத்துவ எதிர்ப்பு (3) சாதிய எதிர்ப்பு (4) இந்தி எதிர்ப்பு (5) காந்திய எதிர்ப்பு ஆகிய எவையும் இவ்விரு கட்சிகளுக்குக் கிடையாது. எனவே இவ்விரு கட்சிகளின் பெயர்களையும் திராவிட அரசியல் என்னும் வார்ப்புருவிலிருந்து நீக்க வேண்டும்.--பொன்னிலவன் (பேச்சு) 07:21, 13 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]