திருக்குறள், ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன மேலும்...
அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு (கி.மு. 387) என்பது பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அமைதி உடன்பாடாகும். இது பண்டைய கிரேக்கத்தில் கொரிந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த ஒப்பந்தம் பழங்காலத்தில் மிகவும் பொதுவாக மன்னரின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இது பாரசீக செல்வாக்கின் ஆழத்தைக் காட்டுகிறது. ஏனெனில், பாரசீகர்கள் கொடுத்த தங்கமே முந்தைய போருக்கு உந்து விசையாக இருந்தது. முதல் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தத்தைப் போன்றே இந்த ஒப்பந்தமும் ஒரு பொது அமைதி ஒப்பந்தத்தின் ஒரு வடிவமாகும். மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,74,522 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.