பாட்டாளி மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாட்டாளி மக்கள் கட்சி
தலைவர் கோ.க.மணி
தொடக்கம் 1989
தலைமையகம் தைலாபுரம், திண்டிவனம்
கொள்கை சமூகநீதி,சனநாயகம்,சமத்துவம்,மனித நேயம்./Populist
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (1998-2004)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004-2009)
மூன்றாவது அணி (2009-2010)
கட்சிக்கொடி
PMK.svg

பாட்டாளி மக்கள் கட்சி (பா. ம. க.) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1990களில்,டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை, இக்கட்சி தமிழ்நாடு சட்ட மன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26,2009 வரை இருந்தது [1]. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தார்.

ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது [2][3]

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[4][5]. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

சின்னம்[தொகு]

இக்கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[6] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால் அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. [7] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும் 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வாக்குகள், தொகுதிகள்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்கு சதவீதம்
1989 9வது மக்களவை 1,536,350 0
1991 10வது சட்டசபை 1,452,982 1
1991 10வது மக்களவை 1,269,690 0
1996 11வது சட்டசபை 1,042,333 4
1996 11வது மக்களவை 552,118 0
1998 12வது மக்களவை 1,548,976 4
1999 13வது மக்களவை 2,236,821 5
2001 12வது சட்டசபை 1,557,500 20
2004 14வது மக்களவை 1,927,367 6
2006 13வது சட்டசபை 1,863,749 18
2009 15வது மக்களவை 1,944,619 0
2011 14வது சட்டசபை 1,927,783 3 5.23 %
2016 15வது சட்டசபை 2,300,775 0 5.3 %

புதுச்சேரி[தொகு]

வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள்
1989 9வது மக்களவை 25,021 0
1991 8வது சட்டசபை 11,402 0
1991 10வது மக்களவை 13,375 0
1996 9வது சட்டசபை 11,544 1
1996 11வது மக்களவை 19,792 0
1999 13வது மக்களவை 140,920 0
2001 10வது சட்டசபை 36,788 0
2004 14வது மக்களவை 241,653 1
2006 11வது சட்டசபை 23,426 2
2009 15வது மக்களவை 208,619 0

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
  2. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
  3. http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html
  4. http://thatstamil.oneindia.in/news/2009/03/28/tn-jaya-announces-pmks-constituencies.html
  5. http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/pmk-candidates.html
  6. "BSP gets recognition as national party". ரி டிப். பார்த்த நாள் 28 மார்ச் 2016.
  7. "PMK allotted ‘mango’ symbol for 2016 polls". த இந்து. பார்த்த நாள் 28 மார்ச் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_மக்கள்_கட்சி&oldid=2262862" இருந்து மீள்விக்கப்பட்டது