ஆட்சி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆட்சி மொழி அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.

பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சி_மொழி&oldid=1914338" இருந்து மீள்விக்கப்பட்டது