விக்கிப்பீடியா:ஆலமரத்தடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலமரத்தடிக்கு வருக! ஆலமரத்தடிப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நுட்ப விடயங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகள், கலைச்சொற்கள், உதவிக் குறிப்புகள் போன்றவை உரையாடப் பயன்படுகின்றன. நீங்களும் பொருத்தமான கீழ்கண்ட ஒரு கிளையைத் தேர்தெடுத்து உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கங்களில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறுக்கு வழி:
WP:VP
WP:AM
ஆலமரத்தடியின் கிளைகள்
Gaim send-im.svgDialog-information on.svg
ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
பொது உரையாடல்கள். புதிய எண்ணங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள்.
Vista-file-manager.png
காப்பகம்

Preferences-system.svg
தொழினுட்பம்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும்.

Edit-find-replace.svg
கொள்கை
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
கொள்கைககளும் வழிகாட்டல்களும் தொடர்பான உரையாடல்கள், முன்மொழிவுகளுக்கான களம்.

Crystal Project Agt announcements.png
அறிவிப்புகள்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
விக்கிப்பீடியா தொடர்பான தகவல்களை, அறிவித்தல்களை இங்கே பகிருங்கள்.

ஒத்தாசை
ஒத்தாசை
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
விக்கியைத் தொகுப்பதில், பயன்படுத்துவதில், பொருத்தமான கட்டுரைகளை எழுதுவதில் சிக்கல்கள் இருந்தால் இங்கே கேளுங்கள்.
உசாத்துணைப் பக்கம் | பயிற்சி | சமுதாய வலைவாசல் | நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் | தரக் கண்காணிப்பு | தானியங்கி வேண்டுகோள்கள் | நீக்கலுக்கான வாக்கெடுப்பு

Proposed optional changes to Terms of Use amendment[தொகு]

Hello all, in response to some community comments in the discussion on the amendment to the Terms of Use on undisclosed paid editing, we have prepared two optional changes. Please read about these optional changes on Meta wiki and share your comments. If you can (and this is a non english project), please translate this announcement. Thanks! Slaporte (WMF) 21:56, 13 மார்ச் 2014 (UTC)

கையெழுத்து[தொகு]

கையெழுத்து பற்றிய (எப்படி அமைய வேண்டும்) விளக்கம் இங்கு போதிய அளவில் இல்லை. ஆ.வி.யில் அது பற்றி போதிய அளவில் அறியலாம். குறிப்பாக, படங்கள் கையெழுத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாய அறிவுறுத்தல். அங்கு உள்ளதை அப்படியே இங்கு பிரிதி செய்துள்ளேன்.

Images of any kind must not be used in signatures for the following reasons:

 • They are an unnecessary drain on server resources, and could cause server slowdown
 • A new image can be uploaded in place of the one you chose, making your signature a target for possible vandalism and denial-of-service attacks
 • They make pages more difficult to read and scan
 • They make it more difficult to copy text from a page
 • They are potentially distracting from the actual content
 • Images do not scale with the text, making the lines with images higher than those without them
 • They clutter up the "file links" list on the respective image's page every time one signs on a different talk page
 • Images in signatures give undue prominence to a given user's contribution

எனவே, தயவு செய்து கையெழுத்தில் படங்களைப் பயன்படுத்துபவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --AntonTalk 02:23, 14 மார்ச் 2014 (UTC)

கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் நீக்க வேண்டுகோள்[தொகு]

கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்டு, குப்பையாக தேங்கியிருக்கும் கட்டுரைகள் நீக்க வேண்டும். இதற்கு பிறபயனர்களின் கருத்துகள் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:20, 17 மார்ச் 2014 (UTC)

 1. Symbol oppose vote.svg எதிர்ப்பு. இவற்றை மேம்படுத்துவதற்கு ஒரு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:27, 17 மார்ச் 2014 (UTC)
 2. அவைகள் கட்டுரைகளை அல்ல. மின்குப்பைகள். அவைகளை இன்றளவும் கட்டுரைப்பகுதியில் பேணப்படுவது, பொருத்தமாக எனக்குப்படவில்லை. அவைகளை அப்படியே பேச்சுப்பக்கத்திற்கு மாற்றி விட்டு, படங்கள் போன்ற தேவையானவைகளை கட்டுரைப்பகுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் ஆழ்ந்த அனுபவம் உள்ள சுந்தரும், இரவியும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 07:49, 17 மார்ச் 2014 (UTC)
 3. அவற்றை ஓர் திட்டத்தின் மூலம் மேம்படுத்தல்/குறுக்குதல்/நீக்குதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுமார் 1000 கட்டுரைகள் உள்ளன என எண்ணுகிறேன்.
  1. இவற்றில் சிலவற்றிற்கு பிற கட்டுரைகளிலிருந்து உள்ளிணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைத் தனியாக கவனிக்க வேண்டும்.
  2. சில பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன; இந்த மேம்படுத்தலை முழுமையாக்க வேண்டும் அல்லது கட்டுரையை குறுக்க வேண்டும்.
  3. சில தமிழ் விக்கிக்கு மிகத் தேவையான தலைப்புகளிலும் கூகுள் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றையும் தரமுயர்த்த தனித் திட்டம் வகுக்க வேண்டும்.
  4. முற்றிலும் மேம்படுத்த இயலாத, தமிழ் விக்கிக்கு உடனடியாக தேவையற்ற, பிற கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புக் கொடுக்கப்படாத கட்டுரைகளை இனம் கண்டு நீக்கலாம்.--மணியன் (பேச்சு) 08:42, 17 மார்ச் 2014 (UTC)
 4. மேம்படுத்த வாய்ப்பே இல்லாத கட்டுரைகளை நீக்கலாம். ஆனால் அத்தலைப்பில் ஐந்து ஆறு வரியில் குறுங்கட்டுரையாவது உருவாக்கி விட்டு நீக்கலாம் என்பது எனது கருத்து. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:53, 17 மார்ச் 2014 (UTC)
 5. மேம்படுத்தக் கூடியவற்றை சரிசெய்வதே உகந்தது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:44, 17 மார்ச் 2014 (UTC)
 6. பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் தள அறிவிப்பு தோற்றம் மூலம் கட்டுரைகளை மேம்படுத்த மீண்டும் வேண்டுகோள் விடுக்கலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 10:06, 17 மார்ச் 2014 (UTC)
 7. மேலே கூகிள் கட்டுரைகளை “மின்குப்பைகள்” என்று தகவலுழவன் கூறுவதோடு எனக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் அக்கட்டுரைகளை நல்ல தமிழில் மாற்றியமைப்பதும் கடினமான செயல் என்பதையும் உணர்கின்றேன். எனவே, அனைத்து கூகிள் கட்டுரைகளையும் ஒரே குட்டையில் உள்ளனவாகக் கொள்ளாமல், ஒவ்வொன்றையும் அதன் தராதரம் கணித்து முறையாக அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். சில கட்டுரைகளை முற்றிலுமாகச் சரிப்படுத்த இயலுமென்றால் அவ்வாறு சரிப்படுத்த வேண்டும். சில கட்டுரைகளைக் குறுங்கட்டுரை நிலைக்குச் சுருக்க வேண்டும். சிலவற்றைத் தேவையானால் நீக்க வேண்டும். என்றாலும், எந்தவொரு கட்டுரையையும் பயனர்கள் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப நீக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலில் உரையாடல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துவிட்டு, பிற பயனர்களின் கருத்துகளையும் அறிந்து செயல்படுவது விக்கி நற்பண்புகளுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 13:53, 17 மார்ச் 2014 (UTC)
 8. திட்டம் 2009ல் தொடங்கி 2014 வந்து விட்டது. இனிமேலும் இவற்றைச் சீர்திருத்த யாரும் பிறந்து வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வேண்டுமானால், இவற்றைச் சீர்திருத்துவோருக்கு சென்னை சத்தியம் திரையரங்கு அருகில் உள்ள 10 ஏக்கர் தென்னந்தோப்பை எழுதி வைப்பதாக ஒரு பரிசுப் போட்டி அறிவித்துப் பார்க்கலாம் :) கட்டுரைகளை நீக்கக் கூடாது என்று இதற்கு முன்பும் பலரும் கூறி உள்ளோம். ஆனால், சோடாபாட்டில் போன்ற ஒரு சிலரைத் தவிர யாரும் பொறுப்பு கட்டுரைகளை மேம்படுத்த முனையவில்லை. இனியும் கட்டுரைகளை நீக்கக் கூடாது என்போர் தெளிவான கால எல்லையோடு கூடிய திட்டத்தை முன்வைத்து இக்கட்டுரைகளின் தரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய பரிந்துரை: 2016 முடியும் வரை காலம் தரலாம். அதற்குப் பிறகும் முன்னேற்றம் இல்லை என்றால், ஒவ்வொரு கட்டுரையாக அலசி, தரமற்றவற்றைக் குறுங்கட்டுரை அளவுக்குச் சுருக்கி விட்டு எஞ்சிய உரையை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தலாம். பல கட்டுரைகளில் பகுதியளவிலேனும் முன்னேற்றுவதற்கான உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக கண்மூடித்தனமாக நீக்குவது சரியாக இருக்காது.--இரவி (பேச்சு) 21:00, 17 மார்ச் 2014 (UTC)
 9. எனக்கு வாகையர் பட்டத்துடன் சென்னை சத்தியம் திரையரங்கு அருகில் உள்ள 10 ஏக்கர் தென்னந்தோப்பும் வேண்டும் :) கூகுள் கட்டுரைகளை உரைதிருத்த ஆர்வமாக உள்ளேன். ஆனால் கட்டுரைப்போட்டி நடந்துகொண்டிருப்பதால் தற்போது உரைதிருத்த முடியாதுள்ளது. முடிந்த பின்னர் விரிவாக்கக் காத்திருக்கின்றேன். கட்டுரைப் போட்டியில் gap விட்டா ஆப்பு ஆயிடும்.--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:57, 18 மார்ச் 2014 (UTC)
 10. அப்படிஎன்றால் பள்ளி மாணவர்கள் சேர்ந்து அதில் உதவலாம்!... ஆர் ஆர் வர்ரிங்க?? :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:19, 18 மார்ச் 2014 (UTC)
 11. ஸ்ரீகர்சன், உங்களுடைய ஆர்வத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி, இக்கட்டுரைகளை மேம்படுத்துவது குறித்த நடைமுறைச் சிக்கல்கள் பற்றி கூறுவது என் கடமையாகிறது. 2006-ம் ஆண்டு மொழிபெயர்கப்பட்ட கட்டுரைகளில் சுமார் 2000 கட்டுரைகள் தற்போது குப்பைகளாக உள்ளன. குப்பைகள் என்று சொல்லுவதற்கான முதல் காரணம் அவை இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகும். கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரை உருவாக்கியதின் நோக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் அவசியமாக இருக்க வேண்டிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்து இயந்திர மொழிபெயர்ப்பின் மூலமாக உருவாக்கப்பட்டவை, அப்படியே மேம்படுத்துவதற்கும் அதிக காலம் தேவைப்படுகிறது. தற்போது இத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரைகள் இருப்பதால் புதியதாக தொடங்க நினைப்பவர்கள் தயங்குகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், இந்த 2000 கட்டுரைகளை தவிர்த்து பல்லாயிரம் உயர்தரமான கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம், ஒருவேளை கட்டுரைகள் நீக்கப்பட்டால் புதியதாக எழுதுபவர்கள் நன்முறையில் சிரமமின்றி எழுதலாம். இரவி சொல்வது போல 2016 வரை பொறுத்திருக்க முடியாது ;) வேண்டுமானால் இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறேன். :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:29, 19 மார்ச் 2014 (UTC)
 12. கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைகள் அனைத்தையும் ஒரேயடியாக நீக்குவது தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது.
  1. அனைத்துமே மின்குப்பைகள் என்று கொள்ள முடியாது. பல கட்டுரைகள் அவசியமானவையாகவும், தகவல் செறிந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால் பிழைகள் அதிகம் இருப்பதனாலும், மிக நீண்ட கட்டுரைகளாக இருப்பதனாலும், மேம்படுத்த ஆர்வம் இருப்பினும், அவற்றை மேம்படுத்துமளவிற்கு எவருக்கும் பொறுமையும், நேரமும் இல்லாமல் இருக்கின்றதென்பதே உண்மை. எனவே அவசியமான அந்தக் கட்டுரைகளை முற்றாக நீக்குவது சரியல்ல.
  2. அவற்றில் சில கட்டுரைகளில் நான் முதல் பத்தியை மட்டும் மேம்படுத்தியிருக்கின்றேன். வேறு சிலவற்றில் காணக் கிடைக்கும் திருத்தங்களைச் செய்திருக்கின்றேன். வேறு கட்டுரைக்கான உள்ளிணைப்பை இணைக்கும்போது, இப்படியான ஒரு கட்டுரையைப் பார்க்க நேர்கையில் அவ்வாறு செய்திருக்கின்றேன். இவ்வாறு வேறும் பலர் செதிருக்கின்றார்கள் என்பதனையும் அறிவேன். எனவே கட்டுரைகளை முற்றாக நீக்கினால் நமது உழைப்பும் சேர்ந்தே வீணாகும் என்பதனையும் சிந்திக்க வேண்டும். வேண்டுமானால் முக்கியமான, அவசியமான தகவல்களை முதல் பத்தியில் இணைத்து ஒரு குறுங்கட்டுரையாக ஆக்கிவிட்டு, மிகுதியை நீக்கி விடலாம். அதாவது கட்டுரையை முற்றாக நீக்காமல், முக்கியமான சில தகவல்கள் சேர்க்கப்பட்ட பின்னர், மிகுதியாக இருக்கும் பகுதியை நீக்கிவிடலாம்.
  3. ஓரிரு கூகிள் கட்டுரைகளை முழுமையான மேம்படுத்திய பின்னர் கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைக்கான வார்ப்புருவை நீக்கியதாக நினைவு. கூகிள் கட்டுரைகளை குறுங்கட்டுரையாக்கிவிட்டு, மிகுதியை நீக்கிவிடலாம் என்றால், அதனைச் செய்வது இன்னும் இலகுவாக இருக்குமென நினைக்கின்றேன். ஆனால் இதுபற்றி பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு மற்றவர் கருத்தறிந்த பின்னர் நீக்குவது நல்லது. எந்த ஒரு கூகிள் கட்டுரையையும் நீக்க முன்னர், குறிப்பிட்ட தலைப்பில் ஒரு குறுங்கட்டுரையாவது உருவாக்கிவிட்டு, பின்னர் பழைய கட்டுரையை நீக்கலாம். "அழிப்பது இலகு. ஆக்குவதுதான் கடினம்" என்பதை நினைவில் கொண்டோம் என்றால் நல்லது. நானே சில கட்டுரைகளைப் பார்த்தபோது, பல தடவைகள் இந்தக் கூகிள் கட்டுரையை நீக்கிவிட்டு, புதிதாக நாமே ஒரு கட்டுரையை எழுதி விடலாமா என்று எண்ணியதுண்டு. ஆனால், அத்தனை தகவல் செறிவுடன் கட்டுரை ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் அதற்கு அதிக நேரமும், உழைப்பும் தேவை என்பதனை மறுக்க முடியாது.
  4. //தற்போது இத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரைகள் இருப்பதால் புதியதாகத் தொடங்க நினைப்பவர்கள் தயங்குகின்றனர்.////ஒருவேளை கட்டுரைகள் நீக்கப்பட்டால் புதியதாக எழுதுபவர்கள் நன்முறையில் சிரமமின்றி எழுதலாம்.// அப்படிப் புதிதாக எழுத நினைப்பவர்கள், மேலே சிலர் கூறியிருப்பதுபோல், குறிப்பிட்ட கட்டுரையை சிறிதளவாவது மேம்படுத்தி குறுங்கட்டுரையாக்கி விட்டு, மிகுதியாக இருப்பவற்றை நீக்கிய பின்னர் கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைக்கான வார்ப்புருவை நீக்கலாம். அல்லது அதே தலைப்பில் புதிய ஒரு கட்டுரையை ஆக்கிவிட்டு (ஒரு பரீட்சார்த்தப் பக்கத்தை உருவாக்கிவிட்டு) பின்னர் இந்தக் கட்டுரையை நீக்கி, தாம் தொடங்கிய பக்கத்தை கட்டுரையாக்கிக் கொள்ளலாம். எப்படியிருப்பினும், ஒரு கட்டுரையை நீக்குவதற்கு முன்னர், அதற்கான ஒரு கட்டுரையை உருவாக்கி விட்டு நீக்குவதே சிறந்தது. கூகிள் மொழியாக்கக் கட்டுரைகளுக்கான தலைப்பில் புதிய கட்டுரை ஆக்க விரும்புகின்றவர்களுக்கு இதற்கான வழிகாட்டலை, ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும், ஒரு வார்ப்புரு மூலம் தந்து விடலாம். மேலும் ஒரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்து, அது கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பை மட்டும்தான் கொண்டதா, ஏனைய பயனர்களின் பங்களிப்பையும் கொண்டதா என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி வேறு பயனர்களின் பங்களிப்பும் இருப்பின், அவை புதிய சிறந்த தகவல்களைக் கொண்டிருக்கவோ, அல்லது சிறந்த திருத்தங்களைக் கொண்டிருக்கவோ கூடும். எனவே கட்டுரை நீக்கத்திற்குப் பதிலாக புதிய கட்டுரை ஆக்கத்தின் பின்னர், கட்டுரை இணைப்பை மேற்கொள்ளலாம்.
  5. முற்றாக மேம்படுத்த முடியாத கட்டுரையாகவும், அவசியமற்ற கட்டுரையாகவும் கருதப்படுமாயின், பேச்சுப் பக்கத்தில் இதுபற்றிக் கூறி, ஏனையோரின் கருத்தறிந்த பின்னர் நீக்கலாம். அப்படி நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கென ஒரு பகுப்பை ஏற்படுத்தினால், இந்தத் திட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து கருத்துக்கூற உதவும்.
  6. //வேண்டுமானால் இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறேன்//. இப்படிக் கால அவகாசம் வைத்துச் செய்வது கடினம் என்றே நினைக்கின்றேன். விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்ய எவ்வளவு ஆர்வம் இருப்பினும், நேரம் கிடைப்பதைப் பொறுத்துத்தான் எவராலும் வேலை செய்ய முடியும். இத்தனை கட்டுரைகளையும் ஒரே தடவையில் பார்த்து, அனைத்தையும் உடனடியாகச் சரிசெய்வது முடியுமா என்பது தெரியாது. எனவே இதனைச் சிறிது சிறிதாகவே செய்யலாம் என்பது எனது கருத்து. இப்படியான தன்னார்வப் பணிகளில் திட்டம் போடுவது, கால எல்லை வகுப்பது எல்லாம் சுலபம், ஆனால் அதனை நடை முறைப்படுத்துவதுதான் கடினம் என்பதனை அனைவருமே அறிந்துள்ளோம் என நினைக்கின்றேன். காரணம் இதற்கான நேரத்தை ஒவ்வொருவரும் தேடி ஒதுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம். இந்தக் கால எல்லைக்குள் செய்யாவிட்டால், நீக்கி விடுவேன் என்று கூறுவது முறையல்ல.
  7. அவசரப்பட்டு அனைத்துக் கட்டுரைகளையும் நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது இறுதியான கருத்து. (இது தொடர்பில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுமாயின், அது தொடர்பாக ஏற்படுத்தப்படும் புதிய பக்கங்களுக்கான இணைப்பை தயவு செய்து ஆலமரத்தடியில் தாருங்கள். ஏனெனில் நேரமின்மை காரணமாக அண்மைய மாற்றங்கள் அனைத்தையும் பார்வையிட முடியாமல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் இது தொடர்பில் அறிந்து கொள்ளவும், இத் திட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கவும் உதவும்.) நன்றி.--கலை (பேச்சு) 13:03, 22 மார்ச் 2014 (UTC)
 13. //2006-ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் சுமார் 2000 கட்டுரைகள் தற்போது குப்பைகளாக உள்ளன. குப்பைகள் என்று சொல்லுவதற்கான முதல் காரணம் அவை இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகும்.// தினேஷ்குமார், முதலில் கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். இவை 2009 ஆம் ஆண்டளவிலேயே எழுதப்பட்டன. இவை முழுக்க முழுக்க இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அல்ல. ஒரு கட்டுரையின் 80-90 வீதமான பகுதி மனித உழைப்பால் உருவானது. விக்கிப்பீடியா பயனர்கள் அல்லாதோரால் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலேயே இவை குப்பைகள் போன்று தோன்றுகின்றன. ஆனாலும் இவற்றில் பெரும்பான்மையானவை மனம் வைத்தால் திருத்தக்கூடியவையே. இவற்றைத் திருத்துவதற்கு இரவியின் அல்லது தினேசின் காலக்கெடு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. உங்களால் முடியாதென்ற ஒரே காரணத்தால் நீக்கச் சொல்லுவது நியாயமில்லை.--Kanags \உரையாடுக 12:49, 22 மார்ச் 2014 (UTC)
 14. ஆம். அவை முற்று முழுதான இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அல்ல. தவிரவும், அவற்றில் சிலவற்றை, மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் சிலரே, முன்னின்று திருத்தங்களையும் செய்திருக்கின்றார்கள். அத்துடன் விக்கிப் பயனர்களும் பல கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்திருக்கின்றார்கள். எனவே நீக்கப்பட முன்னர் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டும். மேலும் இதற்குக் காலக்கெடு என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.--கலை (பேச்சு) 13:15, 22 மார்ச் 2014 (UTC)
 15. கூகிள் மூலம் மொழிபெயர்ப்புச் செய்த எல்லாக் கட்டுரைகளையும் நான் பார்க்கவில்லை. ஆனாலும் பல கட்டுரைகள் உரிய தரத்தில் இல்லை என்பது சரிதான். கட்டுரைகள் மிக நீளமாக இருப்பதனாலும், ஆங்கிலக் கட்டுரைகளோடு ஒத்துப் பார்த்துப் பிழைதிருத்தவேண்டி இருப்பதனாலும் இவற்றைத் திருத்துவதில் ஆர்வக் குறைவு இருப்பது எதிர் பார்க்கக்கூடியதே. எனவே இங்கு ஏற்கெனவே பல பயனர்கள் எடுத்துக்காட்டி இருப்பது போல் ஒரு திட்டத்தின் அடிப்படையில் தான் இவற்றைச் சரிசெய்ய முடியும். அதுவும் ஏறத்தாழ 1000 கட்டுரைகளை 6 மாதம் ஒரு வருடம் என்று கெடு வைத்துத் திருத்துவது சாத்தியமானது அல்ல. பகுதி பகுதியாகக் கட்டுரைகளைத் தெரிவு செய்து கட்டுரையின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் பொறுத்து முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியை மட்டுமோ திருத்திக்கொள்ள முடியும். ஆர்வமுள்ள பயனர்கள் ஒரு மாதத்துக்கு ஒரு கட்டுரையைப் பொறுப்பு எடுத்துத் திருத்த முயலலாம். நானும் சில கட்டுரைகளை இவ்வாறு பொறுப்பு எடுத்துச் செய்ய முடியும். ---மயூரநாதன் (பேச்சு) 18:22, 23 மார்ச் 2014 (UTC)
 16. தமிழ் விக்கிப்பீடியாவில் காலக்கெடு கொடுத்து ஒரு கட்டுரையை நீக்குவது வழமையே. தனியொரு கட்டுரைக்கே ஒரு மாதம் காலக்கெடு தரும் போது ஏறத்தாழ 1000 (2000 அன்று) கூகுள் கட்டுரைகளுக்கு உரிய நேரம் தரப்பட வேண்டும். ஒரு கட்டுரைக்கு ஒரு நாள் என்றால் 1000 கட்டுரைகளுக்கு 1000 நாட்கள். தோராயமாக மூன்று ஆண்டுகள். எனவே தான், 2016 இறுதி வரை காலம் கோரினேன். ஏனென்றால், உண்மையிலேயே யாராவது பொறுப்பெடுத்து செய்ய முன்வந்தால் கூட அதற்குரிய நியாயமான காலம் வேண்டும். மூன்று ஆண்டுகளும் கூட போதாது என்றால் ஐந்து ஆண்டுகள் தரலாம். ஆனால், ஒரு முறையான திட்டமும், அதில் இணைந்து பொறுப்பெடுத்துக் கொள்ளும் பயனர்களும் வேண்டும். மயூரநாதன் சொல்வது போல் 30 பயனர்கள் மாதம் ஒரு கட்டுரை அல்லது 15 பயனர்கள் மாதம் 2 கட்டுரை என்று பொறுப்பெடுத்தால் கூட மூன்று ஆண்டுகளில் இப்பணியை முடிக்கலாம். ஆனால், கால எல்லையும் கூடாது, யாரும் பொறுப்பெடுக்கவும் முடியாது என்றால் இந்தத் துப்புரவுப் பணி முடிவதற்கு எந்த உறுதியும் இல்லை. நன்றி.--இரவி (பேச்சு) 03:44, 24 மார்ச் 2014 (UTC)
 17. காலக்கெடு விதிப்பதால், நமது எல்லைகளை அடைய முடியாதென்றே எண்ணுகிறேன். கூகுள் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை, ஈடுபாடு உள்ளோர், இப்பொழுதே மாற்ற என்ன செய்யணும்? எடுத்துக்காட்டாக, கண் அழுத்த நோய் w:Glaucoma என்பதை நான் மேம்படுத்தும்போது, பின்வரும் வழிமுறைகளை கையாளலாமா?
  • முதலில் அங்குள்ள தரவுகளை அப்படியே பேச்சுப்பக்கத்திற்கு மாற்ற விரும்புகிறேன். ஏனெனில், பேச்சுப்பக்கத்தில் சேமித்தப் பின்பு, அதனை திறந்து வைத்துக் கொண்டு, கட்டுரை பக்கத்தினை உருவாக்குவது எளிது.
  • படங்கள் அனைத்தும் (==ஊடகங்கள்== ---> <gallery> ) கட்டுரைப்பகுதிக்கு மாற்ற வேண்டும். பிறகு கட்டுரை விரிவாகும் போது, அதற்குரிய விரிவாக்கம் எழுதப்பட்டால், உரிய படம் அப்பத்தியுடன் இணைக்கப்படும்.
  • பிற உட்பிரிவுகளும் (மேற்கோள், வெளியிணைப்பு, பகுப்பு போன்றவை) அவ்விதமே பேணப்படும்.
  • இப்படி செய்தால், கட்டுரையின் மேம்பாடு தெளிவாகத் தெரியும். குறுங்கட்டுரையாக (5000பைட்டுகள்?) மாற்றிய பின்பு, அடுத்த கட்டுரைக்கு செல்ல விரும்புகிறேன். பின்னரே, பிறர் அக்கட்டுரையினை விரிவாக்க முயலவேண்டும்.
  • ஒருவரே கட்டுரை முழுவதையும் மாற்ற வேண்டிய நிலை, மனச்சோர்வையே ஏற்படுத்தும். 'ஒருவர் கட்டுரையை மேம்படுத்தி வருகிறார்' என்ற அறிவிப்பு இருந்தால், அடுத்தவர் அதனைக் கண்டு, அவர் அந்த வார்ப்புருவை நீக்கிய பின்பு, தனது பங்களிப்பைத் தொடரலாம். இவ்வகையில் மயூரனாதன் கூறியது போல, பலர் ஒரு கட்டுரையை முழுமையாக மேம்படுத்தலாம்
  நான் இந்த அணுகுமுறையில், கூகுள் கட்டுரையை மேம்படுத்த எனது முயற்சிகளைத் தொடங்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 04:17, 24 மார்ச் 2014 (UTC)
  1. தகவலுழவன், கண் அழுத்த நோய் கட்டுரை தற்போது முழுமையாகவே உள்ளது. அதன் சிவப்பு இணைப்புகள், மற்றும் சில கலைச்சொற்களைத் திருத்த வேண்டும். ஆங்கிலச் சொற்கள் பல மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே தமிழ்ப் பெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளன. இவையும் கவனிக்கப்பட வேண்டும். தமிழ்ச் சொற்கள் தெரியாதவிடத்து ஆங்கில, இலத்தீன் சொற்களை அடைப்புக் குறிக்குள் தரலாம். இதனை நீங்கள் 5000 பைட்டு அளவுக்குக் குறைத்தால், இக்கட்டுரை ஒரு போதும் விரிவு பெறாது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் நீங்கள் மேம்படுத்தத் தொடங்கலாம். பேச்சுப் பகுதிக்கு நகர்த்தாமல், பகுதி பகுதியாக மேம்படுத்துவதே நல்லது. பலரும் பங்களிக்க இலகுவாக இருக்கும். இரவி, ஓரிரு வரிக் குறுங்கட்டுரையையும், மிக விரிவான கூகுள் கட்டுரையையும் ஒரே தரத்தில் பார்க்கக்கூடாது.--Kanags \உரையாடுக 07:22, 24 மார்ச் 2014 (UTC)
  2. வழிகாட்டியமைக்கு நன்றி. கனகு! எக்கட்டுரையையும் அளவில் குறைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால், நீங்கள் கூறியது போல, சிற்சில மாற்றங்கள்(10-20%) தேவைப்படும் கட்டுரைகளை தனியாக ஒரு பகுப்பிட்டால் அவற்றினை முதலில் மாற்ற பலரும் முன்வருவர். கண்ணழுத்த நோய் கட்டுரையை இவ்வாரத்தில் விரவாக்குவேன். ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்தலே சிறந்த நடைமுறை. கட்டுரைகள் பல இருக்கும் போது, இந்த நடைமுறையே நல்ல பலனைத் தரும். விரிவாக்கலுக்குப் பிறகு சந்திக்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 08:44, 24 மார்ச் 2014 (UTC)
 18. இங்கு பவுலின் கருத்தோடு உடன்படுகிறேன். 1,159 கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளில் இருப்பதாகக் காட்டுகிறது. வேறு ஏதும் உண்டா உறுதிப்படுத்தவும். நான் பின்வரும் எளிமைப்படுத்தல்களை வைக்கிறேன்.
  1. முதலில் 1159 என்ற எண்ணை மறந்துவிடவும். :P
  2. கட்டுரைகளை வகை பிரியுங்கள்.
   1. இருப்பதிலேயே பைட்டுகள் குறைந்த கட்டுரைகள்
   2. பல முதன்மைக் கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டக்கூடிய தொகுப்புக்கட்டுரைகள். எடுத்துக்காட்டுக்கு சூரிய மண்டலம் கட்டுரையில் 9 கோள்கள், குறுங்கோள்கள், மற்றவைக்கு தனிக்கட்டுரை இருக்கும். முதன்மைக்கட்டுரைகளை வெட்டி ஒட்டினால் 99% வேலை முடிந்தது. நான் பேரண்டம் கட்டுரையில் காட்சிக்குட்பட்ட பேரண்டம் உள்ளடகத்தில் பழையதை அழித்து காட்சிக்குட்பட்ட பேரண்டம் முதன்மைக்கட்டுரையில் உள்ள முதல் பத்தியை ஒட்டி இதையே செய்தேன்.
   3. எல்லாப் பயனர்கள் பங்களிக்கக் கூடிய கட்டுரைகள். எ.கா. திரைப்படக்கட்டுரைகள்
   4. அதிக அளவு தமிழ் கலைச்சொற்கள் அறிவு தேவைப்படும் கட்டுரைகள்.
   5. மேலுள்ளவற்றில் கடினமானதை முதலில் விட்டு விட்டு இலகுவாய் இருப்பதை குறிவைத்து நீரை உள்ளே பாய்ச்சினால் மற்றக் குப்பைகள் தானாக குப்பைக் கிடங்கில் இருந்து வெளிவந்துவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:59, 13 ஏப்ரல் 2014 (UTC)

ஆலமரத்தடி மேற்பகுதி[தொகு]

ஆலமரத்தடி மேற்பகுதி சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை) என்ற ஒரு பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுகிறது. இதனை பொதுவாக கொள்கை உரையாடல்களுக்கான ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்தில் பொதுவான கொள்கை உரையாடல்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. எ.கா அக் கட்டுரையை எழுதியவர் தனிப்பட்டு எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. பிற பயனர்கள் கவனிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தப் பொதுக் கொள்கைப் பக்கம் பயன்படும் என்று கருதுகிறேன்.

--Natkeeran (பேச்சு) 03:39, 18 மார்ச் 2014 (UTC)

ஆலமரம் தழைத்தோங்குகிறது ;) மிகுதியான கிளைகள் எந்தப் பக்கத்தில் பதிவது, எந்தப் பக்கத்தில் தேடுவது என்ற குழப்பத்தை உண்டாக்கலாம். நாம் குறிப்பிடுவது கொள்கை குறித்ததா, தொழினுட்பம் குறித்ததா எனப் பாகுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் பயனரைக் குழப்பலாம். வாழ்த்துக் கூறுவது மட்டும்தான் ஆலமரத்தடியில் மிஞ்சும் போலிருக்கிறது :)--மணியன் (பேச்சு) 04:29, 18 மார்ச் 2014 (UTC)
ஆலமரத்தடியில் அரட்டைகள் மிகுந்து விட்டன. ஆகையால், இவ்வாறு உப பக்கங்கள் இருப்பது நல்லதே. ஆலமரத்தடியில் கொள்கை குறித்து உரையாடினாலும், முடிவில் அவற்றை கொள்கைப் பக்கத்துக்கு இடம் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:03, 18 மார்ச் 2014 (UTC)--Kanags \உரையாடுக 07:03, 18 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 19 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம்--அடியேன் யாழ்ஸ்ரீ பேச்சு 11:36, 19 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம்--[[படிமம்:Mohamed ijazz.png|thumb|Mohamed ijazz]] (பேச்சு) 16:44, 19 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:53, 19 மார்ச் 2014 (UTC)

கொள்களை உரையாடல்களுக்கு என்று தனியாக ஒரு ஆலமரத்தடிப் பகுதி உருவாக்குவது தேவையற்றது. வழக்கமாக ஆலமரத்தடியில் தொடங்கும் உரையாடல்களை உரிய பக்கங்களுக்கு மடை மாற்றுவது தானே முறை? அந்தந்த பக்கங்களில் நடக்கும் உரையாடல்களுக்கு இங்கிருந்து இணைப்பு மட்டும் கொடுத்தால் போதுமானது. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர பல்வேறு கொள்கைகள் உருவாகும். இவற்றை எல்லாம் ஒரே பக்கத்தில் குவிக்கத் தேவை இல்லை. நூற்றுக் கணக்கான தொகுப்புகள் வரும் போது, அவை எந்தப் பக்கத்தில் இருக்கின்றன என்று தேடுவது, என்றும் முறியாத இணைப்புகள் தருவது ஆகியன சிரமமாகும். இப்போது உள்ள பல கொள்கைகளை அவை தொடர்பான பகுப்புகள், தனிப்பக்கங்களில் தேடினாலே கிடைத்து விடும். --இரவி (பேச்சு) 03:38, 24 மார்ச் 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று[தொகு]

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று என்பதன் முக்கிய கூறுகளை பயனர்கள் நினைவிற் கொள்ளவும். சில பயனர் பக்கங்களில் இது குறித்த அறிவித்தல்களை வழங்கியுள்ளேன். அதில் ஒன்றான ஒரு படக் கோவை அன்று என்பதையும் நினைவிற் கொள்ளவும். சில பயனர் தங்கள் ஒளிப் படங்களின் சேமிப்பிடமாக விக்கிப்பீடியாவினைப் பயன் படுத்துவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இது பற்றி கொள்கை பின்வருமாறு உள்ளது:

 • கட்டுரைக்கு பொருத்தமான, கட்டுரையை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் படங்களை மட்டும் கட்டுரைகளில் இணையுங்கள். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் புகைப்படங்களை உங்கள் பயனர் பக்கங்களில் பதிக்கலாம் என்றாலும், அவை ஒன்று அல்லது இரண்டு படங்களாக இருக்கட்டும்.(த.வி)
 • Please upload only files that are used (or will be used) in encyclopedia articles or project pages; anything else will be deleted. If you have extra relevant images, consider uploading them to the Wikimedia Commons, where they can be linked from Wikipedia. (ஆ.வி)

மேலும், நடைபெற்ற சம்பவங்களினால் சுப்பிரமணியில் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதையோ அல்லது படங்களை நீக்குவதையும் தவிர்த்து, இங்கு இவரின் படத்தொகுப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர் ஒளிப் படங்களின் சேமிப்பிடமாக விக்கிப்பீடியாவினை பயன்படுத்தியுள்ளார். பார்க்க: நிழற்படங்கள் மற்றும் பயனர் பக்கம். --AntonTalk 04:16, 25 மார்ச் 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று . கட்டுரையுடன் இணைக்கப்படாத பயனரின் தனிப்பட்ட சேகரிப்புப் படிமங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுரைகளில் இணைக்க விரும்பும் பட்சத்தில் மீண்டும் அவற்றை விக்கிமீடியா பொதுவகத்திலேயே பதிவேற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:37, 30 மார்ச் 2014 (UTC)
ஆங்கில விக்கியில் படங்கள் ஏற்றுவது தொடர்பாக பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது எப்பொழுது தமிழ் விக்கிகு வரும். wizard இங்கும் வந்தால் உதவும்.
விக்கிமீடியா பொதுவகத்திலேயே பதிவேற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்." அவசியம் இல்லை. --Natkeeran (பேச்சு) 15:02, 30 மார்ச் 2014 (UTC)

//:: ஆங்கில விக்கியில் படங்கள் ஏற்றுவது தொடர்பாக பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது எப்பொழுது தமிழ் விக்கிகு வரும். wizard இங்கும் வந்தால் உதவும். //

நற்கீரன், ஆலமரத்தடியின் நுட்பக் கிளையில் இதனைப் பதிந்து வைத்தால் நுட்ப ஆர்வலர்கள் கவனிக்கக் கூடும்.

அனைவரும் பயன்படுத்தக்கூடிய படிமங்களை பொதுவகத்தில் ஏற்றினால் அனைத்து விக்கிப்பீடியாக்களும் பயன் பெறலாம். படிமங்களைக் கவனித்து, கொள்கைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வதில் பொதுவகத்தில் தனிப்பட்ட தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். எனவே, நியாய பயன்பாட்டுப் படிமங்களை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுவது நன்று. அவையும் கூட அரிதான படங்களாக இருத்தல் நன்று. https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பார்த்தால் பல முன்னணி விக்கிப்பீடியாக்களில் கூட 100க்கும் குறைவான படங்களையே சேர்த்து வைத்துள்ளார்கள். மற்றனைத்தும் பொதுவகத்துக்கு நகர்த்தப்படுகிறது. பொதுவக நடைமுறைகள் புரிநு கொள்ள முடியாத புதிய பயனர்களுக்கு மட்டும் இங்கு வழி காட்டி விட்டு காலப்போக்கில் அவர்களுக்கும் பொதுவகத்தைப் பயன்படுத்த கற்றுத் தர வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 11:42, 2 ஏப்ரல் 2014 (UTC)

Changes to the default site typography coming soon[தொகு]

This week, the typography on Wikimedia sites will be updated for all readers and editors who use the default "Vector" skin. This change will involve new serif fonts for some headings, small tweaks to body content fonts, text size, text color, and spacing between elements. The schedule is:

 • April 1st: non-Wikipedia projects will see this change live
 • April 3rd: Wikipedias will see this change live

This change is very similar to the "Typography Update" Beta Feature that has been available on Wikimedia projects since November 2013. After several rounds of testing and with feedback from the community, this Beta Feature will be disabled and successful aspects enabled in the default site appearance. Users who are logged in may still choose to use another skin, or alter their personal CSS, if they prefer a different appearance. Local common CSS styles will also apply as normal, for issues with local styles and scripts that impact all users.

For more information:

-- Steven Walling (Product Manager) on behalf of the Wikimedia Foundation's User Experience Design team

கட்டுரைப் போட்டியாளர்களுக்கு அறிவிப்பு[தொகு]

ஆ.வி.யிலுள்ள கருவி மூலம் கட்டுரை ஒன்றை சோதிக்கையில் அது உரைப்பகுதியை மட்டும் மஞ்சள் நிறத்தினால் காட்டுகிறது. ஏனையவை உரைப்பகுதி அல்ல. பெரிதாக்கிப் பாருங்கள்

கட்டுரைப் போட்டிக்காக பைட்டுக்களின் அளவினை வலிந்து அதிகரிக்க வேண்டாம். கட்டுரையில் உள்ள தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் என்பனவெல்லாம் உரைப்பகுதியல்ல. தொடர் கட்டுரைப் போட்டியின் நோக்கத்தையும், அதன் போட்டி விதிகளையும் நன்கு விளங்கிக் கொண்டு பங்களியுங்கள்.

தங்கள் அறிவிப்புக்கு நன்றி அன்ரன் அவர்களே, தனி கட்டுரைப்பகுதியை மட்டும்தான் விரிவாக்க வேண்டுமா?' அல்லது தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் போன்றவற்றை வைத்து விரிவாக்கினால் அவை குறைந்தது எவ்வளவு பைட்டில் இருக்க வேண்டும்?, அதாவது ஐயா, ஒருவர் 4360 பைட் உள்ள கட்டுரையை மேலே குறிப்பிட்டவற்றை வைத்து 11000 பட்டை மேலதிகமாகக் கூட்டி கட்டுரையை விரிவாக்குகிறார், பின்பு மீண்டும் அதே கட்டுரையை வேறொருவர் 11000 பைட்டளவிற்கு கட்டுரைப்பகுதியை மட்டும் வைத்து விரிவாக்குகின்றார் எனின் எவரின் பெயரில் கட்டுரை சேர்க்கப்படும்?, விரிவான கட்டுரைக்குப் போட்டியிடுவோர் தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் இவற்றை வைத்துத்தான் வெற்றிபெறலாம் என்ற இக்கட்டான நிலைவந்தால் என்ன செய்வது? தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் போன்றவற்றை வைத்துத்தான் கட்டுரையை விரிவாகுகின்றார் என வைத்துக்கொள்வோம் அக்கட்டுரை கட்டுரைப்போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படுமா? அல்லது அவை நீக்கப்படுமா? அவை பயனுள்ள தகவல்களாக இருந்தால் அவற்றை நீக்கினால் பாதிப்பு ஏற்படாதா? இவ்வாறான 6 கேள்விகளுக்கும் தயவு செய்து பதிலளிக்கவும். இப்படிக்கு விக்கிக்கு இளையோன் --யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:58, 5 ஏப்ரல் 2014 (UTC)

மேற்குறிப்பிட்டவற்றுள் உசாத்துணைகள், வெளியிணைப்புக்கள் என்பவை கட்டுரைப்போட்டி விதிப்படி 15360 பைட்டைத் தாண்டிய பின்னரே கட்டுரைக்கு வழங்கப்படவேண்டும். இவ்விதி விரிவான கட்டுரைக்குப் பொருந்தாது என நினைக்கின்றேன். ஆனால் தகவற் சட்டம், அட்டவணை, வார்ப்புருக்கள், மேற்கொள்கள், பகுப்புக்கள் போன்றன கட்டுரையில் இணைக்கப்படலாம் அல்லவா. அத்துடன் இது 12 மாதம் நடக்கும் தொடர் கட்டுரைப்போட்டி ஆகையால் அனைத்து மாதங்களிலும் போட்டி விதிகள் சமச்சீராகப் பேணப்படவேண்டும் அல்லவா.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:36, 5 ஏப்ரல் 2014 (UTC)

நீங்கள் கூறியது சரி. சிறு திருத்தம், கட்டுரைப்போட்டி விதி-
 • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 15:39, 5 ஏப்ரல் 2014 (UTC)

புறவயமான மதிப்பீட்டு முறை வேண்டும் என்றே 15360 பைட்டு என்ற அளவு தரப்பட்டது. ஆனால், அது வெற்றிக் கோட்டில் உள்ள நாடாவைப் போன்றது அன்று :) அதனைத் தொட்டவுடன் கட்டுரையை வளர்ப்பதை நிறுத்தி விட வேண்டாம் :) முக்கியமான குறுங்கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்று நோக்கிலேயே இப்போட்டி நடைபெறுகிறது. எனவே, இந்த உணர்வையும் நோக்கத்தையும் மதித்து செறிவான உள்ளடக்கத்தைச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். போட்டியின் முதல் சில மாதங்களில் கூட இவ்வாறே செயல்பட்டு வந்தோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:28, 8 ஏப்ரல் 2014 (UTC)

ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்[தொகு]

Hanuman before Rama.jpg

அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்--✍☪mohamed ijazz☪® (பேச்சு) 08:55, 8 ஏப்ரல் 2014 (UTC)

ஒரு குறிப்புக்கு: தீபாவளி, ஆயுத பூசை / சரசுவதி பூசை, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை விளக்கு போன்றவை (அதே வரிசையில்) தமிழகத்தில் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் திருநாட்களில் முதன்மையானவை. இராமநவமி, கிருசுண செயந்தி போன்றவை பரவலான சமூகத்தால் கொண்டாடப்படுவதில்லை. --இரவி (பேச்சு) 10:32, 8 ஏப்ரல் 2014 (UTC)

விக்கிமேற்கோளில் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிமேற்கோள் தளத்தில் தற்போது தமிழினியன், சிறீகர்சன் ஆகிய இருவரும் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கூட ஓரிருவர் சேர்ந்து பங்களித்தாலும் வெகு விரைவாக இந்திய விக்கிகளில் முன்னணி இடத்தைப் பிடிக்கலாம். பார்க்க: http://wikistats.wmflabs.org/display.php?t=wq

தேர்தல் நேரம் என்பதால் பல்வேறு தலைப்புகள், தலைவர்கள் குறித்த மேற்கோள்களையும் தொகுக்க நல்ல வாய்ப்பு. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பக்கங்கள் என்று இலக்கு வைப்போமா? மாதம் 100 பக்கங்கள். மொத்தம் 4 பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் சேர்த்தால் கூட போதும். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் முக்கிய ஆளுமைகளின் மேற்கோள்களைத் தொகுக்குத் துவங்கினால் விக்கியிடை இணைப்புகளும் தரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:51, 8 ஏப்ரல் 2014 (UTC)


தமிழில் விக்கி செய்திகள் தொடங்கப்பட்டபோது அது தேவையில்லை என வாக்களித்திருந்தேன். இப்போதும் அக்கருத்தில் மாற்றமில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கிசெய்திகள் பலமணிநேர உழைப்பினை வீணாக்கிய இடமாகவே இப்பொழுதும் தெரிகிறது. அங்கே நாம் இழந்த விக்கிநேரம் விக்கிப்பீடியாவில் பயன்பட்டிருந்தால் அதிக பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அவ்வாறேதான் விக்கிமேற்கோளையும் பார்க்கிறேன். அவ்விடத்துக்கு செல்லும் விக்கி உழைப்பு விக்கிப்பீடியாவின் இழப்பாகவே முடியும். இந்திய விக்கிகளில் முன்னணிக்கு வருவோம், ஆயிரம் பக்கங்களை அடைவோம் என்பவையெல்லாம் பயனற்ற இலக்குக்கள்.

பல்லாயிரம் விக்கிப்பீடியர்கள் உள்ளனர் என்றால் அவரவர் தமக்கு விரும்பியவகையில் பங்களிக்கலாம் என விக்கிமேற்கோள், விக்கிசெய்தி என எல்லாவற்றிலும் இலக்குக்கள் வைக்கலாம். ஆனால் பங்களிப்பதோ சிலர். அவர்களது உழைப்பும் சிதறிப்போனால் இழப்பே எஞ்சும்.

ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.

தமிழ் விக்கிப்பீடியாவினை பயன் தகுநிலைக்குக் கொண்டுபோவதனை கட்டுப்படுத்துவதாக உள்ள செயற்றிட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது சரியானதல்ல. நன்றி. கோபி (பேச்சு) 12:13, 8 ஏப்ரல் 2014 (UTC)

கோபி, கூடுதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் குறித்த உங்கள் கருத்து அறிவேன். எனினும்,

//தமிழ் விக்கிப்பீடியாவினை பயன் தகுநிலைக்குக் கொண்டுபோவதனை கட்டுப்படுத்துவதாக உள்ள செயற்றிட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது சரியானதல்ல//

என்ற அளவுக்கு மற்ற திட்டங்களைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. விக்கிமேற்கோளில் சிலர் தற்போது முனைப்புடன் பங்களிக்கின்றனர். இன்னும் சிலர் இணைந்தால் உற்சாகமாக இருக்குமே என்னும் நோக்கிலேயே இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. ஒரு தலைப்பு சார்ந்த அனைத்து உள்ளடக்கங்களையும் விக்கிப்பீடியாவிலேயே குவிக்க முடியாது அல்லவா? தலைப்புடன் தொடர்புடைய படங்களை் தேட விக்கி பொதுவகமும் பொருள் தேட விக்சனரியும் ஆக்கங்களைத் தேட விக்கிமூலமும் இருப்பது போல் விக்கி மேற்கோளும் இருப்பதில் பாதகம் இல்லை. நெடுநாளாக இங்கு பங்களித்து வருவோருக்கு ஒரு மாறுதலாகக் கூட இருக்கலாம் :) மற்றபடி, இலக்குகள் அனைத்தும் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவே. திட்டத்தின் தொடக்க காலங்களில் இது போன்ற இலக்குகள் பயனுடையவையாக இருந்துள்ளன. நன்றி.--இரவி (பேச்சு) 12:19, 8 ஏப்ரல் 2014 (UTC)

இரவி,

ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.

எத்தனை விக்கித்திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் பயனர் பங்களிப்பு இருந்தாலும் போதிய உள்ளடக்கம் இல்லாவிடின் தமிழ் மொழி சார்ந்து இயங்க முடியாது. கூகிள் குப்பைகளையே பல்லாண்டுகளின் பின்னரும் திருத்த முடியாத நிலையில் த.வி. இருக்கும் நிலையில் விக்கிமேற்கோளைப் பிரித்துத்தான் பார்க்க வேண்டும். விக்சனரி தவிர ஏனைய விக்கித்திட்டங்களால் பயனேதுமில்லை. காரணம் போதிய உள்ளடக்கமின்மை. கோபி (பேச்சு) 12:35, 8 ஏப்ரல் 2014 (UTC)

கோபி, அனைத்து விக்கிமீடியா திட்டங்களும் உறவுத் திட்டங்கள் தாம். எனவே, அவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவதே "விளம்பரம்" என்ற நோக்கில் பார்க்கத் தேவையில்லை. நானே முதலில் விக்சனரியில் பங்களித்து, பிறகு தான் விக்கிப்பீடியாவுக்கு வந்தேன். இது போல் இன்னும் சிலர் உள்ளனர். எனவே, பிற விக்கிமீடியா திட்டங்கள் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பாளர்கள் வரக்கூடிய வாய்ப்பையும் பார்க்க வேண்டும். மலையாள விக்கி மூலம் போன்ற தளங்கள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் அத்திட்டத்தின் மூலமாக பள்ளிக் குழந்தைகள் போன்றோருக்கு விக்கி இயக்க அறிமுகத்தைத் தருகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் தன்னளவில் முழுமையானதா என்பதைப் போலவே ஒட்டு மொத்த விக்கியூடகத் திட்டங்களின் ஊடாட்டத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவைப் பல பள்ளிக் குழந்தைகள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆளுமைகளின் மேற்கோள்கள் போன்றவற்றைத் தொகுப்பது அவர்களுக்கு உதவும். ஒரு கலைக்களஞ்சியத்தைப் போலவோ அகரமுதலியைப் போலவோ இலட்சக்கணக்கான, விரிவான பக்கங்கள் இருந்தால் தான் பயன் என்றில்லை. சில நூறு முக்கியமான தலைப்புகளில் மேற்கோள்களைத் தொகுத்தால் கூட பயனுள்ளதாகவே அமையும். நன்றி.--இரவி (பேச்சு) 12:42, 8 ஏப்ரல் 2014 (UTC)

இரவி, விக்கிமீடியா நிறுவனத்துக்கு எல்லா விக்கிமீடியாத் திட்டங்களும் உறவுத்திட்டங்கள் தாம்.

நான் விக்கிமேற்கோளின் உள்ளடக்கம் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக உள்ள கட்டற்ற தமிழ் உள்ளடக்கம் பற்றியே குறிப்பிடுகிறேன். மேலே கடைசியாக உள்ள உங்கள் கருத்தினை வாசித்தபின்னர் விக்கிமேற்கோளுக்குச் சென்றேன். முதற்பக்கத்தில் சேர்ச்சிலின் ஒரு மேற்கோள் இருந்தது. அதனை அழுத்தி உள்ளே நுழைய அவரது 13 மேற்கோள்கள் உள்ளன. அங்கிருந்து விக்கிப்பீடியாவில் அவர் பற்றிய கட்டுரைக்கு வந்தேன். வின்ஸ்டன் சர்ச்சில். இந்தக் கட்டுரை சேர்ச்சில் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தினை வழங்கவில்லை. அவ்வாறிருக்கையில் 13 மேற்கோள்கள் திரட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்கிப்பீடியாக் கட்டுரையினைக் காணவரும் பள்ளிக்குழந்தை ஏமாற்றப்படும். ஓர் அரைகுறைக் கட்டுரையும் அது தொடர்பான மேற்கோள்களும் பேச்சுப்போட்டிக்கும் கட்டுரைப்போட்டிக்கும் போதுமானது. ஆனால் அந்தக் குழந்தை குறித்த போட்டியில் பரிசு வாங்கலாம். ஆனால் சேர்ச்சில் பற்றி எதுவும் தெரியாமலேயே இருக்கும். ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பு: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1990களின் ஆரம்பத்தில் அறிவுக்களஞ்சியம் என்று மாணவர்க்கான ஓர் அறிவியற் சஞ்சிகை வெளிவந்தது. அதன் இரண்டாவது இதழ் 32 அல்லது 40 பக்கங்கள் என நினைக்கிறேன். அந்த இதழைக் கிழி கிழியென்று கிழித்து ஒரு நூல் 88 பக்கங்களில் வந்தது. http://noolaham.net/project/89/8858/8858.pdf அதிலிருந்து ஒரு மேற்கோள். அறிவுக்களஞ்சியத்தின் நோக்கம் அறிவை வளர்ப்பதென்ற போர்வையில் தமிழ்ச் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிப்பதாகும். கோபி (பேச்சு) 13:16, 8 ஏப்ரல் 2014 (UTC)

தமிழ் விக்கிமேற்கோளின் தற்போதைய தொடர் பங்களிப்பாளன் என்ற வகையில் இங்கு கருத்திடுகின்றேன். தமிழ் விக்கிமேற்கோள் ஏற்கனவே செத்துப் பிழைத்தவன்.[1] தற்போது நானும், தமிழினியனும் தொடர்ந்து அங்கே பங்களித்து வருகின்றோம்.
//ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.//
இக்கருத்தைக் கடுமையாக எதிர்க்கின்றேன். ஒருபோதும் தமிழ் விக்கிமேற்கோள் பயனற்றதாகாது. நான் இலங்கையைச் சேர்ந்த பள்ளிமாணவன். எமது வரலாறு, குடியுரிமைக்கல்வி, விஞ்ஞானம், புவியியல், சைவசமயம் போன்ற பல்வேறு தரங்களுக்குரிய பாடப்புத்தகங்களில் பெரியோர்கள் கூறிய மேற்கோள்கள் தேவையான இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் குறித்த தலைப்பில் இடம்பெறும் போது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா, சுவாமி விவேகானந்தர், அறிஞர் அண்ணா, பெரியார் போன்ற பல பெரியோரின் மேற்கோள்கள் ஒரு பக்கத்தில் தொகுக்கப்படும் போது பேச்சுக்களின் போதோ அல்லது பட்டிமன்றங்களின் போதோ அவற்றினை பயனுள்ள வகையில் உபயோகித்துக்கொள்ளலாம். இவ்வாறான மேற்கோள் தொகுப்புத் தளங்கள் தமிழில் வேறெங்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான மேற்கோள்கள் விக்கிப்பீடியாவில் இடம்பெறப் பொருத்தமற்றன. அதுமட்டுமல்லாமல் பழமொழிகளின் தொகுப்பாகவும் விக்கிமேற்கோள் காணப்படுகின்றது.
//அவ்விடத்துக்கு செல்லும் விக்கி உழைப்பு விக்கிப்பீடியாவின் இழப்பாகவே முடியும்.// இக்கருத்தையும் எதிர்க்கின்றேன். விக்கிப்பீடியாவில் இருக்கும் நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் உள்ளடக்கப்படமுடியாத அவர்களது மேற்கோள்களை விக்கிமேற்கோளில் இட்டு விக்கிப்பீடியாவில் ஒரு இணைப்புக் கொடுத்துவிடலாம் விக்கிமேற்கோளில் இவ்வாறே செய்கின்றோம். எடுத்துக்காட்டாக - வின்ஸ்டன் சர்ச்சில், பெரியார் போன்ற கட்டுரைகளைப் பாருங்கள். சான்றுகளுடன் பூரணத்துவமான கட்டுரைகளாக உள்ளன. இவ்வாறு உரையாடுவதன் மூலம் விக்கிமேற்கோளைப் பற்றி பயனர்கள் மத்தியில் நேர்மாறான எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள்.

விக்கிமேற்கோளில் எம்முடன் இணைந்துபங்களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:45, 8 ஏப்ரல் 2014 (UTC)

சான்று;

 1. தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை, மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்

மன்னிக்கவேண்டும் கோபி அவர்களே நான் முதலிலேயே தொகுக்கத் தொடங்கிவிட்டேன். முரண்பாடுகளை தொகுக்க என்று வந்த பின்னர் நான் இட்ட கருத்தை மீண்டும் வெட்டி ஒட்டினேன். அதனால் நீங்கள் இறுதியாக இட்ட கருத்தை வாசிக்கத் தவறிவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:50, 8 ஏப்ரல் 2014 (UTC)

மேலே கோபி குறிப்பிட்ட கருத்து தொலைநோக்கு இல்லாதாது. விக்கி செய்திகள் ஒரு வெற்றிகரமான செயற்திட்டமே. இன்றைய செய்தி நாளை வரலாறு. அறிவியல் செய்திகள் போன்ற தமிழில் கவனிக்கப்படாத துறைகளுக்கனா களம். முன் மாதிரி. பலரும் பல மாதிரி பங்களிப்பதற்கு ஏதுவான களங்கள் முக்கியமானவை. விக்கிமேற்கோள் மீண்டும் துளிர்விடுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. --Natkeeran (பேச்சு) 13:58, 8 ஏப்ரல் 2014 (UTC)

சிறீகர்சன், நான் நினைத்ததை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.

 • உங்களைப் போன்ற ஒரு பயனர் விக்கிமேற்கோளில் தொடர்ச்சியாகச் செயற்படுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இழப்பு
 • வின்சுடன் சேர்ச்சில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத நிலையில் விக்கிமேற்கோளில் விரிவான பக்கம் இருப்பது தமிழ் சார்ந்த உள்ளடக்கத் தொகுதியின் பொருத்தமான வளர்ச்சி அல்ல.
 • வின்சுடன் சேர்ச்சில் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் போதுமான உள்ளடக்கம் தமிழில் இல்லாத நிலையில் அவரது மேற்கோள்களை விரிவாக்குவது பள்ளியில் பேச்சுக்கும் பட்டிமன்றத்துக்கும் பயன்படலாம். அது மேலோட்டமான அறிவைக் கொண்ட ஒரு சமூகத்தினையே வளர்த்தெடுக்கும்.

நன்றி கோபி (பேச்சு) 14:02, 8 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், தமிழ் விக்கிசெய்திகளின் உள்ளடக்கம் பயன்படக்கூடிய உள்ளடக்கம் அல்ல. அது தோல்வியடைந்த ஒரு செயற்றிட்டம். critical mass எட்டப்படாத ஓர் உள்ளடக்கத் தொகுதி பயனற்றது. கோபி (பேச்சு) 14:06, 8 ஏப்ரல் 2014 (UTC)

சிறீகர்சன், "உங்களைப் போன்ற ஒரு பயனர் விக்கிமேற்கோளில் தொடர்ச்சியாகச் செயற்படுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இழப்பு" என்ற கோபியின் கருத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். எங்கு பங்களித்தாலும் சிறப்பே. உங்களுக்கு எங்கே ஈடுபாடோ, அங்கே ஈடுபடுங்கள். பல களங்களை உருவாக்குவதே விக்கியூடகங்களில் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துகோல். கோபியின் தற்போதைய, (ஒரு காலம் நான் ஒரு போது கொண்டிருந்த) ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது மேல் இருந்து கீழ் பாயும் செயற்திட்டங்கள் தமிழ் விக்கியில் உறுதியாக மறுக்கப்பட்டுள்ளன, அந்த அணுகுமுறை வேலைசெய்யாது என்று விளங்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 14:09, 8 ஏப்ரல் 2014 (UTC)
எதோ படம் ஓடிச்சா இல்லையா என்பது போல கோபியின் அளவீடு அமைகிறது. தமிழில் critical mass என்றால் என்ன? 1001 பேர் நூலை வாங்கினால் அந்த நூல் வெற்றியா? அல்லது அந்த நூலின் உள்ளக்கத்தில் தங்கி உள்ளதா?--Natkeeran (பேச்சு) 14:09, 8 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், விக்கிமீடியா நிறுவனத்துக்காக உரையாடதீர்கள். தமிழில் உள்ள உள்ளடக்கத்தினைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியா தமிழில் இருக்கின்ற, இருக்கப்போகின்ற ஒரேயொரு பொதுக் கலைக்களஞ்சியம் என்பதே எனது புரிதல்.

ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கிலத்தில் யோசித்து ஆங்கிலத்தில் வாழ்ந்து கொண்டு (நானும் தான்) தமிழ்க் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசி எழுதிவிட்டுப் போவது இலகுவானது. ஒரு குறித்த மொழியில் குறித்த விடயங்கள் முழுமையாக இல்லாவிடின் அம்மொழியில் அவ்விடயம் சார்ந்த அறிவோ சிந்தனையோ வளராது. கருநாடக இசை போன்ற தமிழ்ச் சமூகங்களுடன் மிக நெருக்கமான கலைகளின் கலைச்சொற்கள் தமிழிலில்லாதது இப்படித்தான் நடந்தது.

நான் மேலிருந்து கீழ் நோக்கி எதை எவர் எப்போது எப்படிச் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்த வரவில்லை. critical mass என்பதாக நான் குறிப்பிட்டது “போதுமான உள்ளடக்கம்” என்பதனை. ஒரு குறித்த விடயப்பரப்புத் தொடர்பாக போதிய உள்ளடக்கம் இல்லாவிடின் அவ்விடயப்பரப்பில் தொடர்ச்சியான அறிவு வளர்ச்சி சாத்தியமில்லை.

சேர்ச்சில் பற்றி மூன்று வரி எழுதினோம்; இரண்டு படம் போட்டோம்; நான்கு மேற்கோள் தொகுத்தோம் என்பது ஏமாற்று வேலை. நம்மை நாமே ஏமாற்றும் வேலை. கோபி (பேச்சு) 14:24, 8 ஏப்ரல் 2014 (UTC)


ஒன்றுமே இல்லாத போது "சேர்ச்சில் பற்றி மூன்று வரி எழுதினோம்; இரண்டு படம் போட்டோம்; நான்கு மேற்கோள் தொகுத்தோம்" என்பது முக்கியம் வாய்ந்த ஒரு பங்களிப்பே. மைக்ரோசோப்ட் போல கட்டற்ற மென்பொருட்கள் வேலை செய்வது இல்லை, அதிகம் பேர் பயன்படுத்தின இல்லை. உபுண்டு ஒரு படு தோல்வி. கூகிள் போன்று நாம் இயங்க முடியாது, நூலகத் திட்டம் படு தோல்வி. தனி ஈழம் இல்லை சுழியம். நாம் அனுபவப்பட்டது போதாதா. இந்த மனப்பான்மை என்னவென்று சொல்வது. --Natkeeran (பேச்சு) 15:24, 8 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், இங்கே த.வி.யில் பங்களிப்பு என்பது பெருமிதத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. பயனற்ற பங்களிப்பு குப்பை என்கிறேன் நான். சேர்ச்சில் என்ற மனிதரை அறிந்து கொள்ளப் போதிய உள்ளடக்கம் இல்லாத ஒரு மொழியில் இரண்டு படம், நான்கு மேற்கோள் பயனில்லை என்கிறேன். நீங்கள் சொல்கிறீர்கள் சேர்ச்சிலைப் பற்றி விளங்குவது விளங்காதது பிரச்சனையில்லை. மேற்கோள் போடுறவர் மேற்கோள் போடு; படம் போடுறவர் படம் போடு என்று. சரி. அவ்வாறே செய்துகொண்டிருங்கள். ஆனால் தமிழ் உள்ளடக்கத்துக்கு பங்களிப்பதாக மட்டும் புளகாங்கிதமடைய வேண்டாம் என்கிறேன்.

அவரவர் விருப்பத்திற்கேற்பவே அவரவர் பங்களிக்க முடியுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சேர்ச்சில் பற்றி ஆங்கிலத்தில் வாசித்து அவ்விடயப்பரப்பில் தன் அறிவினை விருத்தியாக்கி அதனைத் தமிழுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவர் சேர்ச்சில் பற்றி எழுதாமல் அவரது மேற்கோளை எழுதினால் அது ஒட்டுமொத்தமாகத் தமிழுக்கு இழப்பே. கோபி (பேச்சு) 15:36, 8 ஏப்ரல் 2014 (UTC)

யார் புளகாங்கிதம் அடைந்தார்கள். யார் மாலைகள், பொன்னாடைகள் கேட்டார்கள். பெரும்பாலும், இவை உங்கள் கற்பனைகள். இது ஒரு சுழியக் கூட்டு விளையாட்டு இல்லை. ஒரு இடத்தில் வளர மறு இடத்தில் தேய. சேர்ச்சில் பற்றி முனைவர் பட்டம் பெற்று தமிழ் விக்கிக்க்ப் பங்களிக்க எத்தனை பேர் உள்ளார்கள். நமக்கு எல்லோருக்கும் இருக்கும் குறைபாடுகளுக்கு மத்தியில் தான் பங்களிக்கிறோம். அதுதான் விக்கி. சிறுவர், முனைவர், முதியவர், எல்லோரும் சிறுகச் சிறுகச் சேர்ந்துப் பங்களித்தல். சேர்ச்சில் பற்றி தமிழில் விரிவான உள்ளக்கம் தேவை என்று நீங்கள் உணர்ந்தால் விக்கிக்கு வெளியில் ஊதியத்துக்கு மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கலாமே. அப்படி முக்கியமான தலைப்புகளில் தொடங்கினால், அதில் என்னால் பங்களிப்புச் செய்வது பற்றி சிந்திக்க முடியும். ஆனால் எல்லாச் சிக்கல்களுக்கும் விக்கி தீர்வு இல்லை. --Natkeeran (பேச்சு) 15:45, 8 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், மேலே கடைசியாக நீங்கள் எழுதிய கருத்துக்கு நன்றி, உங்கள் முதலிரு வசனங்கள் தவிர ஏனைய அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.

சேர்ச்சில் பற்றி முனைவர் பட்டம் பெற்று எவரும் தமிழில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்தின் வரலாறு தொடர்பாகவோ இரண்டாம் உலகபோர்கள் தொடர்பாகவோ தமிழில் உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கம் இல்லை என்றால் அது சார்ந்த அறிவும் இல்லைதானே. (இவ்விடயப்பரப்புகளில் தமிழில் அறிவு இருந்திருந்தால் மேற்கின் அரசியல் சார்ந்த அறிவும் வளர்ந்திருக்கும். அது வளர்ந்திருந்தால் சர்வதேச அரசியலில் தன்னை நிலைநிறுத்தத் தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிந்திருக்கும். அது தெரிந்திருந்தால்....)

இது ஒரு நச்சுவட்டம். முனைவர் இல்லை என்பதால் உள்ளடக்கம் இல்லை; உள்ளடக்கம் இல்லை என்பதால் முனைவர் இல்லை. இங்கே ஓர் இடையீடு ஏற்பட வேண்டும். விரிவான உள்ளடக்கங்கள் உருவானால் அதுசார்ந்து அறிவுத்தொகுதி விருத்தியாகும். அதுவே தேவை.

உள்ளடக்கம் இருந்தால் அது விரிவடைவது இலகுவானது. நான்கு பந்திக் கட்டுரையினை வைத்துக் கொண்டு பத்து மேற்கோள்களைத் தொகுக்க இரண்டுபேர் தான் இருக்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் தமிழில் உள்ளடக்கம் இல்லை என்பதுதான். ஆங்கிலம் சார்ந்து இயங்கும் பல்லாயிரம் தமிழர்கள் இருந்தும் அதுசார்ந்த அறிவுச் செயற்பாடு தமிழில் இல்லாமைக்கான காரணங்களுள் ஒன்று உள்ளடக்கமின்மையே.

அறிவுச்செயற்பாடுகள் Snowball effect போன்றது. ஆரம்பத்தில் மெதுவாகச் சென்றாலும் பின்னர் வேகம் பெற முடியும். சேர்ச்சில் பற்றிய மேற்கோள்கள் தேவையில்லை என நான் சொல்ல வரவில்லை. தமிழ் விக்கிப்பீடியா ஆழமான கலைக்களஞ்சியமாக வளர்ந்தால் அறிவுச்செயற்பாடுகள் பின்னர் வேகமெடுக்கும்; பலர் வருவார்கள் என்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலேயே செய்திகளும் மேற்கோளும் அகரமுதலியும் விக்கிமூலமும் தொடங்கப்பட்டிருந்தால் அதாவது உழைப்புச் சிதறடிக்கப்பட்டிருந்தால் த.வி. கூட இன்றுள்ள அளவுக்கு வளர்ந்திராது என்று நான் திடமாக நம்புகிறேன். இவ்வளவு வளர்ந்த பிறகும் அது ஆழம் பெறாத நிலையில் ஏனைய திட்டங்கள் அதற்கான முழுப்பயனைத் தராது.

இது விக்கி. யார் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அதுகூடத் தெரியாமல் நான் இங்கே உரையாடவில்லை. கனகு போன்றோர் விக்கிசெய்திகளில் பங்களித்தமை வெறுமனே ஆர்வம் சார்ந்து என்று நான் நினைக்கவில்லை. தமிழ் உள்ளடக்கம் சார்ந்தே.

எல்லா விக்கிமீடியாத் திட்டங்களும் தமிழில் வெற்றிகரமாகச் செயற்பட வேண்டுமானால் த.வி. மிகவும் செழுமையுற வேண்டும். அவ்வாறு செழுமைப்படாத நிலையில் எல்லாத்திசைகளிலும் உழைப்புச் செலுத்தப்படுவது பயன் தராது. நன்றி. கோபி (பேச்சு) 16:22, 8 ஏப்ரல் 2014 (UTC)

தமிழ் கல்வி ஏன் இல்லை. ஏன் இல்லை என்றால் தமிழில் பாட நூல்கள் இல்லை. இது பொய். அவர்களுக்கு அரசியல் துணிவு இல்லை. தமிழில் உள்ளடக்கமின்மைக்கு காரணம் தமிழில் கல்வி இல்லாமையே. இதை அடித்துச் சொல்ல முடியும். இருக்கும் உள்ளடக்கம் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களாளேலேயே பெரிதும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஈழத்தமிழர்களால்.
மேலும் மேலும் கொள்கைகளை, வழிகாட்டல்களை இறுக்குவதால் "விக்கி. யார் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" என்பதைக் கட்டுப்படுத்துகிறோம்.
உள்ளடக்கத்தை விரிவுபெற செய்ய ஒர் எளிய வழி: விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம். இதை நிறைவேற்றுவது. நான் தொடப்போவதில்லை. பட்டது போது. --Natkeeran (பேச்சு) 16:38, 8 ஏப்ரல் 2014 (UTC)
ஒரு பொதுவான வேண்டுகோள்: விக்கியில் பங்களிப்பது, ஒரு தன்னார்வப் பணி. 'இதைச் செய்வதால் என்ன பயன்?' என யாரையும் நாம் கேட்க வேண்டாம்; அவரவர்களுக்கு விருப்பமானதை, இயன்றதைச் செய்யட்டும். ஏனையத் திட்டங்களில் பங்களிப்பது குறித்த வினாக்களை எழுப்புதல், ஊக்கக் குறைவினை ஏற்படுத்தும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 10 ஏப்ரல் 2014 (UTC)

எல்லா விக்கித் திட்டங்களிலும் ஒரே குழுவினரே ஈடுபடுகின்ற நிலை இருக்கும்போது வளங்கள் சிதறும் என்கிற கருத்து உண்மைதான். இதில் கோபியோடு எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அத்துடன், "உள்ளடக்கங்கள் தம்முள் முழுமையாக இருக்கவேண்டும்" என்பது போன்ற கோபியின் நீண்ட நாள் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. கோபியின் இவ்வாறான சில நிலைப்பாடுகள் தமிழ் விக்கியில் ஆரம்ப காலத்திலேயே நமது கொள்கை உருவாக்கங்களில் நன்மை தரக்கூடிய தாக்கங்களைக் கொண்டிருந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அதே வேளை, பல்வேறு விக்கித் திட்டங்களையும் இணையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் பயனற்றது என்று ஒதுக்கிவிடலாம் என்று தோன்றவில்லை. இது குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லோருக்கும் கட்டுரைகளை எழுதும் ஆர்வம் இருக்கும் என்பதில்லை. மேற்கோள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட பலரை நான் சிறுவனாக இருந்த காலம் முதற்கொண்டே பார்த்திருக்கிறேன். இதுபோலவே விக்கி மூலத்துக்கான உள்ளடக்கங்களைச் சேகரிப்பதும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதிலிருந்தும் வேறுபட்டது என்பதுடன் இந்த விடயத்தில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விக்கிமேற்கோள், விக்கிமூலம் போன்றவற்றுக்குப் பங்களிப்புச் செய்வதற்கு சிறப்பான விடய அறிவு அதிகம் தேவையில்லை என்பதால் பள்ளிமாணவர்களைக் கூடுதலாக இதில் ஈடுபடுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இது அவர்களுக்குக் கட்டற்ற உள்ளடக்க உருவாக்கத்துக்கான ஒரு நுழைவாயிலாக அமையக்கூடும். தற்போது இத்திட்டங்களுக்குப் போதுமானவர்களைக் கவர முடியாமல் இருப்பதற்கு இத்திட்டங்களில் "critical mass" இல்லாமை ஒரு முக்கிய காரணம் எனலாம்.

தற்போது, விக்கிப்பீடியாவுக்கு வருபவர்களே அதனூடாகப் பிற விக்கித்திட்டங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் நிலையில், மேற்படி திட்டங்களில் "critical mass" ஐ உருவாக்குவதற்கு விக்கிப்பீடியர்களே உதவ வேண்டிய நிலையும் உள்ளது. நீண்டகால நோக்கில் பார்க்கும்போது மேற்குறித்த விக்கித் திட்டங்களை வளர்த்தெடுப்பதற்குத் தனித்தனிக் குழுக்கள் அமையும் என்பது எனது நம்பிக்கை. இவ்வாறான நிலையை அடைவதற்கான பாதையில் விக்கிப்பீடியர்கள் கொஞ்சம் வளங்களைச் செலவு செய்வதில் குற்றம் இல்லை என்பதே எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 03:45, 10 ஏப்ரல் 2014 (UTC)

நான் சர்ச்சிலின் அல்லது விவேகானந்தரின் அல்லது அண்ணாவின் அல்லது மற்றொருவரின் பல மேற்கோள்களை படிக்கிறேன் அவை எல்லாவற்றையும் விக்கிப்பீடியாவில் எழுத முடியாது, அவற்றை படித்ததால் விக்கிப்பீடியாவில் கட்டுரையை விரிவாக்கம் செய்யவேண்டுமா என்ன? அது தனி இது தனி அல்லவா?. விக்கி மேற்கோள்கள் இருந்தால் படித்த மேற்கோளை எழுதலாம் இல்லையெனில் படித்தது எனக்குள் மட்டும் இருக்கும். குறைந்த நேரம் பிடிக்கும் என்பதால் இதில் முனைப்பாக செயல்படாதபோது(சில சமயம் முடியாது :( ) அதில் ஈடுபடலாம். --குறும்பன் (பேச்சு) 01:32, 11 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 06:14, 11 ஏப்ரல் 2014 (UTC)

விக்கிமேற்கோள் பயன்படுவதில்லை என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை கோபி அது பயன்படும் இடங்கள் பற்றி தெரியாதவராக இருக்கலாம். சேகுவேரா, நேதாஜி, பிரபாகரன் போன்றவர்களின் மேற்கோள் பக்கங்கள் நான் பகிரும் போது எல்லாம் நிறைய பேர் படித்து விரும்பி இருக்கிறார்கள். அதுவும் ஈர்ப்பு கூட்டும் திட்டம் தான். விக்கி மேற்கோளில் வரும் பக்கங்கள் எல்லாம் தமிழ் விக்கியில் இணைக்கப்பட வேண்டும்.

திரை வசனக்களை எல்லம் விக்கியில் எழுத முடியாது. விக்கி மேற்கோளில் எழுதலாம். நேரம் செலவாவது எல்லாம் மிகக்குறைவே. அதனால் ஏற்படக்கூடிய நல்விளைவே அதிகம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:31, 11 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம் தமிழ் விக்கிமீடியா என்ற குடும்பத்தில் விக்கிப்பீடியா அண்ணா என்றால் விக்கிமேற்கோளும் ஏனைய பிறதிட்டங்களும் சகோதரர்கள். ஒரு குடும்பத்தில் அண்ணா மட்டும் கெட்டிக்காரனாகவும் ஏனையோர் அறிவில் (உள்ளடக்கத்தில்) குறைந்தவர்களாகவும் இருப்பதை யார் விரும்புவார்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 11 ஏப்ரல் 2014 (UTC)


ஒரு கலைக்களஞ்சியமாக தகவல்களைத் தருவதோடு முழுமையானப் பார்வையைப் பெற்றுக்கொள்ள இதுபோன்ற விக்கி துணைத்திட்டங்களின் தேவை கட்டாயம் என்பதே எனது கருத்து.

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியர்கள் மீதும், இந்தியா பற்றியும் ஏளனப்பார்வை கொண்டிருந்தார் என்று தகவலைக் குறிப்பிடுவது விக்கிப்பீடியாவாக இருந்தால், "இந்தியா விரைவாகப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காட்டுமிராண்டித் தனத்துக்குச் சென்று விடும்." என்று அவர் கூறிய மேற்கோள் விக்கிப்பீடியா தந்த தகவலோடு மேலதிகச் சிந்தனைக்கு உதவுவதாக இருக்கும். விக்கி மேற்கோள் இந்த வேலையையே செய்கிறது. இதை ஒரு உதாரணமாக மட்டுமே கூறுகிறேன். இந்த விக்கித்துணைத்திட்டங்கள் தான் முழுமையைத் தருகிறது. அதிகம் விக்கிப்பீடியாவில் பங்களிக்காத நான் விக்கிமேற்கோளில் கொஞ்சமாகப் பங்களிக்கக் காரணமே இதுதான். --தமிழினியன் (பேச்சு) 11:26, 12 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், செல்வகுருநாதன், மயூரநாதன், குறும்பன், தென்காசியார், சிறீகர்சன், தமிழினியன் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றிகள். உங்கள் கருத்துக்களை வாசித்த பின்னரும் எனது கருத்தில் மாற்றமில்லை. அது ஏன் என்பதனை முன்வைக்கிறேன்.

 • நான் விக்கிமீடியா நிறுவன விசுவாசி அல்லன். விக்கிமீடியா ஏன் ஒவ்வொரு திட்டத்தினையும் முன்வைக்கிறது என்பதற்கு ஆங்கிலச் சூழல் சார்ந்து அதற்கான தேவைகள் உள்ளன. தமிழ்ச் சூழலில் தமிழுக்கு என்ன தேவை என்பதனை மட்டுமே நான் கவனத்திலெடுக்கிறேன்.
 • தமிழில் என்ன தேவை, யார் என்ன செய்ய வேண்டும் என்பதனைத் தீர்மானிப்பதுவும் கோருவதும் கூட எனது நோக்கங்கள் அல்ல. ஒரு பயனராக எனது தேவைக்கு தமிழ் விக்கிப்பீடியா பயனுள்ளதா என்பதனை மட்டுமே பார்க்கிறேன். அது சார்ந்தே கோரிக்கை விடுகிறேன்.
 • மேற்கில் கடுங்குளிரில் போடும் கோட்டுக்களைக் கடும் வெயிலில் போட்டுக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து ஆனந்தமடைபவர்கள் நாம். அதனையே விக்கிமீடியாச் செயற்றிட்டங்களில் செய்கிறோம் என்பதே எனது ஆதங்கம். மாட்டுவண்டி ஓடும் தெருவில் பனிச்சறுக்குவண்டிகளைக் கொண்டுவந்து இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
 • மேற்குச் சூழலில் அறிவுத் துறைகளும் தகவற் திரட்டுக்களும் வளர்ந்துவந்த நெடிய வரலாறு உள்ளது. அந்த வரலாறே அவர்களது அறிவுத் தேவையினையும் அறிவு விருத்தியினையும் தீர்மானிக்கிறது. அதற்கேற்பவே அவர்களது செயற்றிட்டங்கள் தோன்றுகின்றன.
 • மேற்கில் அறிவுத்துறைகள் பல்கலைக்கழகங்கள் சார்ந்தும் ஆய்வு நிறுவனங்கள் சார்ந்தும் பல நூற்றாண்டுகளாக விரிவாக முன்னெடுக்கப்பட்டது. தகவற்குவிப்பு மிகப்பெருமளவில் நடந்துவந்துள்ளது. அவர்களது பல்கலைக்கழகங்களும் நூலகங்களும் அதற்கான சான்றுகள்.
 • கலைக்களஞ்சியக் கலை என்ற ஒன்றே மிகப்பிரமாண்டமானது. வணிக ரீதியில் கலைக்களஞ்சியங்களைத் தொகுக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியும் விரிவுமே ஆங்கில விக்கிப்பீடியா.
 • தமிழில் தமிழ்க் கலைக்களஞ்சியம், அதன்பின்னர் வந்த வாழ்வியல், அறிவியல் களஞ்சியங்கள் மற்றும் மருத்துவக் களஞ்சியம் போன்ற மிகச்சிலவே உள்ளன. அவற்றிலிருந்து இன்ன்னொரு பாய்ச்சலுக்குத் தயாராவதற்கான சொற்கள், உள்ளடக்கம், அறிவு என்பனகூட தமிழில் இல்லை.
 • இந்த நிலையில் தமிழ்ச் சூழலுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் தேவையும் முக்கியத்துவமும் ஆங்கில விக்கிப்பீடியாவைவிட முற்றிலும் மாறுபட்டது; பிரமாண்டமானது.
 • விக்கிமேற்கோள்கள், விக்கிச்செய்திகள் தமிழுக்குத் தேவையே இல்லை என நான் சொல்லவரவில்லை. அவற்றினை விட த.வி அவசியமானது என்கிறேன். அதற்கு வளங்கள் குவிக்கப்படவேண்டுமென்கிறேன்.
 • அவை தேவை என்பது வேறு; அவற்றினை த.வி.க்குச் சமனாகப் பார்ப்பது என்பது வேறு. அப்படிப் பார்ப்பதனூடாகத் தமிழில் அறிவுச்செயற்பாடுகளில் ஈடுபட நினைப்போருக்குத் துரோகமிழைக்கப்படுகிறது.
 • நீங்கள் சொல்வீர்கள் அவரவர் அவரவர்க்கு ஆர்வமான விதத்தில் தான் பங்களிக்க முடியும் என. அவ்வாறே ஆகுக. நன்றி கோபி (பேச்சு) 14:23, 12 ஏப்ரல் 2014 (UTC)
தனது கருத்தோடு ஒத்துப் போகாதவர்களை கிண்டல் செய்வது, தமிழ் விக்கியில் அதிகரித்துவிட்டது. தொடர்ந்து இப்பகுதியில் உரையாடுவதை விட்டுவிட்டு ஏதேனும் ஒரு கட்டுரையில் என்னால் இயன்ற ஏதேனும் முன்னேற்றங்களை செய்ய முயற்சி செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:08, 12 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் விக்கிப்பீடியாவின் கடவுச்சொல்லை மாற்றவும்[தொகு]

Websites are racing to patch the Heartbleed bug, the worst security hole the Internet has ever seen. Change these passwords now (they were patched)

 • Google, YouTube and Gmail
 • Facebook
 • Yahoo, Yahoo Mail, Tumblr, Flickr
 • OKCupid
 • Wikipedia

--குறும்பன் (பேச்சு) 20:56, 11 ஏப்ரல் 2014 (UTC)

2014 விக்கிமேனியா[தொகு]

2014 விக்கிமேனியாவில் கலந்து கொள்வோர் / கலந்து கொள்ள எண்ணியிருப்போர் இங்கு தெரிவிக்க இயலுமா? ஏனெனில், உதவித் தொகை விண்ணப்பித்த சிலர் தங்களுக்கு வாய்ப்பு உண்டா இல்லையா என்று தெளிவின்றி உள்ளனர். நன்றி. --இரவி (பேச்சு) 10:47, 14 ஏப்ரல் 2014 (UTC)

இரவி, எனக்குத் தெரிந்து சுமார் 1168 நபர்கள் விக்கிமேனியாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களுள் 580 நபர்கள் இரண்டாம் கட்ட தகுதித்தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 நபர்களுக்கு 100% உதவித்தொகை கிடைக்கும். பிற நபர்களுக்கு பகுதி அளவு உதவித்தொகையும், சிலருக்கு வேறு நிறுவனம் அளிக்கும் உதவித்தொகையும் வழங்கப்படும். தமிழ் விக்கிப்பீடியர்கள் எவ்வளவு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற கணக்குத் தெரியவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:01, 16 ஏப்ரல் 2014 (UTC)
என்னுடைய பெயர் இரண்டாம்கட்டத்தேர்வுக்குச் சென்றுள்ளதாக மடல்வந்துள்ளது. அவர்களது முடிவுக்கு முன்னர் (ஒருவேளை உதவித்தொகை கிடைத்தால்) செல்வதா வேண்டாமா என நானும் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். போவதாக இல்லை எனில் விரைந்துதெரிவிப்பேன். -- சுந்தர் \பேச்சு 07:44, 19 ஏப்ரல் 2014 (UTC)

குறும்பக்கங்கள் துப்புரவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கிலோ பைட்டுக்கும் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 2724. அதாவது, மொத்தக் கட்டுரைகளில் 4.4%. ஒரு Tweet கூட 140 எழுத்துகளைக் கொண்டிருக்கும் காலத்தில் அவற்றை விடச் சிறிய கட்டுரைகளை கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக கொண்டிருப்பது முரணாக உள்ளது. இவற்றில் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களையும் கூடுதல் உள்ளடக்கம் சேர்க்க வாய்ப்பில்லா பக்கங்களையும் விட்டால் கூட, முக்கியமான பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக விரிவு பெறாமல் உள்ளன. இவற்றை விரிவாக்கும் நோக்கில், கவன ஈர்ப்புக்காகவும் துப்புரவுப் பணிகளைப் பின்தொடரவும் குறித்த கால நீக்கல் வார்ப்புரு உள்ளிட்ட பராமரிப்பு வார்ப்புருக்கள் இடப்பட்டு வருகின்றன.

பார்க்க: பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்

இவற்றில் உங்களால் மேம்படுத்தக்கூடிய பக்கங்களை விரிவாக்கி உதவ வேண்டுகிறேன். எந்த நேரத்திலும் இப்பகுப்பில் 100 கட்டுரைகளுக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள உறுதியளிக்கிறேன். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு கட்டுரைகள் வைத்தாலும் கூட மாதம் 100 கட்டுரைகளை மேம்படுத்தலாம். மூன்று அல்லது நான்கு பேர் நாளும் ஒரு கட்டுரையை விரிவாக்கினாலும் போதும். என்னளவில் நான் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை மேம்படுத்த உறுதியளிக்கிறேன். இன்னும் பலர் இத்துப்புரவுப் பணியில் இணைந்து கொண்டால் நன்றாக இருக்கும். இதற்கான பங்களிப்புகளைத் தூண்டும் வகையில் தள அறிவிப்பு, அண்மைய மாற்றங்கள் ஆகியவற்றில் தூண்டல்கள் இட உள்ளேன். இவற்றுக்கான வரவேற்பைப் பொருத்து எதிர்காலத்தில் எவ்வாறு துப்புரவைச் சிறப்பாக மேற்கொள்ளலாம் என்று உத்திகள் வகுக்கலாம். எனவே, தகுந்த காரணமோ கட்டுரையில் மேம்பாடோ இன்றி துப்புரவு வார்ப்புருக்களை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:10, 15 ஏப்ரல் 2014 (UTC)


குறுங்கட்டுரைகள், எற்கனவே உள்ள கொள்கைகளுக்கு (3 வரிகள்) ஏற்ப உருவாக்கப்பட்டு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம். மேம்படுத்துக, விரிவாக்குக என்ற ஒரு புதுப் பகுப்புக்குள் சேர்க்கவும். 3 வரிக் கட்டுரைகள் ஏற்கப்படுவதில்லை என்று கொள்கை வகுப்பதாயின், வழமை போல இணக்க முடிவு எடுத்துச் செய்யவும். --Natkeeran (பேச்சு) 19:00, 15 ஏப்ரல் 2014 (UTC)
குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களை எதிர்கொள்ளும் பின்வரும் கட்டுரைகளை விரிவாக்கி உதவுங்கள் எனும் தூண்டல் அறிவிப்பிற்கு, தொடர் பங்களிப்பாளர்கள் செவிசாய்த்து விரிவாக்குவதை காண்கிறோம். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் நாம் ஈடுபடவேண்டும் என்பது எனது ஆசை! இது தொடரவேண்டும் என்பது எனது பேராசை!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 17 ஏப்ரல் 2014 (UTC)
நானும் இதில் பங்களிக்கத் தொடங்கியுள்ளேன். வழக்கம்போலவே இதிலும் வாரம் 7 கட்டுரைகள் என இலக்கு வைத்து பங்களிக்கலாம் என எண்ணியுள்ளேன்.ஆர்.பாலா (பேச்சு) 11:29, 17 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:01, 17 ஏப்ரல் 2014 (UTC)

கொலம்பியா பிக்சர்ஸ் கட்டுரையை விரிவாக்கிவிட்டேன். தொடர்ந்து ஏனைய கட்டுரைகளையும் விரிவாக்குகின்றேன். மீடியாவிக்கி:Recentchangestext இல் விரிவாக்கிய கட்டுரைகளை நீக்கி புதிய மீகுறுங்கட்டுரைகளை சேர்க்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். அனைவரும் ஆர்வமாகக் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:11, 17 ஏப்ரல் 2014 (UTC)

குறுங்கட்டுரைகள் விரிவாக்கத்தில் பங்களிக்கும் அனைவரையும் கண்டு நானும் மகிழ்கிறேன். பங்களிப்புகளைக் கூட்டும் வண்ணம் குறிப்பிட்ட கட்டுரைத் தலைப்புகளில் ஆர்வமுடைய பங்களிப்பாளர்கள், கட்டுரைகளை உருவாக்கியவர்கள், தொடர்புடைய திட்டங்கள் ஆகியவற்றிலும் அறிவிப்புகளை இடலாம்.

நற்கீரன், பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு பார்த்தால், ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ள பல பணிகளைக் காணலாம். எனவே தான், குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுக்கிறோம். கட்டுரைகளை நீக்கியே தீர்வது இங்கு நோக்கம் இல்லை. மேம்படுத்தவே முடியாத அல்லது ஆர்வமூட்டாத பல கட்டுரைகளை விடுத்து, பலரும் பங்களிக்கக் கூடிய தலைப்புகளுக்கு மட்டுமே இப்போது வார்ப்புரு இட்டு வருகிறேன். கடந்த இரு நாட்களில் மட்டும் தோராயமாக 15 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில மிகச் சிறப்பாக விரிவாக்கப்பட்டுள்ளன. இதே உற்சாகத்தைத் தக்க வைக்கும் வகையிலும் அதே வேளை விக்கிச் சமூகத்துக்கு அழுத்தம் கூட்டா வகையிலும் தொடர்ந்து செயற்படுவோம்.

எது போதிய உள்ளடக்கம் என்பது தொடர்பான கொள்கை உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் மேற்கொள்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:25, 17 ஏப்ரல் 2014 (UTC)

வார்ப்புருவை மாற்றுக - நீக்க -> விரிவாக்குகள்[தொகு]

ஆக்கபூர்வமான அணுகுமுறையை வரவேற்கிறேன். நீக்குக என்ற வார்ப்புருவை மாற்ரி விரிவாக்கு என்ற வார்ப்புருவை இடுவது இந்த அணுகுமுறைக்குப் பொருந்தும். ஆட்சோபனை இல்லாவிடின், அந்த மாற்றத்தை நான் செய்கிறேன். நீக்க என்ற வார்ப்புரு, விதிகளை மீறிய கட்டுரைகளுக்கு மட்டும் இடவும். --Natkeeran (பேச்சு) 15:48, 17 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன் சொல்வது சரியென்று எனக்குத் தோன்றுகிறது. புதிதாக எழுதப்படும் 'விதிகளை மீறும் கட்டுரைகளுக்கு' அண்மைக்காலங்களில் நாம் செய்து வருவதைப்போல நீக்கல் வார்ப்புருவினை இடலாம். ஆனால், முன்பு எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு 'விரிவாக்குக' எனும் புதிய வார்ப்புருவினை இடலாம். மனித வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும் நமது தமிழ் விக்கியில் இந்த அணுகுமுறையினால் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 18 ஏப்ரல் 2014 (UTC)
எவ்வளவு காலத்திற்கு? இங்கு தேங்கியுள்ளவற்றுடன் இன்னும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? கால எல்லை இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது.--AntonTalk 03:37, 18 ஏப்ரல் 2014 (UTC)
@அன்டன்... புதிதாக எழுதப்படும் குறுங்கட்டுரைகளுக்கு (போதிய தகவல்கள் இல்லாதவை) நீக்கல் வார்ப்புரு இடுவதை நாம் strictஆக தொடருவதால், தேங்கியுள்ளவைகளின் எண்ணிக்கை மேற்கொண்டு உயராது என்பதே எனது கருத்து. தேங்கியுள்ளவைகளை தூண்டுதல் அறிவிப்புகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊக்கங்களின் மூலமாகவும் நம்மால் குறைக்க இயலும் என திடமாக நம்புகிறேன். தேவைப்படின் வார்ப்புரு:Refimproveஇல் இருப்பது போன்று உறுதியான வாசகங்களை புதிய வார்ப்புருவில் இடலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 18 ஏப்ரல் 2014 (UTC)
செல்வசிவகுருநாதன், உங்கள் நம்பிக்கை நியாயமானதே. பொறிமுறை இல்லாவிட்டால் எதுவும் நிகழாது என்பதுதான் என் வாதம். மேலும், துப்புரவு பணியில் ஈடுபடும் பயனர் எண்ணிக்கையையும் அவர்களின் உற்சாகத்திற்குத் தடைவிதிக்கும் செயற்பாடுகள் பற்றியும் கருத்திற் கொள்வது அவசியம். வெறுமனே கட்டுரைகள் உருவாகிக் கொண்டிருந்தால் தரமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் (Quantity vs. Quality). எ.கா: மூலக்கூற்றுப் பொறியியல் (Molecular engineering) பற்றி அறிந்து கொள்ள முனையும் ஒருவருக்கு த.வி.யால் எந்தளவிற்கு உதவ முடியும்? அகரமுதலியாக அக்கட்டுரை உள்ளது. வார்ப்புரு:Refimprove என்ற வார்ப்புருவோடு வருடக் கணக்கில் இருக்கும். --AntonTalk 04:24, 18 ஏப்ரல் 2014 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது எவ்வளவு எவ்வளவு முக்கியமோ அதேபோல எழுதப்படும் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமானவையாக உள்ளனவா? அதன் தரம் குறித்த கொள்கைகளுக்கு அமைவாக உள்ளனவா என்பதைக் கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியமே. அதனால், கட்டுரைகளின் பொருத்தத்தன்மை, தரம் போன்றவை குறித்து, வார்ப்புரு இடுவதும் தேவையான ஒன்று என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்காது என எண்ணுகிறேன். எனவே, இவ்விரு முக்கியமான பணிகளில் ஈடுபடுவோரும் "தரமான தமிழ் விக்கிப்பீடியா" என்ற ஒரே நோக்கத்துக்காகவே செயல்படுகிறோம் என்பதை மனதிற்கொண்டு செயல்பட வேண்டும்.
கட்டுரைகளைப் பொறுத்தவரை தம்முள் முழுமையான கட்டுரைகளை எழுதவேண்டும் என்னும் இலக்கு சரிதான். ஆனால், விக்கிப்பீடியாவில் குறுங் கட்டுரைகள் எழுதுவது குற்றம் அல்ல என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம். குறுங்கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் எழுதப்படுவதில்லை. மில்லியன் கணக்கில் கட்டுரைகளையும், ஆயிரக்கணக்கில் முனைப்பான பங்களிப்பாளர்களைக் கொண்ட ஆங்கில விக்கியிலும்கூடக் குறுங்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கூட்டு முயற்சியாகக் கட்டுரைகளை எழுதுவது என்னும் சூழலில் குறுங்கட்டுரைகளுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. திட்டத்தின் தொடக்க நிலைகளில் கட்டுரை எண்ணிக்கையை விரைவாகக் கூட்டும் எண்ணம், பங்களிப்பதற்குக் குறைவான நேரமே ஒதுக்கக்கூடியவர்கள் படிப்படியாக விரிவாக்கலாம் என்னும் எண்ணத்தில் எழுதுதல், குறித்த ஒரு தலைப்பில் கட்டுரை இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றவர்கள் விரிவாக்குவதை எதிர்பார்த்து தமக்குத் தெரிந்ததை எழுதுதுதல், புதிய பயனர்கள் ஆரம்ப முயற்சியாக எழுதுதல் என்பன போன்ற பல வழிகளில் குறுங்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அவசியமானவையே. அதனால், இந்த வகையில் தமிழ் விக்கிக்குப் பங்களிப்புச் செய்பவர்களுக்கு உற்சாகக் குறைவை ஏற்படுத்தும் வகையில் வார்ப்புருக்கள் இடுவதைத் தவிர்ப்பது நல்லது. சில வேளைகளில் நீண்டகாலப் பயனர்களுக்கே சலிப்பை உண்டாக்கும் வகையில் வார்ப்புருக்கள் இடப்படுகின்றன.
தொடக்கத்தில் நான் பல குறுங்கட்டுரைகளை எழுதியிருப்பதும் அவற்றுட் பல இன்னும் இருப்பதும் உண்மைதான் ஆனால் அண்மைக் காலங்களில் சான்றுகள் போன்றவற்றோடு கூடிய ஓரளவு முழுமையான கட்டுரைகளையே எழுதிவருகிறேன். சில நாட்களுக்கு முன் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தேன். இடையில் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பிவரும் முன்பு ஒரு பயனர் "சான்றில்லை" என்று வார்ப்புரு இட்டுவிட்டார். இது போன்ற செயற்பாடுகளைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுரைகள் எழுதப்பட்ட பின்னர் சில நாட்கள் விட்டுவிட்டு வார்ப்புரு இடுவது நல்லது.
அதே வேளை கட்டுரை எழுதுபவர்களும், தமிழ் மக்களுக்குப் பயனுள்ளவையாக அமையும் வகையில் கூடிய வரை போதிய தகவல்களைக் கொண்டவையாகக் கட்டுரைகளை எழுதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அத்துடன், தரம் காப்பதற்காக வார்ப்புரு இடுவதன் தேவையை உணர்ந்து அப்பணியில் ஈடுபடுபவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களது ஊக்கத்தைக் குறைக்காமல், உரிய வகையில் கலந்துரையாடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

---மயூரநாதன் (பேச்சு) 09:08, 18 ஏப்ரல் 2014 (UTC)

பகுப்பு நீக்க வேண்டுகோள்[தொகு]

பகுப்பு:உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்டக்காரர்கள் இப்பகுப்பானது ஒரு பொருத்தமற்ற பகுப்பு என நினைக்கின்றேன். உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்டக்காரர்கள் என்று யாரையும் வகைப்படுத்திவிட முடியாது. பிற பயனர்களின் கருத்துக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:45, 16 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--✍☪mohamed ijazz☪® (பேச்சு) 06:10, 16 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 02:40, 17 ஏப்ரல் 2014 (UTC)

இது போன்ற வேண்டுகோளைப் பகுப்பின் பேச்சுப் பக்கத்திலேயே இட்டால் மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:01, 17 ஏப்ரல் 2014 (UTC)

நான் முன்னர் பணிபுரிந்த ஈராக் நாட்டில் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கர் ஒருவருக்கு கிரிக்கெட் பேஸ்பால் போன்றது என்று விளங்கப்படுத்தியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. துடுப்பாட்டக்காரர்கள் என்ற பகுப்பு போதுமானது எனநினைக்கிறேன். --உமாபதி \பேச்சு 07:58, 18 ஏப்ரல் 2014 (UTC)

பெயரிடல் மரபு[தொகு]

முனைவர் பட்டம் பெற்ற நபர்களின் கட்டுரைக்கு முன்பு முனைவர் என்று இடுவது விக்கிப்பீடியா:பெயரிடல் மரபிற்கு எற்ப சரியானதா? அவ்வாறு முனைவர் என்ற முன்னொட்டுச் சுட்டியுடன் வழிமற்றுப்பக்கங்கள் இருக்கலாம் ஆனால் சில கட்டுரைகளும் அவ்வாறு உள்ளன. அவ்வாறான கட்டுரைகள்,

இக்கட்டுரைகளை சரியான தலைப்பிற்கு நகர்த்தலாமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:13, 16 ஏப்ரல் 2014 (UTC)

முனைவர் என்ற பட்டம் தலைப்பில் இருக்கக்கூடாது. மலையமான் (எழுத்தாளர்) என்று வேண்டுமானால் இருக்கலாம். கட்டுரையினுள் அவரின் முனைவர் பட்டம் பற்றி குறிப்பிடலாம். --குறும்பன் (பேச்சு) 02:00, 17 ஏப்ரல் 2014 (UTC)

இது போன்ற ஐயங்களை குறித்த பேச்சுப் பக்கத்திலேயே இட்டால் மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:02, 17 ஏப்ரல் 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:34, 18 ஏப்ரல் 2014 (UTC)