விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறுக்கு வழி:
WP:HD
WP:HELP

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

தொகுப்பு

தொகுப்புகள்


1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

63 Nayanmar[தொகு]

Dear Sir,

I would like to know the Drama peoples who is doing 63 Nayanmar Dramas. I think some peoples called Muthu samy trust from Chennai did 63 Nayanmar Dramas. It was really very interesting and we would like to do at our "Tirupur Shaiva Siddhanda Sabai".

If you have any contact who is doing as per Peruya puranam way, pls lt me know. Thanks.

Best Regards, Subra maniam


வணக்கம் என் பெயரை Aathira mullai என்று நான் பதிவு செய்தேன். ஆனால் விக்கி தானாக Aathira-tawiki என்று பெயரை மாற்றியுள்ளது. இது ஏன்? என் பெயரை எப்படி மாற்றுவது?

என் கண்டுபிடிப்பை விக்கிபீடியாவில் நான் எப்படி பதிவு செய்வது..?[தொகு]

அய்யா வணக்கம், கடந்த 10 நாட்களுக்கு முன் என் ஊர் ஆறகளூரில் வணிக குழு கல்வெட்டை ஒன்று கண்டுபிடித்தேன்..மேலும் அக்கல்வெட்டை பூமியிலிருந்து தோண்டி மேலும் ஆய்வு செய்தபோது 12 ஆம் நூற்றாண்டில் அந்த இடத்தில் ஒரு சமணகோயில் ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தேன்..அந்த தகவல்கள் தினமணி,தினகரன் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.அந்த செய்தியை என் வலைப்பக்கத்திலும் பதிவு செய்தேன்..அதே தகவல்களை விக்கி பீடியாவிலும் பதிவு செய்தேன்...தகவலுக்கு ஆதாரமாக..தினமணியில் செய்தி வந்ததின் இணைப்பு மற்றும் என் வலைப்பூவின் தொடுப்பையும் கொடுத்தேன்...ஆனால் காப்பி பேஸ்ட் மற்றும் காப்புரிமை என சொல்லி நீக்கப்பட்டுள்ளது..

 கேள்வி 1. விக்கிபீடியாவில் என் கண்டுபிடிப்பை எழுத இங்கு முழுமையாக புதிதாக செய்தியை தட்டச்சு செய்ய வேண்டுமா..?
     2. என் பிளாக்கில் நான் எழுதியதை இங்கு காப்பி செய்ய கூடாதா..?
     3 .ஆதாரத்துக்கு பத்திரிக்கை செய்தியின் லிங்,வலைப்பூவின் லிங்கை கொடுக்கலாமா..?
      4.புகைப்படங்களை இதில் எப்படி பதிவு செய்வது..?எத்தனை புகைப்படங்கள் பதிவு செய்யலாம்..?
     5. ஆறகளூர் பற்றி ஆய்வு செய்து நிறைய தகவல்கள் வைத்துள்ளேன்..எவ்வளவு தகவல்கள் பதிவு செய்யலாம் என்பதற்கு வரையரை உள்ளதா..?
      6. நான் விக்கிபீடியாவுக்கு புதியவன்..தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்
     நன்றி
               அன்புடன்
         ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
வணக்கம் பொன்.வெங்கடேசன் ! உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பை வெகுவாக வரவேற்கிறோம். இருப்பினும் விக்கிப்பீடியா சில கொள்கைகளுக்கேற்ப செயல்படுகின்றது. இவற்றை நீங்கள் உள்வாங்கிப் பங்களித்தால் இத்தகைய ஏமாற்றங்கள் நிகழாது. இதற்கு உதவியாக தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
 1. முதலாவதாக இது அறிமுகமில்லாத மக்களால் தொகுக்கப்படும் (crowd sourced) கலைக்களஞ்சியம். இங்கு பதிப்பாசிரியர் என்று யாரும் கிடையாது. இதனால் இங்கு முதன்முதலில் கண்டறிந்த (Original Research) ஆய்வுகளை பதிய முடியாது. உங்களைப் போன்ற பிற அறிஞர்களால் மீளாய்வு செய்யப்பட்ட (peer reviewed) இரண்டாம்நிலைத் தரவுகளைக் கொண்டே இங்கு உள்ளடக்கம் உருவாக்கப்படுகின்றது. ஆய்வு குறித்த ஐயங்களை நீக்கவே இத்தகைய கொள்கை உள்ளது.
 2. பிளாகில் எழுதியதை காப்பி செய்யக்கூடாது... வலைப்பதிவுகள் உங்களுக்கு உரிமையானவை மட்டுமின்றி அவை வலையேற்றப்படும் வலைத்தளங்களுக்கும் உரிமை உள்ளது. விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் கிரியேட்டிவ் காமன்சு என்ற உரிமையுடன் வெளியிடப்படுகின்றன. இதற்கு முரணாக அவை அமைகின்றன.
 3. நீங்கள் எழுதும், இரண்டாம் நிலைதரவு கொண்ட கட்டுரைகளுக்கு பத்திரிகை/இணைய சான்றுகள் கொடுக்கலாம்.
 4. புகைப்படங்கள் எவ்வாறு தரவேற்றுவது, கட்டுரைகளில் பயன்படுத்துவது குறித்து விக்கிப்பீடியா கட்டுரைகள் உள்ளன.
விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும், விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்
 1. நீங்கள் உங்கள் சொந்த ஆய்வுகளை (அவை நியாயமானவையாக இருந்தாலும்) எழுத முடியாது. சுட்டுதல்களுடன் கட்டுரைகள் எழுத எல்லைகள் எதுவுமில்லை.
 2. விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே உள்ள கட்டுரைகளை கவனியுங்கள்..ஆலமரத்தடியிலும் பிற உரையாடல் பக்கங்களிலும் நிகழும் உரையாடல்களை உள்வாங்குங்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் வரலாற்றைக் காட்டவும் என்ற tab உள்ளது. இதில் இரு பதிப்புகளுகிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனியுங்கள். இதன்மூலம் கட்டுரையிலுள்ள பிழைகள் எவ்வாறு திருத்தப்படுகின்றன என்ற விவரம் தெரிய வரும்.

விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம். உங்கள் ஐயங்களை குறிப்பிட்டுக் கேட்டால் மறுமொழி இடுவர். இங்கு பங்களிக்கும் அனைவரும் தன்னார்வலர்களே. அவ்வப்போது நடைபெறும் பயிற்சிப் பட்டறைகளும் உங்களுக்கு உதவும்.−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உதவி தேவை[தொகு]

எனக்கு இந்த எச்சரிக்கை வருகின்றது.. எவ்வாறு இதனை எதிர்கொள்வது ?

Information: You are importing User:Lupin/popups.js into your common.js or <skin>.js!

This script is unmaintained. Please remove this inclusion and enable the Navigation popups Gadget in the preferences of your account instead.

−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இந்தக் கருவியைத் தற்போது இற்றைப்படுத்துவதில்லை. ஆயினும், சிக்கல்களின்றி வேலை செய்கின்றது. ஆதலால், எச்சரிக்கைச் செய்தியை நீக்கியுள்ளேன். எச்சரிக்கைச் செய்தி இடைஞ்சலாகவும் இருக்கிறது. மீடியாவிக்கிப் பதிப்பு மாற்றங்களுடன் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் மீடியாவிக்கி:Gadget-popups.js பக்கத்தை நீக்கி விடலாம். திருத்தங்களை மேற்கொண்ட பின் மீண்டும் செயற்படுத்தலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தக் கருவியை நான் தொடர்ந்து கவனிக்கிறேன். குறிப்பு: Hovercardsஐச் செயற்படுத்தியிருந்தால் இக்கருவி வேலை செய்யாது. --மதனாகரன் (பேச்சு) 15:45, 3 அக்டோபர் 2015 (UTC)
நன்றி மதனாகரன் !--மணியன் (பேச்சு) 03:15, 4 அக்டோபர் 2015 (UTC)
சார், துத்தநாகப் புரோட்டினேட்டு என்ற கட்டுரையின் பகுப்பைச் சற்று கவனிக்கவும். --கி.மூர்த்தி 14:08, 22 அக்டோபர் 2015 (UTC)

நான் ஒரு கட்டுரையை எழுதி உள்ளேன் அதில் சில குழப்பம் சரி செய்ய உதவுங்கள்[தொகு]

நான் வேலநாட்டி சோடர்கள் என்ற கட்டுரையை தொடங்கி உள்ளேன் அதில் இந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. என்று கூறியுள்ளார்கள் இந்த கட்டுரையை சரியான விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள் நன்றி

Yes check.svgY ஆயிற்று--Kanags \உரையாடுக 11:13, 23 அக்டோபர் 2015 (UTC)

தரவு அமைத்து தாருங்கள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசிய மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன்.Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 10:15, 3 நவம்பர் 2015 (UTC)

உதவுங்கள்[தொகு]

நான் அதிகம் படிக்காதவன் புதுபயணன், நான் மணல்தொட்டியில் எழுதிவருகிறேன்,எனக்கு படிமத்தோடுகூடிய தகவல் பெட்டகம் (வார்ப்புரு) எப்படி அமைப்பதென்று தெரியவில்லை தயவுகூர்ந்து இந்த புதியவனுக்கு ஒத்தாசை ஈன்றுதுவுங்கள்.நன்றி(பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி

மொழிப்பெயர்ப்பு[தொகு]

ஆங்கிலத்தில் tiruvannamalai region என்றக் கட்டுரை உள்ளது. இதில் உள்ள region என்ற சொல்லை மண்டலம் என்று எழுதலாமா ? பகுதி எனலாமா??

ரோஹித் (பேச்சு)

உதவிக்கு கீழே உள்ள தமிழ் விக்சனரி உரலியை பாருங்கள்.

எந்த வார்த்தைக்கு மொழிபெயர்ப்புத் தேவைபடுகிறதோ அதைச் சொடுக்கினால் நேரடியாக தமிழ் விக்சனரிப் பக்கத்திற்கு செல்வீர்கள்.--நந்தகுமார் (பேச்சு) 09:21, 3 நவம்பர் 2015 (UTC)

நன்றி

ரோஹித் (பேச்சு) 12:44, 3 நவம்பர் 2015 (UTC)

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உதவுங்கள் .....[தொகு]

தமிழ் பக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தேவையான வழிகாட்டுதல்களை தரவும். இதற்கு முன் நான் மொழி பெயர்த்த சில பக்கங்கள் பிற விக்கி பங்களிப்பாளர்களால் நீக்கப்பட்டதாய் செய்தி அறிந்தேன். இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க நான் எவ்வாறு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என வழிகாட்டவும் ....

நன்றி ......

நஞ்சராயநகர் மக்கள் வாழ்க்கை[தொகு]

இந்த கட்டுரை எவ்வறு பதிவு செய்வது