உள்ளடக்கத்துக்குச் செல்

தைவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனக் குடியரசு
中華民國
ஜொங் ஹ்வா மின் க்வோ
கொடி of தாய்வானின்
கொடி
சின்னம் of தாய்வானின்
சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: "சீனக் குடியரசின் நாட்டு வணக்கம்"
தாய்வானின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
தாய்பெய்
ஆட்சி மொழி(கள்)மண்டரின்
அரசாங்கம்அரை-அதிபர் முறை
• அதிபர்
ச்சென் சுயி-பியான்
• உப-அதிபர்
அனத்தே லூ
• பிரதமர்
சூ ட்செங் ச்சாங்
நிறுவுதல் 
சின்கய் புரட்சி
• அறிவிப்பு
அக்டோபர் 10, 1911
• அமைப்பு
ஜனவரி 1, 1912
• தாய்வானுக்கு செல்லுதல்
டிசம்பர் 7, 1949
பரப்பு
• மொத்தம்
35,980 km2 (13,890 sq mi) (137வது)
• நீர் (%)
2.8
மக்கள் தொகை
• June 2006 மதிப்பிடு
22,814,636 (47th 2)
• 2013 கணக்கெடுப்பு
மொத்தம் 23,340,136

ஆண்கள்: 11,678,151

பெண்கள்: 11,661,985
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$631.2 பில்லியன் (16வது)
• தலைவிகிதம்
$27,600 (24வது)
மமேசு (2003)0.910
அதியுயர் · 25வது 2
நாணயம்புதிய தாய்வான் டொலர் (NT$) (TWD)
நேர வலயம்ஒ.அ.நே+8 (சுங்கியான் சீர் நேரம்)
• கோடை (ப.சே.நே.)
இல்லை
அழைப்புக்குறி886
இணையக் குறி.tw
1.) 2005 தரவுகளின் படியானது.
2.) சீனக் குடியரசின் அரசியல் நிலை காரணமாக ஐநா மனித வளர்ச்சி சுட்டெண்ணை கணிக்க வில்லை. எனினும் சீனக் குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது.[1]
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

தைவான் அல்லது தாய்வான் (Taiwan), அதிகாரபூர்வமாக சீனக் குடியரசு (Republic of China), கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தைவான் என்றே அழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் தாய்பெய் ஆகும்.[1]

1970களின் பின்னர் "சீனா" என்பது சீன மக்கள் குடியரசைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழைக்கப்படலாயிற்று. அண்டை நாடுகளாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தாய்பெய் உள்ளது.

வரலாறு

[தொகு]

தைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.1624 ஆம் ஆண்டு சீலாண்டியா என்ற கோட்டையை டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தார் கட்டினார்கள்.1642 ஆம் ஆண்டு வரை வலிமையாக திகழ்ந்த இக்கோட்டை பின்னர் வீழ்ந்தது.பின்னர் 1683 இல் சீனாவின் மிங் வம்சத்தை சேர்ந்த செங் ஜெங்சியோன் என்பவரால் தைவான் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.அதன் பின்னர் 1891-94 வரை நடந்த முதலாம் சீன ஜப்பானிய போரில் கின் வம்சம் தோல்வியடைந்ததை அடுத்து தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. சீனக் குடியரசானது 1912 இல் கடைசி சீன அரசவம்சமான கின் அரச வம்சத்தை நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது.ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் யப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. 1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி 1949இல் பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே 1970கள் வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது. 1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது. சீன குடியரசு அரசாங்கம் சீனா மற்றும் மங்கோலியா எல்லைபகுதிகள், தைவான் ஆகியவற்றை சொந்தம் கொண்டாடி வந்தாலும் 1992 ல் இருந்து சீனாவினை திரும்பபெறும் முடிவை மாற்றிக்கொண்டது. 1928 முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான சனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி 1996 இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார்.

பொருளாதாரம்

[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது.தைவான் "நான்கு ஆசிய புலிகள்"' எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவான் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம்,பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

நில அமைப்பு

[தொகு]
தைவானின் செயற்கைகோள் புகைப்படம்

தைவான் தீவு சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து 180 கிலோமீட்டர் (110 மைல்) தூரத்தில் தைவான் நீரிணை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பகுதியில் உள்ளது.தன எல்லைகளாக வடக்கில் கிழக்கு சீன கடல், கிழக்கில் பிலிப்பைன் கடல், தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தென் சீன கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தைவான் தீவின் மொத்த பரப்பளவு 35,883 சதுர கிமீ (13,855 சதுரமைல்) ஆகும்.

தைவான் உயர்ந்த பகுதி 3952 மீட்டர் (12,966 அடி) உயரம் உள்ள யூ ஷான் (ஜேட் மலை) மற்றும் 3500 மீ (11,500 அடி) க்குள் மேற்பட்ட உயரம் கொண்ட இதர ஐந்து சிகரங்களையும் கொண்டு உலகின் நான்காவது மிக உயர்ந்த தீவாக உள்ளது.

தைவானை உரிமை கோரும் சீனா

[தொகு]

பல்லாண்டுகளாக தைவான் நிலப்பரப்பை சீனா தனது நாட்டின் பரப்பு என உரிமை கோரி வருகிறது. [2]இதனை தைவான் எதிர்க்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taiwan, self-governing island, Asia
  2. தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு "போர் என்று பொருள்" - சீனா கடும் எச்சரிக்கை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவான்&oldid=3434593" இலிருந்து மீள்விக்கப்பட்டது