தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு
தலைவர்சி. பசுபதி பாண்டியன்
தொடக்கம்சூன் 12 , 1993
தலைமையகம்தூத்துக்குடி மாவட்டம்
கொள்கைபள்ளர், தேவேந்திரர் சமூதாய முன்னேற்றத்திற்காக

'"தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு'" (ஆங்கிலம் : Devendra Kula Vellalar Federation) ஒரு தமிழ் நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் சி. பசுபதி பாண்டியன் ஆவார்

வரலாறு[தொகு]

இது 1993 ஆம் ஆண்டு , சூன் 12 அன்று சி. பசுபதி பாண்டியன் என்பவரால் துவங்கப்பட்டது. [1] இக் கட்சியானது கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புக் கட்சி போட்டியிட்டுள்ளது. மேலும் சனவரி 10 , 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் மறைவிற்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சார்ந்த பா. ராஜேந்திரன் மாநிலச் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.[2]

கட்சியின் கொள்கைகள்[தொகு]

  • தேவேந்திர குலத்தின் உட்பிரிவுகளான பள்ளர், குடும்பன், தேவேந்திர குலத்தார் காலாடி, பண்ணாடி, கடையன், வயக்காரன், வாதிரியான், மூப்பன்.இவை அனைத்தயும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை வழங்க வேண்டும்.
  • இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவக் கொண்டாட வேண்டும்.
  • மதுரையில் குறிப்பிட்ட இடத்தில் சுந்தரலிங்கத்தின் முழு உருவ சிலை திறக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளர்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உதயமான நாள்". India Retailing. பார்த்த நாள் 2012-08-13.
  2. "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் புதிய தலைவராக திருமதி சி.பார்வதி சண்முகசாமி தேர்வு". India Retailing. பார்த்த நாள் 2012-08-13.
  3. "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புப்பின் கொள்கைகள்". India Retailing. பார்த்த நாள் 2012-07-27.

வெளியிணைப்பு[தொகு]

தேவேந்திரகுல_வேளாளர்_கூட்டமைப்பு தேவேந்திரகுரல்