விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPI
WP:VPIL
WP:VPD
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்குமுன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளங்கள்:
« பழைய உரையாடல்கள்


பொருளடக்கம்

விமானச் சேவைகள்[தொகு]

ஸ்ரீலங்கன் எயர்லைன்சு, நேபாள் ஏர்லைன்சு என்றவாறு நிறுவனப் பெயர்களை எழுதிக் கொண்டிருக்காமல் ஸ்ரீலங்கன் விமானச் சேவை, நேபாள விமானச் சேவை, இந்திய விமானச் சேவை (Indian Airlines), இந்திய வான் வழிகள் (Indian Airways) என்றவாறு மொழிபெயர்த்துத் தலைப்பிடுவது சாலச் சிறந்ததென்று நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:40, 9 நவம்பர் 2015 (UTC)

ஐபிஎம் என்ற நிறுவனத்தை சவஎ என்று எழுதலாமா அதாவது சர்வதேச வணிக எந்திரம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அவர்களாக வழங்காத வரை நாம் மாற்றினால் யாருக்கும் புரியாது என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு)

ஐபீஎம் என்பது சொற்குறுக்கம். முழுமையான சொல்லன்று. முழுமையான சொற்பொருளிருந்தாலும் அவர்களே சொற்குறுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் எயர்லைன்ஸ் என்பது முழுமையான சொல். எனவே, அதனை மொழிபெயர்க்கலாம். ஹார்வார்டு யுனிவர்சிட்டி என்றிருப்பதை நாம் அப்படியே பயன்படுத்துகிறோமா? ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்று பெயரல்லாத சொல்லை அதிலிருந்து மொழிபெயர்க்கிறோம். ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்பது அவர்களாக வழங்கியதல்ல.--பாஹிம் (பேச்சு) 05:36, 10 நவம்பர் 2015 (UTC)

 • ஐ.பி.எம் என எழுதுவது நல்லது. அல்லது ஐபியெம் என்று எழுதவேண்டும். சில வணிகப்பெயர்கள் சிறியபெரிய உரோமன் எழுத்துக்கலவையாகவும் இருக்கும். இவற்றைத் தமிழில் அப்படியே காட்டல் இயலாது. ஆர்வர்டு பல்கலைக்கழகம் என ஒரு பகுதியை மொழிபெயர்ப்பது போல செய்வது தவறன்று. எசுப்பானியத்தில் Universidad de Harvard எனக் குறிக்கின்றனர். யார் எந்தமொழியில் எப்படிச்செய்தாலும், நம்மொழியில் ஒன்றை எப்படி எழுதவேண்டும் என்பது நம் உரிமை. இது வரட்டு கவுரவம் அன்று. தேவையையும் இயைபுடைமையையும் பொருத்தது. சீராக எழுதிவருவது நல்லது. Ivory Coast என ஆங்கிலத்தில் வழங்குவது உண்மையில், அவர்கள் நாட்டில் Côte d’Ivoire. நாம் தந்தக்கரை, கோட்டுக் கரை என ஏதேனும் ஒரு சீரான பெயரால் வழங்குவது தவறு இல்லை. ஐவரி கோசுட்டு என்று எழுதினாலும் பிழையில்லை. ஏர்லைன்சு, ஏர்வேசு என்று எழுதலாம், இந்திய வான்வழிச்சேவை என்பது போலும் எழுதலாம். ஆனால் சீர்மை முக்கியம். சிறீலங்கன் வான்வழிச்சேவை, நேபாள வான்வழிச்சேவை என்பன பொருந்தலாம். --செல்வா (பேச்சு) 05:55, 10 நவம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் இன்னுமொன்று: இந்திய இரயில்வே என்பதும் தமிழ்-ஆங்கில கலப்பாகவுள்ளது. இன்டியன் ரயில்வேஸ் என்பதா இந்திய தொடர்வண்டிப் போக்குவரத்து என்பதா? --AntanO 06:03, 10 நவம்பர் 2015 (UTC)
இந்திய இரயில்வே என்றாலே போதும். இந்திய இரயில்வேசு என்று எழுதத்தேவையில்லை. தேவையெனில் எழுதலாம். இந்தியத் தொடர்வண்டி (இது ஒருவண்டிதானோ என்னும் ஐயம் எழும், ஆனால் பழக்கத்தால் எதைக் குறிக்கின்றோம் என்பது விளங்கும்) என்றே சுருக்கவும் செய்யலாம். இந்தியத் தொடர்வண்டிநிறுவனம் என்று நீட்டியும் சொல்லலாம். தொடர்வண்டி என்பது ஊடகத்தில் நன்கு பரவி வருகின்றது. oneindia, webdunia, தினமணி, சீனச் செய்தி நிறுவனம், விகடன் இப்படிப் பல செய்தியூடகங்கள் தொடர்வண்டி எனப் பயன்படுத்துகின்றது. ஒவ்வொரு செய்தியிலும் 5 முதல் 10-12 தடவை வரை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.--செல்வா (பேச்சு) 06:23, 10 நவம்பர் 2015 (UTC)


100,000 கட்டுரைகள்[தொகு]

100,000 கட்டுரைகள்

2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிட திட்டங்களுக்காக முன்மொழிவை இங்கு பதிவிடுகிறேன். நீக்கப்படக்கூடிய கட்டுரைகள் போக 82,200 கட்டுரைகள் உள்ளதாகக் கொள்வோமாயின், 100,000 கட்டுரைகளுக்கு 17,800 கட்டுரைகள் தேவை. ஆகவே, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 30 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போதைய புதிய கட்டுரைகளின் சராசரி 15 கட்டுரைகள். முனைப்பான பங்களிப்பாளர் ஒருநாளைக்கு 2 கட்டுரைகள் உருவாக்கினால் 2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிடும்.

ஒரு மாதம் மட்டுமே இடம்பெற்ற ஆசிய மாதம் 2015 திட்டம் 265 (நிகர) கட்டுரைகளை பெற்றுளளது. ஆனால், இதன் மொத்தம் சுமார் 275 இருக்கலாம். கிட்டத்தட்ட 9 கட்டுரைகள் ஒரு நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொரும்பாலான (236) கட்டுரைகள் 300 சொற்களைத் தான்டியவை ஆகும். குறுங்கட்டுரைகளா எழுதியிருந்தால் கிட்டத்தட்ட 500 இற்கு மேலான கட்டுரைகளை உருவாக்கியிருக்கலாம்.

என்ன செய்யலாம்?
 • முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையக் கூட்டுவது.
 • முனைப்பான பங்களிப்பாளர்களை ஒருநாளைக்கு குறைந்தது 2 கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பது.
அதற்காக:
நன்மைகள்
 • 1000, 2000, ..... கட்டுரைகளை உருவாக்கிய பயனர்கள் பலர் கிடைப்பர்.
 • பல...
இல்லாவிட்டால்
 • தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை அடைய (தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குப்படாதவிடத்து) இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பயனர்களின் கருத்தும் ஆதரவும் இருப்பின், முதற்கட்டமாக 3 மாதங்களுக்காக விக்கி கோப்பையை ஆரம்பிக்கலாம். --AntanO 07:12, 25 திசம்பர் 2015 (UTC)

AntanO அவர்களே, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. த. விக்கியின் 60,000மாவது கட்டுரை 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் (20 மாதங்கள்) கடந்த பின்னரே சென்ற ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விக்கியின் 70,000மாவது கட்டுரை உருவாக்கப்பட்டது. அதற்கும் மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில் 12,000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது, த.விக்கியின் அபரிமித வளர்ச்சியைக் குறித்து நிற்கின்றது. வெகு விரைவிலேயே 100,000கட்டுரைகள் எனும் இலக்கை எட்டிவிடலாம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை! நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:47, 25 திசம்பர் 2015 (UTC)

விக்கிக் கோப்பையை ஆரம்பிக்க எனது ஆதரவை வழங்குகிறேன் அன்டன். 100 விக்கிநாட்கள் மற்றும் 365 விக்கிநாட்கள் என்பன சலிப்பை ஏற்படுத்தக் கூடியன. தனித்துச் செயற்பட வேண்டும். விக்கிக் கோப்பை என்றால் போட்டியாக ஒரு உந்துசக்தியுடன் செயற்பட முடியும். சலிப்பை ஏற்படுத்தாதவாது விக்கிக் கோப்பையை வடிவமைக்கவும் வேண்டும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:14, 25 திசம்பர் 2015 (UTC)
100,000 என்ற இலக்கு நோக்கி இல்லாவிடினும் இத்தகைய போட்டிகள் பயனர்களுக்கு ஓர் உந்துதலாகவும் சலிப்பை அகற்றுவதாகவும் இருக்கும். ஆயினும் போட்டியை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டுரையாக்கத்தினை தவறாகப் பயன்படுத்துவோரை கண்காணிக்க வேண்டியிருக்கும். மாற்றாக ஆசிய மாதம் போல வெவ்வேறு தலைப்புகளில் மாதவாரியாக போட்டி நடத்தலாம். காட்டாக, சனவரி வரலாறு மாதம், பெப்ரவரி ஒலிம்பிக் போட்டிகள் மாதம், மார்ச்சு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்/ அரசியல் மாதம், ஏப்ரல் இலக்கியவாதிகள் மாதம், மே பறவைகள்/தாவரங்கள் மாதம் என்றவாறு...அந்தந்த மாதங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆண்டு நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடையாளப் பரிசுகள் தரலாம். --மணியன் (பேச்சு) 15:32, 25 திசம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--AntanO 15:34, 25 திசம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 16:08, 25 திசம்பர் 2015 (UTC)
அன்டனுடைய முயற்சியை வரவேற்கிறேன். நிச்சமாக தற்போது கட்டுரைகள் உருவாகும் வேகத்தைக் கூட்டவேண்டியது அவசியமானது. விக்கி கோப்பை போன்றவற்றின் மூலம் கட்டுரை உருவாக்கத்தின் வேகத்தைக் கூட்டவும், அதேவேளை பங்களிப்பவர்களைச் சோர்வின்றி உற்சாகமாக வைத்திருக்கவும் முடியும். ஆனால், இதன்மூலம் ஏறத்தாழ 18,000 கட்டுரைகளை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள், விக்கிப்பீடியா:விக்கி365 போன்றவை ஆதவன் எடுத்துக்காட்டியது போல் சலிப்பூட்டக்கூடியவையே. இதில் போதிய பலன் கிடைப்பது கடினம். எனவே 18,000 கட்டுரைகளை ஒரே ஆண்டில் உருவாக்க வேண்டுமானால் இவ்விடயத்தைப் பல வழிகளில் அணுகவேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கெனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் அப்பால், புதியவர்களின் பங்களிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் இலக்கை சுலபமாக அடையமுடியும்.
அளவுக்கு அதிகமாகத் தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு கட்டத்திலும் தானியங்கிக் கட்டுரைகள் 10%க்கும் குறைவாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. தற்போதைக்கு, அன்டனின் கருத்துப்படி விக்கிக்கோப்பையைத் தொடங்கலாம். இதில் படிப்படியாக பல குழுக்கள் நீக்கப்பட்டுவிடும் ஆதலால், பிற்பகுதியில் உருவாகும் மொத்தக் கட்டுரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வேறு ஏதாவது ஒழுங்குகளின் மூலம் பிற்பகுதியிலும் எல்லோரும் தொடர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். மணியனின் முன்மொழிவையும் கருத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 17:28, 25 திசம்பர் 2015 (UTC)

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கிக்கோப்பை பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விக்கிக்கோப்பை பற்றிய மேலதிக உரையாடல்களைத் தொடரலாம். அங்கு பெறப்படும் முடிவுகளின்படி இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் தேவையான பகுதிகள்: காலம், தலைப்பு, புள்ளி முறை ஆகியன. --AntanO 19:27, 25 திசம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 14:07, 27 திசம்பர் 2015 (UTC)

புதிய முனைப்பான பயனர்களைப் பெறுதல், ஏற்கனவே உள்ளவர்களைத் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை உறுதி செய்யும் போது எல்லாம் தரமான கட்டுரை எண்ணிக்கை தானாகவே கூடுவதைக் கண்டிருக்கிறோம். 17,800 கட்டுரைகள் என்றால் மலைப்பாக உள்ளது மாதம் 1,500 கட்டுரைகள் என்றால் இலகுவாக இருக்கிறது. பல மாதங்கள் இயல்பாகவே ஆயிரம் கட்டுரைகள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். பொதுவாக, நாம் கட்டுரை எண்ணிக்கை இலக்குகளை வைப்பதில்லை என்றாலும் பல பயனர்கள் தாமாகவே இந்த இலக்கு நோக்கி உழைப்பதாக தங்கள் பயனர் பக்கங்களில் அறிவித்திருக்கும் பின்னணியில், இம்முனைவு ஏற்புடையதாக இருக்கிறது. கூகுள் ஒளியுணரி துணை கொண்டு, நாம் கொடையாகப் பெற்ற கலைக்களஞ்சியம் தரும் தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொணர்ந்து இற்றைப்படுத்தலாம். இந்த வகையில் முக்கியமான தலைப்புகளில் சில ஆயிரம் கட்டுரைகள் ஏற்றுவதை உறுதி செய்யலாம். தற்போது நடக்கும் விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் திட்டத்திலும் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:14, 27 திசம்பர் 2015 (UTC)


15-01-2016 அன்று வரையான 15 நாட்களில் கட்டுரை உருவாக்கல் நிலை:

உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகள் - 687
நீக்கப்பட்ட கட்டுரைகள் - 187
கிடைத்த கட்டுரைகள் - 500
ஒரு நாளைக்கான கட்டுரைகளின் சராசரி - 33.33

விக்கிக்கோப்பைக்கு இன்னும் சிலரை அழைத்து வரலாம். @Rsmn, Aathavan jaffna, Shriheeran, and Maathavan: --AntanO 23:36, 16 சனவரி 2016 (UTC)

அன்ரன் அவர்களே முகநூலில் பலரையும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடலாமா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:30, 17 சனவரி 2016 (UTC)

ஆம் ஸ்ரீஹீரன். ஓரளவிற்கு செயற்பாட்டில் இருப்பவர்களின் பேச்சுப்பக்கத்தில் செய்தியிடலாம். --AntanO 15:36, 19 சனவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

விக்கிக்கோப்பை போட்டித் திட்டத்தை கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தேவை. உங்கள் பெயர்களை திட்டப்பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள். நன்றி --AntanO 21:07, 28 திசம்பர் 2015 (UTC)

Antan அவர்களே என்னாலான உதவிகளை ஒருங்கிணைபாளராக வழங்க முடியும் எனினும் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:52, 29 திசம்பர் 2015 (UTC)

ஆம், நீங்கள் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இன்னொருவர் மதிப்பீடும்படி பார்த்துக் கொள்வோம். ஆகவே அங்கு நல முரண் இருக்காது. ஆசிய மாதப் போட்டியிலும் அவ்வாறே செய்தோம். --AntanO 13:36, 29 திசம்பர் 2015 (UTC)

நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:43, 30 திசம்பர் 2015 (UTC)

tt-ற்ற என்பதைப் பற்றி[தொகு]

பீற்றர் பெர்சிவல் அவர்கள் தொகுத்து 1861 ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தனது Anglo-Tamil Dictionary இல் ஆங்கிலத்தின் tt என வருமிடங்களில் தமிழின் ற்ற ஆகிய எழுத்துக்களைப் பிரதியிடுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

ற்ற ŗŗ is similar to tt in pattern—as பற்றி paŗŗi; when ற் ŗ is preceded by ன் n, it has very nearly its natural power—as கன்று kanŗu, பன்றி panŗi; when we mute before a consonant, it has the sound of the cerebral ţ—as கற்பனை kaŗpanai.

--பாஹிம் (பேச்சு) 03:11, 31 திசம்பர் 2015 (UTC)

👍 விருப்பம் @Fahimrazick: இலங்கையின் சில பகுதிகளில் ற்ற என்பதை tra என்றும் பலுக்குவதுண்டா? தங்கள் பழைய தொகுப்புகளில் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள். பாடநூல்களில் Nitrite-நைத்திரைற்று என்றே எழுதப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் ற்ற-tta என்றே பலுக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 03:17, 31 திசம்பர் 2015 (UTC)

ற்ற என்பதை tra என்று மொழிவதே முறை. ஆனால் ஆங்கிலத்தின் tt என்பதைத் தமிழில் ற்ற என்றெழுதுவதே பொருத்தமென்கிறார் பெர்சிவல். அப்போது தமிழில் ட்ட என்று மொழியாமல் அதையும் ற்ற (tra) என்றே மொழிய வேண்டும். இம்முறையே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. tt என்பதை ட்ட என்றெழுதுவது தவறன்று. இவ்விரண்டுக்குமிடையே சிறிது ஒலிப்பு நுணுக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் தமிழில் அவற்றைக் கருத்திலெடுக்க வேண்டியதில்லை. மாறாக நாம் ஓரிடத்தில் ஒரு மாதிரியும் மற்றோரிடத்தில் இன்னொரு மாதிரியும் எழுதிக் குழப்பக் கூடாது. அதனாலேயே நான் இலங்கை வழக்கைப் பின்பற்றுகிறேன். ட்ட என்பதை ஒரு சிலர் dd என்று மொழிவதுண்டு. ஆனால் அதற்கு எந்த விதியுமில்லை. அவ்வாறே ற் என்பதை ர் எனப் பிழையாக வாசிப்போருமுளர். அத்துடன் tr என்பது தமிழில் ற்ற என்று மாத்திரமே வர முடியும். சிலர் எழுதுவது போல் ட்ர (பெட்ரோல்) என்பது போன்று எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--பாஹிம் (பேச்சு) 03:32, 31 திசம்பர் 2015 (UTC)

ட்ர என்பது ஒவ்வாததே. இலங்கையில் traஉம் ற்ற என்பதால் குறிக்கப்படுகின்றது. ட்ட என்பத ttaஇற்கு நெருங்கிய ஒலியே. tta அன்று. tta என்பதைக் குறிப்பதற்கு, சொல்லுக்கேற்ப, ற்ற அல்லது ட்டவைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 03:46, 31 திசம்பர் 2015 (UTC)


சேர்ந்த / சார்ந்த[தொகு]

விக்கப்பீடியாவிலும் வெளியிலும் பலர் இச்சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. சார்ந்த என்ற பதத்தை சேர்ந்த என்ற பொருளிற் பயன்படுத்தக் கூடாது. எடுத்துக் காட்டாக, நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்றால் நான் ஒரு இலங்கையன் என்று பொருள். நான் இலங்கையைச் சார்ந்தவன் என்றால் நான் இலங்கையனல்ல ஆனால் அதற்கு ஆதரவானவன் அல்லது அதனால் ஆதரிக்கப்படுபவன் என்று பொருள். எனவே பலரும் சொற்களைப் பொருளுணர்ந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 00:21, 14 பெப்ரவரி 2016 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 04:15, 3 மார்ச் 2016 (UTC)
👍 விருப்பம் எனக்கு சேர்ந்த / சார்ந்த வேறுபாடு குறித்து ஐயம் இருந்தது, நன்றி--குறும்பன் (பேச்சு) 22:29, 14 மார்ச் 2016 (UTC)

திருத்தம்[தொகு]

 • (Legume) என்பது விதைகள் அடுக்காக பொதிந்து வைக்கப்பட்டவையை குறிக்க உபயோகிக்கும் பொது வார்த்தை, ஆனால் அதற்க்கு பருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. (Lentil) என்ற ஆங்கில கட்டுரைக்கு மைசூர்ப் பருப்பு என்று தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப்பதில் (Mysore dhal) என்ற தலைப்பிற்க்கு மாற்றலாம். அதேபோல் (Dal) என்ற கட்டுரைக்கு எந்த தமிழ் மொழிபெயற்ப்பும் கொடுக்கப்படவில்லை. பயறு என்ற தலைப்பிற்க்கு ஆங்கில விக்கியில் எந்த தலைப்பை இணைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 10:01, 16 மார்ச் 2016 (UTC)
Muthuppandy pandian இலங்கை பாடப்புத்தகங்களில் பயற்றை Green gram என்றும், பருப்பை Dhal என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.-- மாதவன்  ( பேச்சு ) 12:51, 16 மார்ச் 2016 (UTC)

கற்கண்டு[தொகு]

இது கற்கண்டா?--பாஹிம் (பேச்சு) 08:00, 12 மே 2016 (UTC)

சக்கரக்கட்டி. - சுகர் லோஃப் கற்கண்டு - சுகர் கேண்டி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:45, 13 மே 2016 (UTC)

படமில்லாத கட்டுரைகள்[தொகு]

படமில்லாத பல மொழிக்கட்டுரைகள் பல தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. வேறு எந்த மொழிக்கட்டுரையிலாவது படம் சேர்த்தால் அது தமிழ்விக்கியில் வருகிற மாதிரி ஏன் அனைத்து விக்கிகளிலும் வருகிற மாதிரி செய்ய முடியுமா? இதுக்காகவே கட்டுரைப்படம்னு உருவாக்கினால் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:43, 13 மே 2016 (UTC)

தொழினுட்பக்கேள்வி இதுவென்று எண்ணுகிறேன். படமுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு விளக்கவும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல படமில்லா கட்டுரைகளை படங்கொண்டு மேம்படுத்துவோம்.--உழவன் (உரை)

மெட்டா விக்கிப்பீடியா அறிவிப்பு[தொகு]

இன்ஸ்பெயர் கேம்பெயினின் போது உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் சொல்லுங்கள். புதிய திட்டங்களுக்கு நிதி வழங்க விக்கிமீடியா நிறுவனம் தயாராக உள்ளது.

இன்ஸ்பெயர் கேம்பெயின் என்று மொழிபெயர்த்தது சரியா? அது ஊக்கமூட்டும் பரப்புரை என்று இருப்பது தானே பொருத்தம்?--குறும்பன் (பேச்சு) 18:35, 3 சூன் 2016 (UTC)

ஊக்கமூட்டும் பரப்புரை --AntanO 01:20, 4 சூன் 2016 (UTC)

இக்கட்டுரையை விரிவுபடுத்த வேண்டுகோள்[தொகு]

ஐரோம் சர்மிளா குறித்த கட்டுரையை ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளேன். (https://www.facebook.com/TamilWikipedia/posts/1586898514707463) எனவே, அதிலுள்ள தகவல்கள் அனைவரும் கூடி இற்றைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

--Surya Prakash.S.A. (பேச்சு) 13:28, 9 ஆகத்து 2016 (UTC)

விருதுகள்[தொகு]

விருதுகளுக்கான குறிப்பிடத்தக்கமை என்ன? பல நிறுவனங்கள் தங்களுக்கென பல விருதுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் எவை குறிப்பிடத்தக்கவை என நிர்ணயம் செய்ய வேண்டும். --AntanO 14:44, 31 ஆகத்து 2016 (UTC)

அசைதொகுப்பால் கலைச்சொல் உருவாக்கம்[தொகு]

Maser, Laser சொற்களை முன்வைத்து[தொகு]

கிளர்கதிர்வீச்சால் நுண்ணலை மிகைப்பு என்பதே Microwave Ampilcation by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும். இதை முதலசைகளைச் சேர்த்து தமிழில் கிளர்கதிர் நுண்மி எனலாம். கிளர்கதிர்வீச்சால் ஒளி மிகைப்பு என்பதே Light Amplification by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும்.எனவே இதை முதலசைகளைச் சேர்த்து கிளர்கதிர் ஒளிமி எனலாம். ஆங்கிலத்தில் முதலெழுத்துகளைச் சேர்த்து சொல்லை உருவாக்குதை போல தமிழில் முதலசைகளைச் சேர்த்து சொல் உருவாக்கும்போது பொருட்செறிவுடன் நல்ல கலைச்சொற்கள் கிடைக்கும். அனைவரும் இம்முறையை எண்ணிப் பார்க்கலாம். இரண்டுமே சீரொளிகள்தாம். எனவே பொருள்மிகச் சொல்லாக்குவதே நல்லது.இது கலந்துரையாடலுக்கு முன்வைக்கப்படுகிறது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:26, 10 செப்டம்பர் 2016 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:28, 10 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும். --கி.மூர்த்தி (பேச்சு) 15:37, 10 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 03:25, 11 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:04, 27 செப்டம்பர் 2016 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள்[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள்#கட்டக அணுக்கருக்கானக் குறிப்புதவிகள் (sysop) என்பதில், ஒரு புதிய கோரிக்கைக் கோரப்பட்டுள்ளது.--உழவன் (உரை) 01:56, 8 அக்டோபர் 2016 (UTC)

தலைப்பு மாற்றுதல் வார்ப்புரு குறித்த முன்மொழிவு[தொகு]

வார்ப்புரு_பேச்சு:தலைப்பை_மாற்றுக#இவ்வார்ப்புருவிற்கான கால எல்லை என்ன? என்பதில் ஒரு முன்மொழிவு கூறப்பட்டுள்ளது. எண்ணமிடுக.உழவன் (உரை) 05:27, 8 அக்டோபர் 2016 (UTC)

பன்னாட்டு தாய் மொழி நாள்[தொகு]

வரும் 2017-02-11 (yyyy-mm-dd Gregorian calendar) அன்று பன்னாட்டு தாய் மொழி நாள் பல நாடுகளால் அனுசரிக்கப்படும். நாமும் ஏதாவது செய்யலாமா ? --Deadrat (பேச்சு) 13:08, 6 பெப்ரவரி 2017 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:48, 6 பெப்ரவரி 2017 (UTC)

vikatan.com[தொகு]

வெளியிணைப்புகளுக்கு vikatan.com பக்க இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பயனர்:Buddha1502 பயனர்:Buddha1402 பயனர்:Buddha1302 ஆகிய கணக்குகளின் பங்களிப்பிணைக் கவனிக்கவும். --AntanO 13:56, 16 பெப்ரவரி 2017 (UTC)

விளம்பர நோக்கில் அமையுமானால் vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடலாம். --AntanO 13:57, 16 பெப்ரவரி 2017 (UTC)
தற்போது பயனர்:Buddha1602 என்பதும் இணைந்துள்ளது. மேல்விக்கியில் பயனர் பெயர் சோதனைக்கு கோரிக்கை வைத்துள்ளேன். --AntanO 23:57, 16 பெப்ரவரி 2017 (UTC)
இது விளம்பர நோக்கிலேயே இணைக்கப்படுவதாகத் தெரிகிறது. பலர் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போல் உள்ளது.--Kanags \உரையாடுக 01:15, 17 பெப்ரவரி 2017 (UTC)
தற்போது ஐ.பி ஊடாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிகமாக vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்க்க முயன்றேன். பயனில்லை. vikatan.com விளம்பர இணைப்புகளை பிற பயனர்களும், குறிப்பாக சுற்றுக் காவலில் ஈடுபடுவோர் கவனிக்கவும். --AntanO 02:38, 17 பெப்ரவரி 2017 (UTC)
இரு ஐ.பிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது vikatan.com உசாத்துணையாக இணைக்கப்படுகிறது. --AntanO 03:04, 17 பெப்ரவரி 2017 (UTC)
இந்தப் பயனர்களில் ஒருவர் எனக்குத் தனிப்பட்ட மின்னஞ்சலில் தனது ஐபி முகவரி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும் விசாரித்ததில், இவர்கள் விகடனில் பணியாற்றும் ஆசிரியர்கள். அண்மையில் அங்குள்ளவர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடைபெற்றதாகவும், இதனை அடுத்தே பலர் பயனர்களாக இணைந்து தமக்குத் தெரிந்த இணைப்புகளை இணைத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், இவற்றை விளம்பரமாகக் கருதித் தாங்கள் இணைக்கவில்லை எனக் கூறுகிறார். பயிற்சிக்காகவே எழுதுகிறார்கள் என்கிறார். @Ravidreams: --Kanags \உரையாடுக 09:24, 17 பெப்ரவரி 2017 (UTC)
விக்கிப்பீடியா:நலமுரண்--இரவி (பேச்சு) 10:17, 17 பெப்ரவரி 2017 (UTC)
அணைத்தும் கைப்பாவைக் கணக்குகள். இன்னும் சில கணக்குகள் என் கவனிப்பில் உள்ளன. யாரும் தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பினால், வழமையின்படி அவர்களை அவர்கள் பேச்சுப்பக்கம் ஊடாக தடைசெய்த நிருவாகியை ping செய்வதன் ஊடாக உரையாடச் சொல்லுங்கள். --AntanO 21:17, 17 பெப்ரவரி 2017 (UTC)
நானறிந்த வரையில் இவர்கள் அனைவரும் தமது விகடன் அலுவலகத்தில் இருந்து விகடன் ஐபி மூலமாகப் பங்களிக்கிறார்கள். எனவே இதனை நலமுரணாகவும் பார்க்கலாம், இவ்வாறான விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பவர்கள் தவறான முன்னுதாரணங்களைக் கொடுக்கிறார்கள். வணிக நிறுவனங்களில் ஆதாயத்திற்காக இவ்வாறான பயிற்சி வகுப்புகளை ஒரு சிலர் நடத்துகிறார்களோ எனச் சந்தேகமாகவுள்ளது.--Kanags \உரையாடுக 21:53, 17 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017 - தமிழ் விக்கிப் பங்களிப்பு[தொகு]

விக்கிமீடியா வியூகம் 2017 தற்போது நடைபெறுகிறது. அதில் அவர்கள் மொழிசார் விக்கிகளில் இருந்து கருத்துக்கோரல் செய்தாகத் தெரியவில்லை. எனினும் நாம் எமது உள்ளீட்டினை வழங்க வேண்டும். @Ravidreams: இதைப் பற்றி கூடிய தகவல்களைப் பகிர முடியுமா (https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Track_D). --Natkeeran (பேச்சு) 17:18, 20 மார்ச் 2017 (UTC)

@Natkeeran:, மொழி விக்கிச் சமூகங்கள் இந்தக் கலந்தாய்வில் இங்கு பங்கேற்கலாம். இதனை நீங்கள் ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இதற்கென இந்தியப் பகுதியில் முன்னெடுப்புகளைச் செய்து வரும் சதீப், நகித் ஆகியோருடன் இணைந்து நானும் உதவ முடியம். --இரவி (பேச்சு) 11:59, 24 மார்ச் 2017 (UTC)
கருத்துக் கோரல்: விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017 என்ற பக்கத்தில் பயனர்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால், அதனைத் தொகுத்து நான் வழங்க முடியும். --Natkeeran (பேச்சு) 17:44, 3 ஏப்ரல் 2017 (UTC)

விக்கி செய்தி[தொகு]

சென்ற ஆண்டு செய்தி இந்த ஆண்டு காட்டப்படுகிறது

விக்கி செய்தி போன ஆண்டு செய்திகளை இந்த ஆண்டு காட்டுகிறது. அங்கு ஆலமரத்தடியை காணோம் முன்பு இருந்தது என்று நினைவு. கோப்பு பதிவேற்றமும் விக்கப்பீடியா மாதிரி இருக்கவில்லை நேராக பொதுவகத்திற்கு செல்கிறது. -Kanags, மா. செல்வசிவகுருநாதன் கவனிக்க --குறும்பன் (பேச்சு) 15:59, 31 மார்ச் 2017 (UTC)

பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள்[தொகு]

பல அரிய, பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள் மின் வடிவில் இங்கு உள்ளது. விரும்பினால் பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 14:40, 19 ஏப்ரல் 2017 (UTC)

👍 விருப்பம்--AntanO 16:26, 19 ஏப்ரல் 2017 (UTC)
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 03:58, 20 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிப்பீடியா பயிற்சி[தொகு]

விக்கிப்பீடியா பயிற்சிகள் ஏதும் நடைபெறுகிறதா? ஒரே தன்மையுள்ள கணக்குகளும் சில கட்டுரைகளும் உருவாகின்றன. நிற்க, விக்கிப்பீடியா பயிற்சிகள் கொடுப்பதற்கு ஏதும் ஒழுங்குகள் நடைமுறையில் உள்ளதா அல்லது பயிற்சியாளர் தான் விளங்கிக் கொண்டவாறு பயிற்சியளிப்பாரா? சில இடங்களில் வெறும் விரிவுரை போன்ற பயிற்சிகள் மட்டும் பொருத்தமற்றது. பயிற்சியின்போது, பயிற்சியாளரால் கட்டுரை மாதிரி கவனிக்கப்பட்ட பிறகு பதிவேற்றுவது நல்லது. பயிற்சியாளர்கள் நன்கு விளங்கிக் கொள்ளமாட்டர்கள் என்று தயவுசெய்து காரணம் கற்பிக்க வேண்டாம். [If you can't explain it to a six year old, you don't understand it yourself. Albert Einstein]

கட்டுரை ஒன்று கட்டாயம் பின்வருனவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவுறுத்துங்கள்:

 • சரியா தலைப்பு - வேறு பெயர்களில் இல்லையா என்பதை உறுதி செய்தல்
 • எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை தவிர்ப்பு
 • கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதா?
 • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருக்கிறதா?
 • பதிப்புரிமை மீறல் விடயங்கள் உள்ளதா?
 • தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறதா?
 • மூன்று வரிக்கு மேல் உள்ளடக்கம் கொண்ட கட்டுரையா?
 • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா?
 • தேவையாயின், சரியான விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருக்கிறதா?
 • மேலும் கவனிக்க: en:Wikipedia:Ten Simple Rules for Editing Wikipedia

இதனையும் கவனிக்க: en:Wikipedia:Training, en:Wikipedia:Training/For students --AntanO 12:19, 20 ஏப்ரல் 2017 (UTC)

பொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக நடைபெறும் பயிற்சிகளின்போது குறிப்பாக என்னென்ன விடயங்கள் பற்றிப் பயிற்சி தரப்படுகின்றன என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்வுகளில் விரிவான விளக்கங்கள் தரமுடியாது என்பது உண்மை. ஆனால், முறையான பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யும்போது, விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகளை எழுதுவது எப்படி என்பது குறித்துப் பயிற்சி அளிப்பதற்குப் போதிய நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். குறிப்பாகத் தலைப்புக்களைத் தெரிவு செய்தல், நடுநிலையில் இருந்து கட்டுரைகளை எழுதுதல், கட்டுரைகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுதல், கட்டுரைகளின் அமைப்பு, காப்புரிமை போன்ற விடயங்களில் போதிய தெளிவு ஏற்படும் வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும். இதற்காக, எல்லோருக்கும் பயன்படும் வகையிலான பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 04:16, 21 ஏப்ரல் 2017 (UTC)
இரவி பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். en:Wikipedia:Training/For students - இதைத் தமிழ்ப்படுத்தினாலே இலகுவானதாகவிருக்கும். விழிப்புணர்வைத் தொடர்ந்து முறையான பயிற்சி வகுப்புகள் இருந்தால் சிறப்பாகவிருக்கும். ஓரு நாள் கருத்தரங்கில்

சுமார் 30-40 பேருக்கு முறையான பயிற்சி வழங்கலாம். மாதிரிக்கு ஒன்றை என்னால் செய்து காட்ட முடியும். வட-கிழக்கைக் தவிர்த்து, கொழும்பு, கண்டி ஆகிய இடங்கள் என்றால் என்னால் வரமுடியும். --AntanO 04:44, 21 ஏப்ரல் 2017 (UTC)

மகிழ்ச்சி அன்ரன், ஆயினும் வரும் வருடம் யாழில் பட்டறைகள் பல நடாத்துவோம் எனினும் இவ்வருடன் சூன் வார முற்பகுதியில் யாழில் ஒன்று இடம்பெறலாம். அதில் தங்களால் பங்குகொள்ள முடியாதா? கொழும்பு, கண்டி ஆகியவற்றில் பயிற்சிப்பட்டறை ஒன்றை தாங்களே முன்வந்து ஒழுங்குசெய்வதற்கு விருப்பமா? விரும்பின் தெரிவிக்கவும்.
 • ஒரு நாள் பயிற்சிப்பட்டறை உதவிக்குறிப்புகள்-[1]

இதுவும் பயன்படலாம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:06, 21 ஏப்ரல் 2017 (UTC)

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்[தொகு]

பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை திருத்தம் செய்ய வேண்டும். பல கட்டுரைகள் மிக மேசமான உரைநடையைக் கொண்டுள்ளன. 100,000 கட்டுரைகளை அண்மிக்கும் நாம் இவற்றைத் திருத்துவது நல்லது. இந்தப்பட்டியல் உதவலாம். --AntanO 16:28, 20 ஏப்ரல் 2017 (UTC)

குறுங்கட்டுரையாக உருவாக்கலாமா? அதாவது கருத்துச்செறிவுள்ள குறைந்தது 10 வரிகள் உள்ள கட்டுரையாக மாற்ற விரும்புகிறேன். அதனால் அங்குள்ள தரவை பேச்சுப்பகத்திற்கு அப்படியே மாற்றி விட்டு, அப்புதிய கட்டுரையை உருவாக்கலாமென்றே கருதுகிறேன். பல கட்டுரைகள் சமூகத் தேவையாக உள்ளது. எ-கா. கண் அழுத்த நோய்(இக்குறைபாடு தமிழகத்தில் பரவியுள்ளது. ஆனால், இதன் அறிகுறி வெளியே தெரியாது. எனக்கு தொடக்க நிலையில் இருக்கிறது.ஆனால், தெளிவான கட்டுரை இல்லை.), ஆக்சிடாசின் (பால் உற்பத்தியில் பயன்படுவது,. மிகுந்த கெடுதல் செய்யும் வேதிப்பொருள்)--உழவன் (உரை) 04:43, 2 சூன் 2017 (UTC)
👍 விருப்பம் கவனிக்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:25, 2 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:22, 3 சூன் 2017 (UTC)

விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு[தொகு]

தமிழ் விக்கியில் முன்னர் இருந்தது போல் ஒரு சமூக உணர்வை நாம் இழந்து வருகிறோமோ என்று எண்ணைத் தோன்றுகிறது. இதற்கு ஒரு தீர்வாக எமக்குப் பொரும்பாலானவர்களுக்கு இயல்பான ஒரு நாளில் விக்கியில் அல்லது ஸ்கைப்பில் சந்திக்கலாமா? குறிப்பாக எதையும் உரையாட வேண்டும் என்றோ அல்லது முன்னெடுக்க வேண்டும் என்றோ இல்லை. கருத்துப் பரிமாறலாம். விக்கியில் தொகுக்கலாம். எண்ணங்களை வரவேற்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:43, 21 ஏப்ரல் 2017 (UTC)

 1. 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 4 மே 2017 (UTC)
 2. 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:00, 9 மே 2017 (UTC)
 3. --உழவன் (உரை) 07:54, 24 மே 2017 (UTC)
 4. 👍 விருப்பம். இந்த வாரம் சனியன்று தொடங்குவோமா? இந்திய நேரம் மாலை 07:30 போல் பேசினால் பல்வேறு நேரவலயங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இது ஒத்து வரும் என்றால் இதற்கான Hangout இணைப்பை நான் உருவாக்கித் தருகிறேன். இந்தப் பேச்சுகளைப் பதிவு செய்து யூடியபில் சேமித்தால் கலந்து கொள்ள இயலாதவர்களும் பின்னர் பார்க்கலாம். கவனிக்க: @Dineshkumar Ponnusamy, Parvathisri, Info-farmer, and Natkeeran:--இரவி (பேச்சு) 18:38, 1 சூன் 2017 (UTC)
  1. மாதம் ஒருமுறை என்பதால், எந்நாளும், எந்நேரமும் எனக்கு ஏற்புடையதே.'கூகுள் ஏங்அவுட்டு' 250-512kbps இணைய வேகத்தில் சரியாக இயங்குமா என்பதே என் ஐயமாக உள்ளது. பலருக்கு இணைய வேகம் ஒரு தடையாக இருக்க நேரிடலாம்.--உழவன் (உரை) 04:30, 2 சூன் 2017 (UTC)
  2. 👍 விருப்பம் ஒருவர் ஒருங்கிணைப்பாளாராகவும், இன்னுமொருவர் குறிப்பெடுப்பவராகவும் இருந்தால் நன்று. விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள் பக்கத்தை உருவாக்கி உள்ளேன்.. --Natkeeran (பேச்சு) 12:53, 2 சூன் 2017 (UTC)
 1. 👍 விருப்பம்--மணி.கணேசன்
 1. 👍 விருப்பம்--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:43, 3 சூன் 2017 (UTC)
 1. 👍 விருப்பம்--பயனர்:Jayreborn

பதிப்புரிமை மீறல்[தொகு]

சுமார் 100 கட்டுரைகள் பதிப்புரிமை மீறல், கலைக்களஞ்சியம் அற்றவை, ஏற்கெனவே உள்ள பெயரில் உருவாக்கம் ஆகிய காரணங்களால் நீக்கப்பட்டுள்ளன. யார் இந்தப் பயனர்? பயிற்சி வகுப்புக்கள் வழியாக உள்வாங்கப்பட்டவர்களா? --AntanO 20:18, 4 மே 2017 (UTC)

Antan அப்படித்தான் இருக்க வேண்டும், நேற்று வந்தோர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர், முந்நாள் வந்தோர்ர் பெரும்பாலும் ஆசிரியர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 5 மே 2017 (UTC)
@Neechalkaran:--Kanags \உரையாடுக 02:00, 5 மே 2017 (UTC)
TNSE என்ற முன்னொட்டுடன் பயனர் பெயர் கொண்டோர் சென்னையில் நடைபெறும் ஆசிரியர் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு அங்கு வழிகாட்ட விக்கிப்பீடியர் எவரேனும் உள்ளனரா? துப்புரவு, பராமரிப்புப் பணிப்பளு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு இலட்சம் கட்டுரைகளை நோக்கிச் செல்லும் முனைப்பில் அதிவேகமாக உருவாகும் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, கட்டுரைகளின் தரம் கேள்விக்குரியதாக உள்ளது கவலை தரும் விடயமாக உள்ளது. --Booradleyp1 (பேச்சு) 04:21, 5 மே 2017 (UTC)
பயிற்சி வகுப்புகள் மூலம் வந்தவர்களாக இருக்கலாம். ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் TNSE என்று தொடங்குமாறு பெயரிட அறிவுறுத்தினர். சிலர் முன்பே தொடங்கிய பெயரிலும் எழுதுகிறார்கள். வேறு பயிற்சிகள் பல நடந்தன எனக்கு அதிகமாகத் தெரியவில்லை. தமிழ்ப்பரிதி அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். பார்வதிஸ்ரீ, பரிதிமதி இருவரும் ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் பொதுவாக மணல்தொட்டியைத் தான் பரிந்துரைத்தோம் எனவே ஆர்வத்தில் சிலர் கட்டுரைகளை நகலெடுத்து ஏற்றியிருக்கலாம். அதிகக் கட்டுரைகளை (தரமுடன் தான்) எழுதுவது அவர்களின் இலக்கு ஆனால் புதியவர்கள் என்பதால் விக்கிநடைக்கு அனுபவம் தேவைப்படலாம். நான் அறிந்தவரை இதுவரை பலருக்குப் பயிற்சி கொடுத்ததால் குறிப்பாக அவர்களிடம் அறிவுறித்தி உடனே மாற்றுவது கடினம். நேற்று வரை நடந்த நிகழ்ச்சி பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 5 மே 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி[தொகு]

கிருஷ்ணகிரியில் மே மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி பதிவேற்றம் செய்யும் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிகிறேன். இதை யார் ஒருங்கிணைக்கின்றனர்? நமது விக்கி சமூகத்திலிருந்து யாராவது பங்கு கொள்கின்றனரா? அல்லது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அம்மாதிரியான பயிற்சிகளை மாவட்டம்தோறும் நடத்துகிறதா எனத் தெரியவில்லை. @Arulghsr and Parvathisri: --இரா. பாலா (பேச்சு) 02:29, 6 மே 2017 (UTC)

ːːகாண்க. விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:24, 6 மே 2017 (UTC)

த. வி. பிரதான விக்கியில்[தொகு]

Tamil-99000-wikipedia-org-front-page.png

விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் த.வி.யையும் தெரிவு செய்யும் பகுதியில் அமைக்குமாறு கேட்கலாம். தெரிவில் 100,000 கட்டுரைகளைக் கொண்ட 58 விக்கிகள் உள்ளன. மேலும், 10 000+ பகுதியில் உள்ள த.வி 100 000+ பகுதிக்குச் செல்ல வேண்டும். மேலும், ஆங்கில விக்கியின் "Wikipedia languages" பகுதியில் த.வி.யையும் சேர்க்க 50,000 கட்டுரைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேட்கலாமா? --AntanO 05:39, 10 மே 2017 (UTC)

நிச்சயமாக அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:41, 13 மே 2017 (UTC)

ஏற்கனவே விக்கிபீடியா முகப்புப் பக்கத்தில் தமிழ் விக்கி தெரிகிறது --சண்முகம்ப7 (பேச்சு)

எங்கே, இணைப்புத்தாருங்கள், பார்க்க ஆவலாக உள்ளேன்.அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:35, 13 மே 2017 (UTC)

wikipedia.org--சண்முகம்ப7 (பேச்சு) 04:36, 13 மே 2017 (UTC)

ஆனால் அது 10 000+க்குள் அல்லவா இருக்கிறது, நாம் இப்போது 100 000+ அல்லாவா அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:41, 13 மே 2017 (UTC)

அது இன்னும் சரியாக இற்றை ஆகவில்லை என நினைக்கிறேன். இன்னும் கட்டுரைகளின் எண்ணிக்கை 99000+ என்றே உள்ளது. சில நாட்கள் கழித்து பார்ப்போம், இற்றையாகவில்லையெனில் வழு பதியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 13 மே 2017 (UTC)
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:09, 13 மே 2017 (UTC)
Sorry, I am unable to type in Tamil right now. I do not see Tamil in main interface after cleaning cache memory and tried in some browsers and mobile phone. Tamil is not included in drop-down menu too. English Wiki's front page does not add Tamil. I think English Wiki would not add due quality and bot issues. --AntanO 05:15, 13 மே 2017 (UTC)
அன்ரன் English Wiki's front pageக்கான இணைப்பைத் தர முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:18, 13 மே 2017 (UTC)
en.wiki Go to bottom and see under "Wikipedia languages". --AntanO 05:35, 13 மே 2017 (UTC)
அன்ரன், அவர்களே, இதற்கு என்ன செய்யவேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:54, 13 மே 2017 (UTC)
We have to discuss with them. I remember Sundar had a discussion (at meta?) when we reached 50,000+ articles. --AntanO 05:58, 13 மே 2017 (UTC)
அன்ரன் இது உலாவிப் பிரச்சனை போன்று தெரிகின்றது. கூகிள் குரோமில் தெரிகின்றது, அதன் திரைப்பிடிப்பு அருகில் இணைத்துள்ளேன். பயர் பொக்சில் தெரியவில்லை. --சி.செந்தி (உரையாடுக) 06:17, 13 மே 2017 (UTC)
சி.செந்தி நானும் குரோம் தான் பயன்படுத்துகின்றேன். அது எவ்வாறு தமிழ் மேலே வந்தது. குழப்பமாக உள்ளது. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. தமிழ் இருக்கும் இடத்தில் எசுப்பானியம் இருக்கிறது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 13 மே 2017 (UTC)

த.வி ஓரிலக்கம் கட்டுரைப் பிரிவில் 59 ஆகச் சேர்ந்துள்ளதே!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:42, 3 சூன் 2017 (UTC)

ஆசிரியர் பயிற்சியில் சிறப்பாகப் பங்களிப்போர்[தொகு]

ஆசிரியருக்கான விக்கிப்பீடியா பயிற்சியினூடாக பல ஆசிரியர்கள் பங்களித்து வருகின்றனர். துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவரும் நமக்கு அவர்கள் எழுதும் கட்டுரையின் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் சார்ந்து விக்கிப்பீடியாவின் நடைக்கு ஏற்ப கட்டுரை எழுதும் சிலரை இனம் காண முடிகிறது. அம்மாதிரியானவர்களை இனம் கண்டு தமிழ் விக்கியில் தக்கவைத்தல் வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக, பயனர்:TNSE MATHIVANAN DIET ERD எழுதிய முதல் கட்டுரையான ஈரோடு அரசு அருங்காட்சியகம் விக்கி நடைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதுபோல இன்னும் சிலர் நன்றாகச் செயல்படுகின்றனர். அவர்களை பட்டியலிட்டு தேவையான உதவிகளை வழங்கினால் அவர்களால் இன்னும் விக்கியில் சிறப்பாக பங்களிக்க இயலும். இது தொடர்பான பிறரின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். --இரா. பாலா (பேச்சு) 02:18, 13 மே 2017 (UTC)

நிச்சயம் செய்வோம். மிளிரும் ஆசிரியர்களை இங்கு பட்டியல் இடலாம். இத்தகைய ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு தக்க வேளையில் பொருத்தமான பதக்கம் அளித்தும் ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 03:40, 13 மே 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:43, 13 மே 2017 (UTC)
👍 விருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:39, 3 சூன் 2017 (UTC)

கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு[தொகு]

இங்கு இடம்பெற்ற விடயம் தொடர்பில் ஆலோசனை வழிகாட்டல் தேவை. மேலும், சில எடுத்துக்காட்டுகள்:

இவ்வாறு விட்டுக் கொடுப்புடன் காணப்படும் தமிழ் விக்கிப்பீடியா, ஏன் கிறிஸ்து, கிறிஸ்தவம், இஸ்லாம், முஸ்லிம் ஆகிய சொற்களில் மட்டும் இறுக்கமாக கிரந்தத் தவிர்ப்பு என்ற வழிகாட்டலைக் கொண்டுள்ளது? தமிழ் விவிலியத்தில் கிறிஸ்து என்ற சொல் கிட்டத்தட்ட 480 தடைவைகள் பயன்படுத்தப்பட, தமிழ் விக்கி கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் ஒரு சமயத்தின் முக்கிய சொல்லை கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் சிதைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காண்க: en:WP:CENSOR, en:WP:NOTGUIDE, en:WP:FORUM, en:WP:NOT#DICT --AntanO 07:25, 3 சூன் 2017 (UTC)

எனக்கு தெரிந்து முன்பு பலர் கிரந்தம் கலந்து எழுதினார்கள் (நானும்), இப்போதும் சிலர் எழுதுகிறார்கள். தமிழில் எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் கிரந்தம் உள்ளதை குறிக்கலாம் வழிமாற்று ஏற்படுத்தலாம். இது தேடுபவர்களுக்கு உதவும். எகா முசுலிம் (முஸ்லிம்) , இசேம்சு (ஜேம்ஸ்). சியா (ஷியா) இலக்கணப்பிழை நிறைய இடத்தில் இருக்கும் காரணம் அதை அறியாதது --குறும்பன் (பேச்சு) 20:20, 3 சூன் 2017 (UTC)

எனினும் இதனை எல்லா வசனங்களிலும் எழுதமுடியாது தானே. ஆகையால் அனைவருக்கும் பொதுவான வழக்கினை, அல்லது பரவலாகப் பயன்படும் வழக்கினை நடைமுறைக்குக்கொண்டுவரலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 4 சூன் 2017 (UTC)
இலங்கைப் (தமிழ் நாட்டிலும்?) பாடத்திட்டங்களில் தமிழோடு சேர்த்து வடமொழி (கிரந்த) எழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே, இது இயல்பாக கிரந்தப் பாவனையை தவிர்ப்பது கடினம். நிற்க, த.வியில் பல சொற்கள் கிரந்த, இலக்கண மீறல்களுடன் "பொது வழக்கு" என்று எழுதப்பட, சில சொற்களில் மட்டும் கட்டும் கட்டாயமாக தனித்தமிழை நடைமுறைப்படுத்தவியலாது. ஒன்றில் தனித்தமிழ்தான் த.வியில் இருக்கும் என்ற கொள்கையைக் கொண்டு வர வேண்டும், அல்லது எப்படியும் எழுதலாம் என்றால் சில சொற்கள் விடயத்தில் மட்டும் இறுக்கம் காட்டவியலாது. வணிகப் பெயர்கள் என்பதற்காக இலக்கண விதி மீறலையும் கிரந்தத்தையும் அனுமதிக்கும் த.வி. சில சொற்கள் விடயத்தில் மட்டும் மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்? --AntanO 02:27, 4 சூன் 2017 (UTC)
//அனைவருக்கும் பொதுவான வழக்கினை// அதாவது நூற்றுக்கு நூறு வீதம் கிரந்தப் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கூறுகிறீர்களா? இதனைத் தான் அன்ரனும் விரும்புகிறாரா? தமிழ் விக்கியில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதே நடைமுறையில் உள்ள கொள்கை. இலக்கண மீறல் சொற்களை இனங்கண்டு அவற்றைத் திருத்தலாம். க்ரியா என்பது தமிழில் வழங்கப்படும் அதிகாரபூர்வமான வணிகச் சொல். ஆங்கில வணிகச் சொல் என்றால் அதனை நாம் எமது இலக்கண முறைப்படி தமிழில் எழுதலாம். ஆனாலும், கிரியா என எழுத வேண்டும் எனப் பெரும்பாலானோர் (எனக்கும் அவ்வாறே விருப்பம்) தீர்மானித்தால் அவ்வாறே எழுதலாம். அடைப்புக்குள் அதிகாரபூர்வமான பெயரைக் கட்டுரையில் குறிப்பிடலாம். க்ஷ என்ற எழுத்தில் துவங்கும் சொற்களை எவ்வாறு எழுதலாம் எனபதை இட்டு விவாதிக்கலாம். மேலும் இந்து சமயக் கட்டுரைகளில் அதிகளவு கிரந்தக் கலப்பு உள்ளது உண்மை. அவற்றை இனங்கண்டு தகுந்த முறையில் திருத்தலாம். எவரும் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லை. கிறித்தவத் தமிழரே அதிகளவு கிரந்தம் தவிர்த்து அக்காலத்தில் எழுதினார்கள். ஜோசப் - யோசேப்பு, யோசப்பு, சூசை... இவ்வாறு பல உதாரணங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 02:45, 4 சூன் 2017 (UTC)
இலக்கண விதி மீறல் இருக்கக்கூடாது என்பது மிக முக்கியம். யேசு என்பது தமிழ் இலக்கணத்திற்குப் பிழை என்பதால் இயேசு என்று எழுதப்படுகிறது. ஆனால் யோசேப்பு என்பதில் என்ன செய்வது? ஆனால் பிறமொழிச் சொற்களை தமிழில் எழுத மெய்யெழுத்தில் தொடங்குவது நடைமுறைக்கே (இலக்கண விதி மீறல் + தமிழ் உச்சரிப்பு) ஏற்றுக் கொள்ள முடியாது. முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதில் "அளவு" என்பது ஏரண நோக்கில் தெளிவற்றது. ஆளாளுக்கு அளவு வேறுபடும். அதனால், அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் (சக்தி மகரிஷி, ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை) தன்னளவில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதைக் கையாண்டுள்ளது. என்னைப் பொருத்தவரை த.வி தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்க வேண்டும். கிறித்து என்றாலும், கிறிஸ்து என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனது பரிந்துரைகள்:
 • வணிகப் பெயராயினும், இலக்கண மீறல் கூடாது. தேவைப்பட்டால் அடைப்புக்குறியினுள் வணிகப் பெயரை இடலாம். ராணா கபூர் போன்ற இலக்கண மீறல்களை என்ன செய்வது. இராணா கபூர் என்று எழுதுவதை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளலாமா?
 • கிரந்த நீக்கம் சகல கட்டுரைகளிலும் வேண்டும். தேவைப்பட்டால் {{en}} என்பது போல {{கிரந்தம்}} என கட்டுரையில் பயன்படுத்தலாம். அல்லது கிரந்தம் அவரவர் விருப்பப்படி இருக்கலாம். யாரும் மறுக்கக்கூடாது.

--AntanO 04:36, 4 சூன் 2017 (UTC)

கிறித்தவம் என்ற சொல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்குவதற்கு முன்பும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெளியிலும் கூட பரவலாக பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள சொல். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் கிறித்தவரான இறையியல் பேராசிரியரே கிறித்தவம் என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார். இரு சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது, அவற்றுள் கிரந்தம் கலக்காத சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதே தமிழ் விக்கிப்பீடியா புரிந்துணர்வு. எடுத்துக்காட்டுக்கு, ஹனுமன் -> அனுமன் என்று கட்டாயம் மாற்றப்படும். ஆனால், ஹஜ் என்பதற்கு அச்சு போன்ற சொற்கள் புழக்கத்தில் இல்லாததால் ஹஜ் என்னும் நிலையே தொடர்கிறது. இது எல்லா சமயங்களுக்கும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். இங்கு முடிவு என்பது சொல்லை வைத்துத் தானே தவிர, துறையைச் சார்ந்து அன்று. ஏற்புடைய தொகுப்புகள் கூட செய்யப்படாமல் இருப்பதற்கு உரை திருத்தம் செய்வதற்குப் போதிய பங்களிப்பாளர் இல்லாமையும் ஒரு காரணம். எனவே, இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை. ஒருவேளை, ஒரு சில பயனர்கள் இவ்வாறு திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட வேண்டுகிறேன். தக்க நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில் கிரந்தம் பற்றி அடிக்கடி எழுந்த உரையாடல்கள் நாம் தமிழ் தாலிபான்கள் என்று விமரிசிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது. காலப்போக்கில், கிரந்தம் தொடர்பான ஒரு எழுதப்படாத புரிந்துணர்வை, பொதுக்கருத்தை எட்டியுள்ளதாகவே உணர்கிறேன். அஃதாவது:

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் தொடர்பில் மூன்று வகை பயனர்கள் உள்ளனர்:

 • முற்றிலும் எல்லா இடங்களிலும் கிரந்தம் தவிர்ப்போர்.
 • பொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர். அனுமன் என்றும் எழுதுவர். ஜார்ஜ் ஹார்ட் என்றும் எழுதுவர்.
 • இயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர். எடுத்துக்காட்டுக்கு, தேம்சு என்று எழுதுவார்கள். ஆனால், சேம்சு என்று எழுத விரும்ப மாட்டார்கள். ஓரளவு மூல மொழியுடன் ஒலி இணக்கம் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இதற்குக் காரணமாக இருக்கலாம்

இந்த மூவரும் அவரவர் பாணியில் கட்டுரைகளில் பங்களிப்பதற்கான சம வெளியை தமிழ் விக்கிப்பீடியாவை உறுதி செய்கிறது. அதே வேளை, ஒரு வகை பயனர் இன்னொருவருக்கு கிரந்தம் தொடர்பாக "வேண்டுகோள்/அறிவுரை" வழங்குவதைத் தேவையற்ற பரப்புரையாகவும் காண்கிறது. தத்தம் நடையில் அவரவர் பங்களிக்கட்டும் தங்களை மாற்றச் சொல்ல வேண்டாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒருவர் தான் விரும்பும் நடையில் கட்டுரைகளை இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்குத் தகுதியான உழைப்பினைச் செலுத்தி முழுமையான கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றும், கிரந்தம் சேர்ப்பது/நீக்குவது என்பதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பல கட்டுரைகளில் ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்தல் கூடாது என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மனிதத் தொகுப்புகள்/தானியங்கித் தொகுப்புகள் இரண்டுக்கும் இது பொருந்தும். இந்த எதிர்பார்ப்பு நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது.

இவர்களுள் சேராத இன்னொரு வகை பயனர் விக்கிக்கு வெளியே இருக்கிறார்கள்.

 • முற்றிலும்/தேவையற்ற இடங்களிலும் கிரந்தம் திணிப்போர். இதயம் -> ஹ்ருதயம் என்று எழுதுவோர். இந்நடை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

விக்கிமீடியா இயக்க வியூகக் கலந்துரையாடல் தொடர்பாகப் பலருடன் பேசி வருகிறோம். மிகவும் நன்கு படித்தவர்கள் கூட விக்கிப்பீடியாவின் நடையையும் மொழியையும் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே, நடைமுறைத் தமிழ்ச் சூழல் கருதி கிரந்தம்/இலக்கணம் இரண்டு தொடர்பாகவும் இறுதியான இறுக்கமான நிலை எடுப்பது தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல நூற்றுக்கணக்கான முனைப்பான பங்களிப்பாளர்கள் இணையும் போது இன்னும் சீரான நடை உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலகத் தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் பெருமைக்குரிய திட்டம் தமிழ் விக்கிப்பீடியா. காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். எனவே, இவ்வாறான நோக்கங்கள் தொடர்பாக விழிப்புடன் தொடர்ந்து செயற்படுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:26, 4 சூன் 2017 (UTC)

வேடிக்கையான உதாரணம். கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரே "கிறித்தவம்" என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார் என்பதைவிட தமிழ் விவிலியம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதே முக்கியம். இங்கு உசாத்துணை கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரா? மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் பின்பற்றும் தமிழ் விவிலியமா?

//இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை.// யார் கருதியது?

//காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.// யார்? இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன? --AntanO 06:58, 4 சூன் 2017 (UTC)

இதே உரையாடல் இழையிலும் இங்கும் சமய நோக்கிலான சிதைப்பு, இருட்டடிப்பு முதலிய கோணங்களில் இவ்வுரையாடல் அணுகப்பட்டது. அப்படிப்பட்ட நிலைப்பாடு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இங்கு பங்களிக்கும் கிறித்தவர்களும் அத்தகைய நடையைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்பினேன்.
தமிழ் விவிலியம் முதலிய பல்வேறு சமய ஆக்கங்களில் கிரந்தம் கலந்து இருப்பதை யாரும் மறுக்கவில்லை. இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும். அதே வேளை, கிரந்தம் கலக்காத சொல்லும் பரவலான புழக்கத்தில் இருந்தால் அதனைப் பயன்படுத்துவது தமிழ் விக்கிப்பீடியா வழக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
//இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன// தமிழ் விக்கிப்பீடியா நலம் குறித்த அக்கறை தான்.--இரவி (பேச்சு) 07:17, 4 சூன் 2017 (UTC)

//இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும்.// நல்லது. உங்ளுக்குத் வேதங்கள் பற்றிய தெளிவிருந்தால் உரிய மாற்றம் செய்யலாம். நான் வேண்டாம் எனவில்லை. ஆனால் கிறிஸ்தவம் தொடர்பான விடயத்தில் "மட்டும்" நியாயபடுத்த வேண்டாம். --AntanO 07:23, 4 சூன் 2017 (UTC)

நீங்கள் தந்தது கிறித்தவம் தொடர்பான எடுத்துக்காட்டாக அமைந்தது. இதே அணுகுமுறை, விளக்கம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். --இரவி (பேச்சு) 07:30, 4 சூன் 2017 (UTC)

ஆம், நான் மறுக்கவில்லை.--AntanO 08:08, 4 சூன் 2017 (UTC)

இந்தியாவில் கிறிஸ்தவம் என்ற கட்டுரைக்கான பகுப்பு "இந்தியாவில் கிறித்தவம்" எனக் காணப்பட, ஒருமைப்பாட்டுக்காக பகுப்பு, அதனுடன் தொடர்புபட்டவற்றை இந்தியாவில் கிறிஸ்தவம் என மாற்ற வேண்டியதாயிற்று. இது தொடர்பில் ஏற்றபட்ட உரையாடல் சமய சாயம் பூசுதல், "பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்" என்று சென்றிருக்கத் தேவையில்லை. பதிலுக்கு நானும் பல சொற் பிரயோகம் செய்திருக்கலாம். தயவுசெய்து இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.

நிற்க, தமிழ் விவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) "முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு" கொண்டுள்ளது. எ.கா: மத்தேயு 1:1-3

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

இதற்கான ஆங்கிலம்:

This is the genealogy of Jesus the Messiah the son of David, the son of Abraham: Abraham was the father of Isaac, Isaac the father of Jacob, Jacob the father of Judah and his brothers, Judah the father of Perez and Zerah, whose mother was Tamar, Perez the father of Hezron, Hezron the father of Ram,

இங்கே தவிர்க்கப்பட்ட கிரந்தச் சொற்கள்:

 • Abraham - ஆபிரஹாம் என்பது ஆபிரகாம்
 • Jacob - ஜேக்கப் என்பது யாக்கோபு
 • Judah - ஜூடா என்பது யூதா
 • Perez - பெரஸ் என்பது பெரேட்சு
 • Zerah - ஷேரா என்பது செராகு
 • Hezron - ஹெஸ்ரன் என்பது எட்சரோன்

ஆனால், கிறிஸ்து என்பதை கிறித்து என்று எந்த விவிலியமும் எழுதவில்லை. இவ்வாறு ஒருசில, கட்டாயமான இடங்களில் மட்டும் கிரந்தம் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட த.வி.யில் உள்ள போக்கு (பொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர்). ஆனால் பொது வழக்கில் புழங்கப்படும் கிறிஸ்து எனும் கிரந்தச் சொல் விடயத்தில் த.வி முரண்பாடு கொள்ளத் தேவையில்லை. மேலும், "கிறிஸ்து அரசர் தேவாலயம்" என்பது குறிப்பிட்ட தேவாலயத்தில் உத்தியோக பூர்வமான, பொது வழக்கான பெயராயிருக்க, இதனை "கிறித்து அரசர் கோயில்" என மாற்றவது முறையாகாது. ஆகவே, விவிலியத்துடன் தொடர்புபட்ட தலைப்புக்களில், குறிப்பிப்பாக கிறிஸ்து தொடர்புபட்ட கிறிஸ்தவம், கிறிஸ்தவர் ஆகிய சொற்களில் தனித்தமிழ் தேவையில்லை. இல்லையென்போர், தயவு செய்து ஏரணச் சுழற்சி இல்லாது கருத்தினைத் தெரிவியுங்கள். நன்றி. --AntanO 09:46, 4 சூன் 2017 (UTC)

இந்து சமயத்தை இதே போல் ஹிந்து சமயம் என்றே தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று ஒரு பயனர் வேண்டினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?--இரவி (பேச்சு) 12:52, 4 சூன் 2017 (UTC)

கிரந்தம் தவிர்க்கும் நோக்கில் கிறித்து என எழுதுவதை வரவேற்கிறேன். கிரந்தம் தவிர்த்து எழுதிய பின்னரும் பலருக்கும் புரியும் எனில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதே நல்லது. அதே சமயம் ஒட்டு மொத்தமாக கிரந்தம் தவிர்த்து எழுதுவது (ஹஜ்-அச்சு) பயன் தராது என எண்ணுகிறேன். மேலும் கிரந்தம் பயன்படுத்தலை மதம் சார்ந்து அணுகுதலைவிட வாசிக்கும் மக்களின் பயன்சார்ந்து அணுகுதல் நல்லது.--இரா. பாலா (பேச்சு) 13:55, 4 சூன் 2017 (UTC)

இவ்வளவு தெளிவாக தெரிவித்த பின்னும் கேள்வி கேட்பது எதற்கு? ஹிந்து சமயம் என்பது சரியாக இருந்தால், அதில் தவறில்லை. அதனை அச்சமயத்தில் என்னைவிட அறிவுள்ளவர்களிடமே விடுகிறேன். இலண்டன் தாக்குதல், ஜூன் 2017 என்பதில் சூன் என்று எழுதியிருக்கலாமே? பலருக்கும் புரியும்தானே? கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு இப்படித்தான் பெயர் வைப்போம் என்கிறீர்களா? --AntanO 15:08, 4 சூன் 2017 (UTC)

இதில் கிறித்தவம் என்ற மதம் சார்ந்து யாரும் நிலைபாடு எடுப்பதாகத் தெரியவில்லை. சூன், யூலை போன்றவை தமிழகத்தில் அதிகப் பழக்கத்தில் இல்லாதவை. நான் எழுதுதில் பொதுப் புழக்கத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்துகிறேன். மேலும் இலண்டன் தாக்குதல், சூன் 2017 என மாற்றுவதாகிலும் மாற்றலாம். உதாரணமாக யாவாக்கிறிட்டு என்ற சொல்லை மட்டும் சொன்னால் தமிழகத்தில் எத்தனை பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. ஆனால் கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.--இரா. பாலா (பேச்சு) 15:53, 4 சூன் 2017 (UTC)

//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// ஆதாரம்? கீழுள்ள கருத்தையும் கவனிக்க. --AntanO 16:23, 4 சூன் 2017 (UTC)

தேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான். //கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர்// இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மதம் சார்ந்து இங்கு யாரும் இயங்குவதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 16:53, 4 சூன் 2017 (UTC)
//தேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான்.// விக்கிப்பீடியா இதனை ஏற்றுக் கொள்ளுமா? ஆம் எனில் குறித்த விக்கிப்பக்கம் சுட்டுக. --AntanO 16:58, 4 சூன் 2017 (UTC)
ஆதாரம் எனக்குறிப்பிட்டது இவ்வுரையாடலுக்குத்தான். அதாவது அச்சொல் பழங்காலமாகப் புழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே. அச்சொல்லைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் கொள்கை சார்ந்தது. கிறுத்துவம் கிறித்து எனும் சொல் தமிழகத்தில் கிறித்துவ நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வழக்கமாகப் பயன்படுத்துவதுண்டு. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அச்சொல்லைப் பயன்படுத்துவதால் குழப்பம் வராது. பொதுவாகவே முடிந்த அளவு கிரந்தம் தவிர்த்தல் எனும் கொள்கையுடனே பலர் எழுதிவருகிறோம். கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அதன் பொருள் புரியும் என்றால் அதை எழுதுவதே நல்லது என்பதே எனது நிலைபாடு. இதில் மதம் சார்ந்த பார்வை இல்லை. பிற பயனருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 17:08, 4 சூன் 2017 (UTC)

வணிகப் பெயர்களுக்கும் பிற பெயர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் சிலர் கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர். முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இது சரி என்பீர்களா? என்னுடைய நியாமான கேள்விகளையும் விளக்கங்களையும் தவிர்த்து ஏரணம் கற்பிக்கின்றனர். இது நியாயமற்ற நிலை. --AntanO 15:24, 4 சூன் 2017 (UTC)

தேடுபொறியில் வருகிறது, நிறுவனங்கள் பயன்படுத்துகிறது என்ற ஏரணம் தவிர்த்து விக்கி வழிகாட்டலின்படி முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் நிருபிக்க. --AntanO 17:12, 4 சூன் 2017 (UTC)

//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// என நான் குறிப்பிட்டதற்குத் தான் ஆதாரம் கேட்டீர்கள். தேடு பொறியில் கிடைக்கிறது என்பதே அது புழக்கத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரம்தானே. கொடுக்கப்பட்ட ஆதாரம் விக்கிப்பிடியா ஏற்றுக் கொள்ளாதது என்பதால் அது புழக்கத்தில் இல்லை என ஆகிவிடுமா? ஏரணம் தவிருங்கள்.--இரா. பாலா (பேச்சு) 17:17, 4 சூன் 2017 (UTC)
தேடு பொறியில் கிடைக்கிறது என்பது ஆதாரமா? --AntanO 17:24, 4 சூன் 2017 (UTC)
புழக்கத்தில் இல்லாமல் அச்சொல் எப்படி தேடு பொறியில் வந்தது?--இரா. பாலா (பேச்சு) 17:26, 4 சூன் 2017 (UTC)

தேடு பொறியிடம்தான் கேட்க வேண்டும். தேடு பொறியில் புழக்கத்தில் உள்ளது என்பதற்காக முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இல்லாத, நடைமுறை வழக்கத்தில் இல்லாத சொல்லைத் திணிக்க வேண்டாம். --AntanO 17:29, 4 சூன் 2017 (UTC)

தமிழகத்தில் கிறித்தவம், கிறிஸ்தவம் எனும் சொற்கள் பலகாலமாக புழக்கத்தில் உள்ளன. எனவே இது திணிப்பு என கருதவில்லை. 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பாருங்கள். இது நம்பகமான ஆதாரம் இல்லை எனச் சொல்லாதீர்கள். இயல்பாகவே புழக்கத்தில் உள்ளது வலிந்து திணிக்கவில்லை என்பதைச் சுட்டவே இதைக் குறிப்பிட்டுள்ளேன்.--இரா. பாலா (பேச்சு) 17:35, 4 சூன் 2017 (UTC)
ஆனால் அதைவிட முதலாம், இரண்டாம் நிலை மூலங்களில், பொது நடைமுறை வழக்கத்தில் உள்ள சொல்லை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அக்கட்டுரையில் உள்ளே பல தடவைகள் "கிறிஸ்து" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது விவிலியத்தைவிட சிறந்ததா? ஜெயமோகன் உதாரணம் காட்டும் நீங்கள் ஏன் விவிலியச் சொல்லாடைலை மறுக்கிறீர்கள்? நான் ஒரு வலைப்பூவிலில் "இந்ந்து" என்று பதிவுசெய்தாலும் காட்டும். --AntanO 17:55, 4 சூன் 2017 (UTC)

தமிழ் விக்கியில் 5 ஏப்ரல் 2009 இல்தான் கிறிஸ்து "கிறித்து" என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது December 10, 2009 --AntanO 17:58, 4 சூன் 2017 (UTC)

June 4, 2000 - April 4, 2008 காலப்பகுதியில் "கிறித்து" என்ற சொல் காணப்படவில்லை. --AntanO 18:06, 4 சூன் 2017 (UTC)
வலுக்கட்டயமாக த.வி. "கிறித்து" என்ற சொல்லைக் கொண்டு வந்துள்ளது. "கிறிஸ்து" என்று எழுதியதை ஏன் கிறித்துவாக்கினீர்கள். அதன் இயல்பிலேயே விட்டிருக்கலாமே? --AntanO 18:09, 4 சூன் 2017 (UTC)
கிறிஸ்து கட்டுரையில் தலைப்பு மாற்றம் பற்றி உரையாடப்படவில்லை. த.வி. கிறிஸ்துவை கிறித்துவாக்கிவிட நான் உட்பட பலரும் அதையே பின்பற்றினோம். ஆனால் தொடர்ந்து கண்ணை மூடிக் கொண்டு பினபற்றவியலாது. --AntanO 18:17, 4 சூன் 2017 (UTC)
சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் அல்லது ஏரணத்துடன் உரையாடுகிறீர்கள். ஜெயமோகன் கட்டுரையனது அச்சொல் புழக்கத்தில் உள்ளது என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவர் குறிப்பிட்டதால் நாமும் மாற்ற வேண்டும் எனச் சொல்லவில்லை. விவிலியச் சொல்லை மறுக்கவில்லை. கட்டுரை நகர்த்தப்பட்டது தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நான் உரையாடியது மொத்தமும் இரண்டு அல்லது மூன்று கருத்துகளை முன்வைத்துதான்.
 • கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அனைவருக்கும் புரியுமென்றால் கிரந்தம் தவிர்த்தே எழுதலாம். இதில் எவ்வித மத ரீதியான பார்வை இல்லை.
 • கிறித்து எனும் சொல் பலகாலமாகவே புழக்கத்தில் உள்ளது.
 • ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட தேடுபொறி முடிவுகள் மற்றும் ஜெயமோகன் கட்டுரை அது புழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே.

நீங்கள் ஒட்டு மொத்தமாக தவறாகப் புரிந்துள்ளீர்கள்.--இரா. பாலா (பேச்சு) 18:26, 4 சூன் 2017 (UTC)

@George46:, இது தொடர்பாக உங்கள் கருத்து தேவை. --இரவி (பேச்சு) 20:13, 4 சூன் 2017 (UTC)

சென்னை கிறித்துவக் கல்லூரி

@AntanO:, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --இரவி (பேச்சு) 21:05, 4 சூன் 2017 (UTC)

நீங்கள் குறிப்பிடும் ஒருவிடயத்திற்கு பதில் அளிக்க, வேறு வழியால் வந்து இன்னுமொரு ஏரணம் கற்பிக்க வேண்டாம். கிறிஸ்து, கிறிஸ்தவம் ஆகிய சொற்களைத் திரிபுபடுத்த வேண்டாம். பல நூறு கிறிஸ்தவர்கள் "கிறிஸ்து" என்பதையே ஏற்றுக்கொள்வர். இல்லாவிடின், அவமதிப்பு. வட்டாரவழக்கில் சமயங்களை அவமதிக்கும் சொற்கள் பற்றித் தெரியுமா? --AntanO 02:55, 5 சூன் 2017 (UTC)

நான் இதுவரையும் கலைக்களஞ்சியத்துக்குரிய பாணியில் கருத்துரைத்தேன் விளங்கிக் கொள்வதாயில்லை. ஆகவே, எனது உரையாடலின் காரணத்தின் மறுபக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

சாதாரண கிறிஸ்தவர்களின் விசுவாசம் கடளுவுளின் பெயரைத் தவறாக் பயன்படுத்தாமலும், விவிலியத்தில் உள்ள சொற்களை ஒற்றையேறும் மாற்றமையிலும் தங்கியுள்ளது. இதிலுள்ள உண்மையான பொருள் இறையியல் கற்றவர்களுக்கே தெரியும். ஆனால் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இவ்வாறான பெயர் மாற்றத்தை தன் சமயத்திற்கு எதிரான தாக்குதலாகவே கருதுவான். கடவுளர் சிலை உடைந்தால், பயத்துடன் ஆலயத்தில் கொண்டு சேர்க்கும் கிறிஸ்தவர்கள் இன்னும் உள்ளனர். விவிலியத்தை கடவுளாகக் கருதும் பலர் இன்னமும் உள்ளனர்.

கிறிஸ்தவத்தில் வெறுப்புக் கொண்டோர் வசையாக, இயேசு என்பதை "ஏசு" (scold) என்று பயன்படுத்துவது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நீங்கள் தெரிந்துதான் மறுதலிக்கிறீர்களா அல்லது திட்டமிட்டுச் செயற்படுகிறீர்களா என்று அறியேன். ஆனால், கிறிஸ்து எனும் பெயரை காரணம் கற்பித்து மற்றுவது கிறிஸ்தவம் மீதான அடக்குமுறையில் ஒரு வடிவம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். "என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்." (லூக்கா 21:17) என்ற இறைவாக்குடன் இதைத் தொடர்புபடுத்துவுண்டு. இன்னும் தெளிவில்லாவிட்டால் மேலும் சில சிக்கலான உதாரணங்களையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். --AntanO 03:46, 5 சூன் 2017 (UTC)

கீழே பவுல் தந்த விளக்கத்தை அடுத்து கிறிஸ்து என்ற சொல்லுக்கு முன்னுரிமை தருவது ஏற்புடையதே என்ற முடிவுக்கு வந்துள்ளேன். 14 ஆண்டுகளாகச் செயற்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தான் இது சுட்டிக்காட்டப்படுகிறது என்பதால் இப்பின்னணி தெரிந்தே யாரும் வலிந்து கிறித்து என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எண்ண இடம் இல்லை. நன்றி. --இரவி (பேச்சு) 04:55, 5 சூன் 2017 (UTC)

"கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து[தொகு]

தவிர்க்க முடியாத காரணங்களால் த.வி.யில் நீண்ட காலமாக என் பங்களிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. வருந்துகிறேன். எனினும், இரவி என்னிடம் கருத்துக் கேட்டமையால் இப்பதிவு.

பயனர்கள் பலர் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கருத்துப் பற்றியும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன். சுருக்கமாக:

1) கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றி த.வி.யின் பொதுக்கொள்கை எனக்கு ஏற்புடையதே. “இயன்ற மட்டும்” என்று வரையறுப்பதும் ஏற்புடையதே.

2) நான் “கிறித்தவம்” என்று இதுவரை எழுதி வந்துள்ளேன். சிலர் இதைக் “கிறித்துவம்” என்றும் கூறுவர். இது எழுத்துத் தமிழ். ஆயினும் பொதுவான பேச்சுத் தமிழிலும், கிறித்தவர்களின் மறையுரைகளிலும் “கிறிஸ்தவம்”, “கிறிஸ்துவம்” என்ற சொற்களே மிகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் உள்ளன.

3) “கிறிஸ்து” என்ற சொல்லை “இயன்ற மட்டும்” மாற்றாமல் விட்டுவிடுவது நன்று. இதற்கான அடிப்படைக் காரணம், 1995ஆம் ஆண்டு கிறித்தவ சபைகள் ஒன்று சேர்ந்து, தற்காலத் தமிழில், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, வடமொழிச் சொல்லாடலை ஒதுக்கிவிட்டு, “அவன்”, “அவள்” என்னும் சொற்களுக்குப் பதில் “அவர்” என்று மரியாதைப் பன்மைப் பயன்படுத்தி, மதுரை மாநகரில் வெளியிட்ட “திருவிவிலியம்” (பொது மொழிபெயர்ப்பு) இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புகளுள் தலைசிறந்ததாக அமைந்துள்ளதும், அம்மொழிபெயர்ப்பு Christos, Christus, Christ என்று முறையே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்ற சொல்லைக் “கிறிஸ்து’ என்று மொழிபெயர்த்துள்ளதும் ஆகும். இச்சொல் கிறித்தவ சமயத்திற்கு அடிப்படையான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

எனவே, “கிறிஸ்து” என்ற சொல்லை அவ்வாறே தருதல் கிறித்தவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகும்.

4) தேடுபொறிப் பயன்பாடு பற்றிய நுட்பங்களை விரிவாக அறியாத எனக்கு அதுபற்றித் தனிக் கருத்து இல்லை. இருப்பினும், “கிறிஸ்து” (”கிறித்து”), “கிறிஸ்தவம்” ( “கிறித்தவம்”), “கிறிஸ்துவம்” (”கிறித்துவம்”) என்று மாற்றுச் சொற்கள் கொடுக்க தேடுபொறியால் முடியும் என்றால் அதை அறிமுகப்படுத்தலாம்.

5) த.வி.யின் “விக்கிமூலத்தில்” தமிழ் விவிலியம் முழுவதையும் பதிவு செய்தேன். அங்கு தமிழ் விவிலியத்தின் பாடம் அச்சுப் பதிப்பில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது. எனவே, அங்கு “கிறிஸ்து” என்ற சொல் வருமே ஒழிய “கிறித்து” வராது. எனவே, தேடுபொறியில் “கிறித்து” என்று மட்டுமே கொடுப்பதாக இருந்தால், ”கிறிஸ்து” என்ற விவிலிய பாடம் அங்கு தோன்றாமலே போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். அது சரியாகாது.

6) கிறித்தவத்தில் வழங்குகின்ற பிற சிறப்புப் பெயர்ச்சொற்களையும் வலிந்து திரிக்காமல் விட்டுவிடுவதே நன்று. விவிலியப் பெயர்கள் பெரும்பாலும் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளினின்று பிறந்தவை. சில பெயர்கள் கிறித்தவ வரலாற்று வழக்கத்தில் குறிப்பிட்ட வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, யோசேப்பு, யாக்கோபு, யூதா போன்றவற்றைக் காட்டலாம். இவற்றிற்கு முன் “இ” எழுத்தை இடுவது முறையாகாது. “இயேசு” என்ற சொல் கிறித்தவர்களிடையேயும் தமிழ் விவிலியத்திலும் உள்ள சொல். அதை “ஏசு” என்றோ “யேசு” என்றோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தேடுபொறியில் அச்சொற்களை மாற்றுச் சொற்களாகத் தரலாம். ஏனென்றால் பலர் அச்சொல் வடிவங்களைக் கையாளுகிறார்கள்.--பவுல்-Paul (பேச்சு) 00:36, 5 சூன் 2017 (UTC)

@George46:, விரிவான கருத்துகளுக்கு நன்றி. இக்காரணங்களை முன்னிட்டு கிறிஸ்து என்றே தமிழ் விக்கிப்பீடியாவில் அழைப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. இத்தகைய சமயப் பின்னணி அல்லாத மற்ற பயனர்களுக்கு கிறித்து (எதிர்) கிறிஸ்து என்ற சொற் பயன்பாட்டின் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவின் சமயச் சாய்வாகப் பார்க்கப்பட்டதே என் வருத்தம். தங்களைப் போன்ற இறையியல் பேராசிரியர்களும் கிறித்து என்று எழுதியதால் அது ஏற்புடைய வழக்கே என்று கருதினேன். அதே போல், ஒவ்வொருவரும் தங்கள் துறை அல்லது விருப்பமான ஆளுமை சார்ந்து தனித்தமிழ் நடையை அவமதிக்கும் வழக்காகப் பார்ப்பது (இராமானுசன் குறித்த முந்தைய உரையாடல்) தமிழைத் தீட்டு மொழியாகப் பார்ப்பதற்கு ஒப்பாகும் என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். --இரவி (பேச்சு) 04:52, 5 சூன் 2017 (UTC)


@George46: உங்கள் விரிவான, விளக்கமான பதிலுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 13:58, 5 சூன் 2017 (UTC)
@George46: விளக்கத்துக்கு மிக்க நன்றி. --- மயூரநாதன் (பேச்சு) 15:34, 5 சூன் 2017 (UTC)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!--பவுல்-Paul (பேச்சு) 19:36, 5 சூன் 2017 (UTC)

தமிழகத்து ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகள்...[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பயிற்சி பெற்ற தமிழகத்து ஆசிரியர்கள் சூன் மாதத்திலும் தமது பங்களிப்பினைத் தொடர்கிறார்கள். இது மகிழ்ச்சியைத் தந்தாலும், பெரும்பாலான கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டிய சூழலும் இருக்கிறது. இதற்கு நம்மிடம் போதிய மனித வளம் இல்லையென உணர்கிறேன். இதனை ஒரு புகாராக தெரிவிக்கவில்லை. ஆனால் உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என்பதனை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இப்போது தொடர்பங்களிப்பாளர் போட்டியும் நடப்பதால், தன்னார்வலர்களை அணுகுவதிலும் தயங்குகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:16, 7 சூன் 2017 (UTC)

உருவாக்கப்படும் கட்டுரைகள் அனைத்துக்கும் உரிய பராமரிப்பு வார்ப்புருவை இணைப்பது மிக அவசியம். ஒரு சில பயிலுனர்கள் பராமரிப்பு வார்ப்புருக்களைத் தாமாகவே நீக்குகிறார்கள். இவற்றை அடையாளம் கண்டு வார்ப்புருவை மீண்டும் இணைக்க வேண்டும். ஒரு சிலர் பல தலைப்புகளில் ஒரே கட்டுரையை எழுதுகிறார்கள். இவையும் கவனிக்கப்பட வேண்டும். வார்ப்புரு இடப்பட்டால் எவையும் தவறிப் போக இடமில்லை. ஆர்வமுள்ளவர்கள் படிப்படியாக கட்டுரைகளைத் திருத்தக்கூடியதாக இருக்கும்.--Kanags \உரையாடுக 07:51, 7 சூன் 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் ! இருக்கும் மனிதவளமும் ஒருங்கிணைந்து செயற்பட, ஏற்கனவே செயற்படுபவர்கள் எந்த ஒருங்கிணைப்பு பக்கத்தில் தங்களது அறிமுக முறைகளைத் தெரிவிக்க வேண்டும். நான் பயிலுடமிட்டத்தில்(மணல்தொட்டி) மட்டுமே முதற்கட்டமாக செயற்பட கோரியுள்ளேன். எனது அலைப்பேசி எண்ணையும் தந்துள்ளேன். என்னை அழைத்தால், அலைப்பேசி வழியே சொல்லித் தருகிறேன். அது நல்ல பலனையும், சமூக இணைப்பையும் உருவாக்குகிறது.
Kanags ! வார்ப்புரு இடுதலைவிட, அதற்கு உரிய பகுப்பினை உருவாக்கினால், இதுபோன்ற நீக்கல் பணியும், மறு இணைப்பு பணியும் குறைய வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து நகல் எடுக்கும் போது, அங்குள்ள வார்ப்புரு நீக்க சொன்னவருள் நானும் ஒருவன். அதனால் இங்கும் நீக்குகின்றனர் என்றே எண்ணுகிறேன். எந்த பகுப்பினையும் நீக்காதீர்கள் என்று கூறலாமா? அப்பகுப்புரையில், செய்ய வேண்டியன பற்றி நாம் அனைவரும் இணைந்து உரையாடி துப்புரவு செய்யலாமென்றே எண்ணுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 08:16, 7 சூன் 2017 (UTC)
இல்லை, ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புருக்களோ அல்லது பகுப்புகளோ இங்கு நேரடியாக இறக்குமதி செய்யத் தேவையில்லை. அவற்றை நீக்கலாம். ஆனாலும், நமது cleanup june 2017 வார்ப்புரு கட்டாயம் நமது பயனர் ஒருவரால் சேர்க்கப்பட வேண்டும். வார்ப்புரு இல்லாமல் வெறுமனே பகுப்பு இருப்பது பராமரிப்பைத் தாமதமாக்கும், அது மட்டுமல்லாமல் கட்டுரை தரமாக இல்லாதவிடத்து அல்லது அலங்கோலமாக இருந்தால் வார்ப்புரு இருப்பது அதன் மீது கூடுதல் கவனமெடுக்க வாய்ப்பிருக்கும்.--Kanags \உரையாடுக 08:25, 7 சூன் 2017 (UTC)

சூனில் உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்படுகின்றனவா அல்லது இப்போதும் ஏதேனும் புதிய பயிற்சிகள் நடக்கின்றனவா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 7 சூன் 2017 (UTC)

யாராவது அறிந்திருந்தால் தெரிவிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 9 சூன் 2017 (UTC)

சூனில் உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்படுகின்றனவா அல்லது இப்போதும் ஏதேனும் புதிய பயிற்சிகள் நடக்கின்றனவா என்பது குறித்து யாரேனும் அறிந்திருப்பின், தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்தும் புதிய பயிற்சிகள் நடத்தவிருப்பதாக திட்டமிருந்தால், போதுமான மனித வளங்களை தயார்படுத்திக் கொண்டு அதன்பிறகு ஆரம்பித்தாலே நல்லது. இல்லையெனில் துப்புரவு செய்து மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளை கட்டுப்படுத்துதல் / ஒழுங்குபடுத்தி மேம்பாடு செய்தல் ஆகியவை இன்னமும் மிகக் கடினமாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:54, 15 சூன் 2017 (UTC)

புதிதாகப் பயிற்சி எதுவும் நடைபெறவில்லை எனவே நினைக்கிறேன். தற்போது எழுதுபவர்கள் ஏற்கனவே பயிற்சி எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:34, 15 சூன் 2017 (UTC)
புதிய பயிற்சி ஏதும் இல்லை. ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆர்வத்தில் பேரில் தொடர்கிறார்கள். அடுத்த கட்ட பயிற்சி எப்போது வேண்டுமானாலும் ஒருங்கிணைக்கப்படலாம். ஏற்கனவே பயிற்சி பெற்று நன்கு பங்களித்து வரும் ஆசிரியர்களை அடுத்த கட்டப் பயிற்சிகளுக்குப் பயிற்சியாளர்களாக அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். --இரவி (பேச்சு) 06:40, 16 சூன் 2017 (UTC)

யூடியூப் காணொளிகள்[தொகு]

பயனர் ஒருவர் எனது உரையாடல் பக்கத்தில் கேட்டிருந்தது. காணொளிகள் உருவாக்குவதில் எனக்கு அதிக அனுபவம் இல்லாததால் இங்கு இதனைப் பகிர்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 12:16, 24 சூன் 2017 (UTC)

வணக்கம். கடந்த இருபது வருடமாகத் தமிழ் நவீன இலக்கியம் வாசித்து வருகிறேன். ராணிதிலக் என்ற பெயரில் 5 கவிதைத்தொகுதிகள் வந்துள்ளன. கும்பகோணம் நகரில் அரசுப் பள்ளயில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். விக்கியில் எழுதுதல் தொழில்நுட்பம் தெரியாததால், youtube wki tutorial பார்த்துச் செய்துவருகிறேன். தற்போது அதுபோன்ற காணொலிகள் தயாரித்து அளிக்க விக்கிப் பீடியர்களைக் கேட்க இயலுமா?

தவிரவும் கீழ்க்கண்ட தலைப்புகளில் உருவாக்கினால் நலம்.

 1. பயனர் கணக்கு உருவாக்கம்
 2. புதிய கட்டுரையை எழுதுதல்
 3. கருத்து எண் இடுதல்
 4. படம் ஏற்றுதல்
 5. இணைய இணைப்பு இடுதல்
 6. சான்று, மேற்கோள் இடுதல்
 7. பகுப்பிடுதல்

மற்றும்

 1. பேச்சு
 2. மணல்தொட்டி
 3. விருப்பத்தேர்வுகள்
 4. பீட்டா

மற்றும்

 1. விக்னசரி
 2. விக்கி செய்திகள்
 3. விக்கிமூலம்
 4. விக்கிநூல்கள்
 5. பொதுவகம்
 6. விக்கித்தரவு

ஆகியவற்றைப் பற்றிய அறிமுகக் காணொலிகள் யூடியுப்பில் தமிழில் இருந்தால் நலம்.--−முன்நிற்கும் கருத்து Raa.damodaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Kanags and Raa.damodaran:, விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் என்ற பக்கத்தில் இத்தகைய காணொளிகளைக் குவித்து வருகிறேன். இவர் பட்டியல் இட்டுள்ளவை பெரும்பாலான ஆசிரியர்கள் அறிய விரும்புபவை. இயன்ற அளவு விரைவில் பதிவேற்றுகிறேன். --இரவி (பேச்சு) 15:54, 24 சூன் 2017 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்[தொகு]

விக்கிப்பீடியா:தேவைப்படும் கட்டுரைகள்/இயற்பியல் காண்க. இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படாத 1000 இயற்பியல் தலைப்புகளின் பட்டியல். ஒவ்வொரு கட்டுரைக்கும் எத்தனைக் கட்டுரைகளில் இருந்து இணைப்புகள் வருகின்றன என்பதன் அடிப்படையில் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதே போல் ஒரு கட்டுரை எத்தனைப் பக்கப் பார்வைகள் பெறுகின்றது என்ற அடிப்படையிலும் வரிசைப்படுத்த இயலும். ஆனால், அது காலத்துக்குக் காலம் மாறும். முன்பு அடுத்து உருவாக்க வேண்டிய 50000 முக்கியக் கட்டுரைகளின் பட்டியல் தேவை என்று கேட்டிருந்தேன். ஆனால், அப்படி ஒரு பட்டியலை உருவாக்க அசாத்தியமான உழைப்பும் உரையாடலும் தேவை என்பதால் இது போன்ற பட்டியல்களைப் பல்வேறு துறைகளுக்கும் உருவாக்கலாமா? உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். @Tshrinivasan: நீங்கள் பல மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிய கட்டுரைகளின் பட்டியலை எப்படி உருவாக்கினீர்கள்? -- இரவி (பேச்சு) 12:17, 30 சூன் 2017 (UTC)

தமிழ்ப்பரிதி மாரி @Thamizhpparithi Maari: அவர்கள் துறைவாரியாக தலைப்ப்பு தேவைப்படும் பகுப்புகளின் ஒரு பெரிய பட்டியலை 8 மணி நேரம் உழைத்து உருவாக்கித் தந்தார். அவற்றை ஆய்ந்து தமிழில் இல்லாத

கட்டுரைகளின் பட்டியலை உருவாக்கினேன். என் அலுவலக நண்பர் தினேசு, அவற்றை 32 மாவட்டங்களுக்கும் சமமாகப் பிரத்தார். --த.சீனிவாசன் (பேச்சு) 13:27, 30 சூன் 2017 (UTC)

புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கும் போது நானும் கலந்துகொள்கிறேன். நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 22:38, 30 சூன் 2017 (UTC)
@Tshrinivasan:, தகவலுக்கு நன்றி. Petscan போன்ற கருவிகள் பயன்படுத்தினீர்களா அல்லது நீங்களே இதற்கென உருவாக்கிய நிரல்கள் ஏதேனும் உள்ளதா என்று அறிந்து ஆவணப்படுத்தவே கேட்டேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:02, 3 சூலை 2017 (UTC)

த.வி தரமும் தேடல் பொறியும்[தொகு]

நான் விக்கிமீடியா திட்டங்களில் தன்னார்வலராக பங்களிப்பது போல் Google Maps (Google Local Guides), Google search console ஆகியவற்றிலும் பங்களிப்பதுண்டு. கூகுள் தேடலில் வரும் பொருத்தமற்ற அல்லது பிழையான உள்ளடக்கங்களை அறிக்கையிட்டும் பங்களிப்புச் செலுத்துகிறேன். அவற்றில் தமிழ் தொடர்பான உள்ளடக்கங்களில் த.வி.யின் பல பொருத்தமற்ற பக்கங்களையும் காண நேர்ந்தது. சில மூல பக்கங்களை (original source) பின்னுக்குத் தள்ளிய த.வி.யின் பதிப்புரிமை மீறிய பக்கங்கள் (copied page) முன்னே உள்ளன. இவற்றுடன் தனியக்க மொழிபெயர்ப்புக்களும் கூகுள் தேடலில் இடம் பெற்றுள்ளன. எ.கா: உளவியல் எனும் கட்டுரை. இவற்றை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லை. காண்க: Automatically generated content. மேலதிக தகவலுக்கு Content guidelines, Quality guidelines ஆகியவற்றையும் காணலாம்.

அண்மைக் காலமாக அதிகமான தரமற்ற, தானியக்கத் துணையுடனான பக்கங்கள் த.வி.யில் அதிகரிக்கின்றன. மேலும், தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் விசமத் தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் இன்னுமொரு பகுதியாக பல இணைப்புகள் விக்கித்தரவிலும் மாற்றப்படுகின்றன. எ.கா: Changed link to [tawiki]: Delhi பல கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்படவில்லை. (சுற்றுக்காவல் என்பது [இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி] என்பதைச் சொடுக்குவதல்ல என்பதை நினைவிற் கொள்ளவும்) சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் இன்று பல கட்ரைகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் பல தரமுமற்று, அடிப்படை இலக்கணமின்றியும் உள்ளன. தரமாக உருவாக்க தற்போது பங்களிப்புச் செய்யும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என வாதிடலாம், ஆனால் ஆசிரியர்களுக்கு அடிப்படை இலக்கணமும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளதா? ஆகமொத்தத்தில் தரமற்ற நிலைக்கு த.வி போய்க் கொண்டிருக்கிறது.

கூகுள் பொதுவாக விக்கிப்பீடியாக் கட்டுரைகளை "அரை மனதுடன்தான்" ஏற்றுக் கொள்கிறது. அதற்கான காரணமாக, கல்விசார் நிறுவனங்கள் கூறுவதுபோல் “விக்கிப்பீடியாக் கட்டுரைகளை எளிதில் மாற்றிவிடலாம், துறைசாராத நிபுணர்களின் இறுதி ஆக்கம் இன்றி கட்டுரைகள் அமைதல் (People edit Wikipedia for fun!), சார்பு (bias) காணப்படுதல் போன்றனவாகும். ஆ.வி கட்டுரைகள் பல கூகுள் தேடலில் தடுமாறிக் கொண்டிருக்க, த.வி.யின் தரம் சிந்திக்கப்பட வேண்டியது. கூகுள் நிறுவனம் தேடல் வடிகட்டலை தற்போது உள்ளதைவிட சிறப்பானதான மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக உள்ளடக்கங்கள் தொடர்பில் அறிக்கையிடுவதையும் முறையாகச் செயற்படுத்துகிறது. த.வி.யிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் கூகுள் பார்வையில் சிக்கல் மிக்கதாகவுள்ளன. எனவே இவைதொடர்பிலும் அறிக்கை இடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான அறிகையிடல், பலர் அறிக்கையிடல் என்பது த.வி தொடர்பில் நேர்மறையான எண்ணத்தை கூகுளுக்கு உருவாக்கலாம். இது தொடர்பில் ஆக்கபூர்வமாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --AntanO 07:46, 3 சூலை 2017 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது இயங்குவதாக எனக்குப் படுகிறது. கைமீறிச் செல்கிறது. தமிழக அரசு அதிகாரிகள் தமிழ் விக்கியைக் குத்தகைக்கு எடுத்துள்ளார்கள் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:08, 7 சூலை 2017 (UTC)
ஒரு சிலருக்கு த.வி சொந்தமாகிவிட்டதுபோல் உள்ளது. ஒருசிலரே இங்கு தீர்மானம் எடுப்பவர்களாகவுள்ளனர். கேள்வி கேட்டால் பிரிவினைவாதி என்று நம்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிடுவர். பயிற்சியாளர்கள் எதன் அடிப்படையில் பயிற்சி வழங்குகின்றனர்? பயிற்சியாளர்களில் எத்தனை பேருக்கு விக்கி நடைமுறையில் தெளிவுள்ளது? கவனிக்க: @Mayooranathan and Natkeeran: --AntanO 04:17, 8 சூலை 2017 (UTC)
நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டோர் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் இங்கும் இங்கும் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இவ்வுரையாடல்களின் அடிப்படையில் கூடுதல் கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:44, 8 சூலை 2017 (UTC)
இது தொடர்பில் ஆக்கபூர்வமாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.--AntanO 11:45, 8 சூலை 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான பயிற்சி பரந்து பட்ட பயனர்களைச் சென்றடைய மிகவும் முக்கியமானதும் வரவேற்கப்படும் ஒரு செயற்திட்டம் ஆகும். இதற்கு தமிழ் விக்கியில் பரந்த ஆதரவு உண்டு. அதில் பல அறியப்பட்ட குறைகள் உள்ளன. இது தொடர்பாக best practices, பயிற்சிகள் மேம்படுத்தல்கள் செய்வது தொடர்பாக விரிவாக ஆயப்பட்டு வருகிறது. ரவி சுட்டியபடி கடந்த விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள் இது பற்றி நாம் விரிவாக உரையாடினோம். மேலும், clean up செய்யு வேண்டிய கட்டுரைகள் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதைக் கையாழுவதற்கான வழிமுறைகளை, அதற்கு தேவைப்படும் மேலதிக வளங்களை பெறுவது பற்றியும் நாம் மேலும் ஆய வேண்டும். பயிற்சிகளை எப்படி மேம்படுத்துவது, எழுதப்படும் கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது, துப்பரவுப் பணிகளை எப்படிச் செய்வது தொடர்பாக ஆக்கபூர்வமாக நாம் தொடர்ந்து இதனை அணுகுவோம் ஆகா. குறிப்பாக அனுபவம் மிக்க ஆசிரியர் பயனர்களை துப்பரவுப் பணியில் இந்தச் செயற்திட்டம் தொடர்பான கட்டுரைகளை துப்பரவு செய்ய ஈடுபடுத்துத்த வேண்டுவது பற்றி பரீசிலிக்கலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:15, 9 சூலை 2017 (UTC)
என்னுடைய கருத்துகள்:-
1. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகள் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டு முடிக்கப்படும்வரை, ஆசிரியர்களுக்கான புதிய பயிற்சிகள் எதுவும் நடத்தப்படக் கூடாது. அதாவது - புதிதாக எவருக்கும் பயிற்சியளிக்கக் கூடாது. இதனை எதற்காக சொல்கிறேன் என்றால்... புதிதாக பங்களிப்போரின் எண்ணிக்கையை இப்போதைக்கு நிறுத்தி, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தேவையெனில், பள்ளிக் கல்வித் துறை ஏற்றுக்கொள்ளும் எனில், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி தரலாம்.
2. விக்கியின் வழமையான பயனர்கள் ஆளுக்கு ஒரு மாவட்டத்தின்மீது கவனம் செலுத்தி, துப்புரவுப் பணிகளைச் செய்தாலும் அனைத்தையும் முடிக்க பல மாதங்கள் ஆகும். தவிர, ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும் நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போதைக்கு பூங்கோதை அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின்மீது கவனம் செலுத்தி, நாள்தோறும் நேரம் செலவிட்டு 50% பணியினை முடித்துள்ளார். கனக்சு, நந்தகுமார், இரவி, நான் ஆகியோர் எங்களால் இயன்றளவு செய்து வருகிறோம். உருவாக்கப்பட்டுள்ள / உருவாக்கப்பட்டு வரும் கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பெருமளவு மனித ஆற்றலும், துப்புரவுப் பணிக்கான முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளும் தேவை.
3. ஓரளவு சிறப்பான பங்களிப்பினைத் தந்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை மாவட்டவாரியாக அடையாளங்கண்டு, அவர்கள் மூலமாக துப்புரவுப் பணியை மேற்கோள்ள வேண்டும். இவர்களுக்கு முறையாக வழிகாட்டினால் சிறப்பாக செய்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏற்கனவே ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக Officialஆக இப்பணியைச் செய்தால் மட்டுமே விரைவாக செய்து முடிக்க இயலும். இவ்வகையான அனுமதி பெறுவது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை. எனினும் இதுவே எனது பரிந்துரை.
4. தானியங்கி மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவை ஆகியன அவசர கதியில் அடையாளங் காணப்பட்டு நீக்கப்படல் வேண்டும்.
5. இது ஒரு ஒருங்கிணைப்புப் பக்கம்:- விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல்
6. இந்த செயற்திட்டத்தால் சில நன்மைகளையும் உணர்கிறேன். சில நல்ல பங்களிப்பாளர்கள் ஏற்கனவே உருவாகியுள்ளனர். பங்களிக்க ஆர்வமுள்ள பல பயனர்களை காண முடிகிறது. குறைகளைக் களைந்து, துப்புரவுப் பணிகளை முறையாக செய்து முடித்துவிட்டால்... தமிழகத்து ஆசிரியர்களிடமிருந்து தரமான பங்களிப்பினை எதிர்காலத்தில் தமிழ் விக்கி பெறும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:32, 9 சூலை 2017 (UTC)
இப்பயிலரங்கின் மூலம் பலரிடம் தமிழ் விக்கிப்பீடியா போய்ச் சேர்ந்திருக்கிறது. குவிந்திருக்கும் துப்புரவுப் பணிகளை எவ்வாறு முடிக்கலாம் எனத் திட்டமிட வேண்டும். சிறப்பாகப் பங்களிக்காத ஆசிரியர்கள் சிலகாலம் புதிய கட்டுரை தொடங்குவதை தடை செய்ய வழியுள்ளதா? இயலுமெனில் அதைச் செய்து என்ணிக்கையின் அடிப்படையில் தரமற்ற கட்டுரைகள் உருவாததைத் தடுக்கலாம். துப்புரவுப் பணிகளை முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கலாம்.--இரா. பாலாபேச்சு 09:04, 10 சூலை 2017 (UTC)

நீக்க வேண்டிய கட்டுரைகள்[தொகு]

நிருவாகிகள் இதைக் கவனிக்கவும்.--இரா. பாலாபேச்சு 03:42, 22 சூலை 2017 (UTC)

தொகுத்தல் போர்[தொகு]

முகம்மது நபி கட்டுரையை தற்காலிகமாகப் பூட்டினால் நலம். தேவையற்ற தொகுத்தல் நடைபெறுவதாகத் தோன்றுகிறது.--இரா. பாலாபேச்சு 09:23, 7 செப்டம்பர் 2017 (UTC)

பாராட்டுகள்[தொகு]

ماري المغربية எனும் பயனரின் அனைத்து விசமத் தொகுப்பினையும் கண்டறிந்து அவற்றை மீளமைத்ததோடு மட்டுமின்றி அவரைத் தடை செய்தமைக்காக பயனர்:AntanO மற்றும் பயனர்:Kanags இருவருக்கும் பாராட்டுகள். --இரா. பாலாபேச்சு 11:36, 20 செப்டம்பர் 2017 (UTC)

presenting the project Wikipedia Cultural Diversity Observatory and asking for a vounteer in தமிழ் Wikipedia[தொகு]

Hello everyone,

My name is Marc Miquel and I am a researcher from Barcelona (Universitat Pompeu Fabra). While I was doing my PhD I studied whether an identity-based motivation could be important for editor participation and I analyzed content representing the editors' cultural context in 40 Wikipedia language editions. Few months later, I propose creating the Wikipedia Cultural Diversity Observatory in order to raise awareness on Wikipedia’s current state of cultural diversity, providing datasets, visualizations and statistics, and pointing out solutions to improve intercultural coverage.

I am presenting this project to a grant and I expect that the site becomes a useful tool to help communities create more multicultural encyclopaedias and bridge the content culture gap that exists across language editions (one particular type of systemic bias). For instance, this would help spreading cultural content local to தமிழ் Wikipedia into the rest of Wikipedia language editions, and viceversa, make தமிழ் Wikipedia much more multicultural. Here is the link of the project proposal: https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Wikipedia_Cultural_Diversity_Observatory_(WCDO)

I am searching for a volunteer in each language community: I still need one for the தமிழ் Wikipedia. If you feel like it, you can contact me at: marcmiquel *at* gmail.com I need a contact in your every community who can (1) check the quality of the cultural context article list I generate to be imported-exported to other language editions, (2) test the interface/data visualizations in their language, and (3) communicate the existance of the tool/site when ready to the language community and especially to those editors involved in projects which could use it or be aligned with it. Communicating it might not be a lot of work, but it will surely have a greater impact if done in native language! :). If you like the project, I'd ask you to endorse it in the page I provided. In any case, I will appreciate any feedback, comments,... Thanks in advance for your time! Best regards, --Marcmiquel (பேச்சு) 21:58, 9 அக்டோபர் 2017 (UTC) Universitat Pompeu Fabra, Barcelona

Sockpuppets[தொகு]

FYI: Aware of Sockpuppets. --AntanO (பேச்சு) 20:19, 12 அக்டோபர் 2017 (UTC)

நன்றி அன்ரன். --Kanags (பேச்சு) 21:59, 12 அக்டோபர் 2017 (UTC)
அன்ரன், நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 23:59, 12 அக்டோபர் 2017 (UTC)
ஏற்கெனவே சில கைப்பாவைக் கணக்குகள் உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றுக்காக கட்டுரைகளை உருவாக்கப்பட்டன. அவற்றைத் தடுத்துவிட்டேன். தற்போது தொலைக்காட்சி அலைவரிசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் போன்ற கட்டுரைகளை உருவாக்கப்பயன்பட்டன. --AntanO (பேச்சு) 00:34, 13 அக்டோபர் 2017 (UTC)
இவர்கள் இப்பணியில் (விளம்பரத்துக்காக) ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் போல் தெரிகிறது.--Kanags (பேச்சு) 00:39, 13 அக்டோபர் 2017 (UTC)
அவ்வாறுதான் நானும் விளங்கிக் கொண்டேன். --AntanO (பேச்சு) 02:46, 13 அக்டோபர் 2017 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரம்[தொகு]

செப்டம்பர் 2017 மாதத்திற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக update செய்யப்படவில்லையே. ஏன்? --மகாலிங்கம் (பேச்சு) 17:52, 7 திசம்பர் 2017 (UTC)

எந்தப் புள்ளிவிபரங்கள் பற்றிக் கூறுகிறீர்கள்?. இணைப்புத் தருகிறீர்களா?--Kanags (பேச்சு) 20:42, 7 திசம்பர் 2017 (UTC)

Kanags, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் இந்த மாதாந்திரப் புள்ளிவிவரங்களைப் பற்றித் தான் குறிப்பிட்டேன்.--மகாலிங்கம் (பேச்சு) 00:32, 8 திசம்பர் 2017 (UTC)

விக்கிப்பீடியா:செய்திகளில்[தொகு]

இங்கு விரிவுபடுத்தியுள்ளேன். செய்திகளை இற்றை செய்வோர் கவனத்தில் கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 02:03, 12 திசம்பர் 2017 (UTC)

ஊர் பெயர் ஒலி வடிவில்[தொகு]

கருநாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழக அண்டை மாநிலங்களின் ஊர் பெயர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளில் இருந்தாலும் அம்மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றி மூலத்திலிருந்து விலகி தவறாக எழுதுகிறோம். இதேபோல் தமிழக ஊர்களுக்கும் அம்மொழி விக்கியர்கள் ஆங்கிலத்தில் இருந்து மாற்றி மூலத்திலிருந்து விலகி தவறாக எழுதுவார்கள். நாமக்கல் என்று தெரிந்தால் உண்டு இல்லையென்றால் நமக்கல் என்று தான் எழுதுவார்கள். திரிவல்லிக்கேணி என்பது மறைந்துவிடும். அதனால் ஊர் பெயர்களை ஒலி வடிவிலும் இணைத்தால் மற்ற மொழி விக்கியருக்கு உதவியாக இருக்குமல்லவா? ஊர் கட்டுரை எழுதும் போது அவர்கள் இணைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு. எனக்கு ல, ழ தகராறு உண்டு உச்சரிப்பும் நன்றாக இராது. நன்றாக உச்சரிப்பவர்கள் ஒலி வடிவை பதிவேற்றலாமே --குறும்பன் (பேச்சு) 21:51, 2 சனவரி 2018 (UTC)

சரியான் கருத்து!! நன்றி Kurinjinet (பேச்சு)

விக்கிச் செய்தி[தொகு]

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:செய்திகளில் --AntanO (பேச்சு) 12:37, 14 சனவரி 2018 (UTC)

விசமத் தொகுப்புகள்[தொகு]

விசமத் தொகுப்புகள் காரணமாக அஜித் குமார் பக்கத்திற்கு பாதுகாப்பு போடுங்கள் என என் பேச்சுப் பக்கத்தில் ... .. Gowtham Sampath கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாகிகள் கவணிக்க--அருளரசன் (பேச்சு) 09:23, 17 சனவரி 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:15, 12 பெப்ரவரி 2018 (UTC)

சிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா??[தொகு]

சமீபத்தில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக வெளீயிடப்பட்டுள்ள ஆங்கில - தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்தினால் நலம் என்று தோன்றுகிறது. அப்படி செய்வது அனைவருக்கும் உசிதமானால் முன்னெடுத்துச் செல்லலாம். இது குறித்த வலைத்தள முகவரியினை இணைத்துள்ளேன்.

http://tamil.org.sg/en/~/media/tlc/files/english%20to%20tamil%20glossary%20book.pdf?la=en

குறைந்தப்பட்சம் விக்சனரியால் இணைக்கலாம் என்று கருதுகிறேன். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

அதில் எங்கும் உரிமை குறித்த விளக்கம் இல்லை. இது பொதுவுரிமையின் கீழ் பயன்படுத்த அனுமதியை எப்படி பெறுவது?--உழவன் (உரை) 02:37, 12 பெப்ரவரி 2018 (UTC)

ஒலிக்கோப்பின் தவறான உச்சரிப்பு[தொகு]

கிலாபத் இயக்கம் கட்டுரையின் ஒலிக்கோப்பு உச்சரிப்பில் லகர ளகரப் பிழை உள்ளது. --இரா. பாலாபேச்சு 06:57, 4 மார்ச் 2018 (UTC)

Galicia 15 - 15 Challenge[தொகு]

Mapa de Galiza con bandeira.svg

Wikipedia:Galicia 15 - 15 Challenge is a public writing competition which will improve improve and translate this list of 15 really important articles into as many languages as possible. Everybody can help in any language to collaborate on writing and/or translating articles related to Galicia. To participate you just need to sign up here. Thank you very much.--Breogan2008 (பேச்சு) 14:38, 12 மார்ச் 2018 (UTC)

போட்டி முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை[தொகு]

ஆசிய மாதம் நவம்பர் 2017 போட்டி தமிழ் விக்கிப்பீடியாவிலும் மற்ற மொழி விக்கிப்பீடியாக்களிலும் நடைபெற்று முடிந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், முடிவுகள் எல்லோரும் அறிந்து கொள்ளப்படுமாறு அறிவிக்கப்பட்டால், வெற்றி பெற்றோருக்கும், போட்டிகளில் பங்கெடுப்போருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமே. ஒரு பயனர் ஆசிய மாதம் கட்டுரைப் போட்டியின் முடிவை அறிய ஒரு அறிவிக்கப்படாத link தேவையா? இதைப் பரிசீலனை செய்யலாமே? இதில், போட்டிகளை நடுவராக இருந்து நிர்வகிப்பவர்களுக்குக் கூடுதல் சிரமம் இருக்கக்கூடும். ஆனாலும், தொடர்ந்து பயணிக்கும் விக்கிப்பீடியர்களுக்கு இத்தகைய அறிவிப்புகள் நன்மை பயக்காதா? மகாலிங்கம் (பேச்சு) 13:57, 3 ஏப்ரல் 2018 (UTC)

விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்கள் வேங்கைத்திட்டம் போட்டியில் இன்னும் சற்று அதிகமாகப் பங்களித்தால் உறுதியான வெற்றியை ஈட்ட முடியும். தற்போதைய நிலையில் பஞ்சாபி விக்கிப்பீடியா நம்மை விட 15 கட்டுரைகள் அளவில் முன்னணியில் உள்ளார்கள். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை என்ற உறுதியை வைத்துக்கொண்டால் கூட நம்மால் எளிதில் இந்திய மொழிகளில், இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற முடியும். இதுவரை போட்டியில் பங்குபெறாதவர்கள் கூட தற்போது முதல் பங்களிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இந்திய ரூபாய் மதிப்பில் பத்து இலட்சம் அளவிலான செலவுத்தொகையை தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக்காகப் பெற்றுத்தரலாம். ஏனெனில், கூட்டு முயற்சியே நம் வெற்றியை உறுதி செய்யும். இணைவீர். இந்திய மொழிகளுக்கான விக்கிப்பீடியா வேங்கைத் திட்டத்தில் பங்கெடுப்பீர். தமிழை வெற்றி பெறச் செய்வீர்.மகாலிங்கம் (பேச்சு) 07:11, 6 மே 2018 (UTC)

விக்கி மேம்படுத்தப்பட்ட பயிற்சி – ராஞ்சி[தொகு]

29.06.2018 முதல் 01.07.2018 வரை ராஞ்சியில் நடைபெற்ற விக்கிப்பீடியா மேம்படுத்தப்பட்ட பயிற்சியில் உலோ செந்தமிழ்க் கோதை, தகவல் உழவன், கி.மூர்த்தி ஆகிய நாங்கள் மூவரும் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டோம்.

பயணம், உபசரிப்பு, தங்குமிடம், பயிற்சி ஆகிய நான்கைப் பற்றியும் திருப்தி என்று மனமகிழ்ச்சியுடன் ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ள மனம் சங்கடப்படுகிறது. இணையதளம் மற்றும் சமூக மையம் சார்பாக அஜய் குமார், டிட்டோ, தன்வீர், சாய்லேசு ஆகியோருக்கு தமிழ் விக்கியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

28.06.2018 மாலையில் நடைபெற்ற அறிமுக அமர்வில் கலகலப்புடன் சுயஅறிமுகம் செய்துகொண்டோம். பஞ்சாப் சகோதரி மானவின் வித்தியாசமான கேள்விகளால் இறுக்கம் தளர்ந்து மாநில எல்லைகள் மறைந்தன. சிரிப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் ஒரு விக்கிக் குடும்பம் அப்போதே உருவாகிவிட்டது.

 • நாள் 1 : 29 சூன் 2018

Why We are here? என்ற கேள்வியுடன் தன்வீர் விக்கிப்பீடியாவின் மேம்படுத்தப்பட்ட பயிற்சியை தொடங்கினார். உள்ளடக்கம் மிகுந்த தரமான கட்டுரைகளை உருவாக்குவதற்கு விக்கிப்பீடியர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பகிர்ந்து கொள்ளவே இங்கு ஓர் அணியாகத் திரண்டிருக்கிறோம் என்ற திட்டோவின் பதிலுடன் அன்றைய நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

செய்தித்தாள்கள், புத்தகங்கள், வலைப்பூக்கள், இணையதளங்கள், நடப்பு நிகழ்வுகள் முதலியன புதிய கட்டுரைகளை உருவாக்க எவ்வாறு உதவுகின்றன? ஒவ்வொரு மொழியிலிருந்தும் எடுத்துக்காட்டுகள், சந்தித்த சிக்கல்கள், நம்பகத்தன்மை, குறிப்பிடத்தகமை போன்ற பல கோணங்களில் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஒரு விக்கிப்பீடியா கட்டுரையின் கட்டமைப்பு இப்படி இருந்தால் நலமாக இருக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது.

https://docs.google.com/document/d/1Z7Y1LUDgRpOx6bN6y666qPOKePsPKF4E5P79mIUAcaA/edit?usp=sharing

என்ன?, எப்பொழுது?, ஏன்?, எதற்கு?, யார்?, எப்படி? போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் பத்தியாக கட்டுரையின் முன்னுரை பத்தி அமைந்தால் கட்டுரை சிறப்பானதாக அமைந்துவிடும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முன்னுரைப் பத்திக்கு துணையாக தகவல் பெட்டி இடம்பெற்றால் விக்கிக் கட்டுரைக்கு கூடுதல் சிறப்பும் கிடைத்து விடுவதாக சுட்டிக் காட்டப்பட்டது.

தற்செயலாக விக்கிப்பீடியாவிற்குள் காலடி எடுத்து வைத்து கட்டுரைகள் ஆக்கும் புதியவர்களின் படைப்புகளை உடனடியாக நீக்கிவிடுதலை தவிர்க்க வேண்டும். வழிகாட்டியாக, உதவி செய்பவராக அவர்களின் கட்டுரையை திருத்தியும், உள்ளடக்கம் மற்றும் மேற்கோள்கள் இணைத்தும் நாம் கருணை காட்டினால் அவர்களை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற கருத்து இடையில் முன்வைக்கப்பட்டது.

பதிப்புரிமை மீறாத கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. உரிமை – கிரியேட்டிவ் காமன்சு எல்லோரும் படிக்கலாம். பகிரலாம் என்ற உரிமை அளிக்கப்பட்ட படைப்புகளை கட்டுரையாக்குவது சிக்கல் இல்லாதது என்று பதிவு செய்யப்பட்டது. http://freetamilebooks.com/

முதன்மை தலைப்பிலிருந்து விலகிச் சென்ற விவாதம் மீண்டும் கட்டுரையின் கட்டமைப்பை நோக்கித் திரும்பியது. ஆரோக்கியமான விவதங்களுக்குப் பின்னர் தகவல் பெட்டி, அவசியமான படங்கள், அளவான பத்திகள், அவசியமான பிரிவுகள், அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் நம்பத்தகுந்த மேற்கோள்கள், விக்கியாக்கம், விக்கி உள்ளிணைப்புகள், புற இணைப்புகள் என பல்வேறு உறுப்புகளையும் கட்டுரையின் உடற்பகுதி பெற்றிருந்தால் கட்டுரை ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டது.

முன்னுரை பத்திக்கு முன்னதாக இடப்படும் தலைப்புக் குறிப்பு (Hat notes) வார்ப்புரு இடுதல் நடைமுறையின் பயன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

https://en.wikipedia.org/wiki/Template:Hatnote#Usage for hatnote tempt information, https://bn.wikipedia.org/wiki/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F:Hatnote

நன்றாக எழுதப்பட்ட கட்டுரைகள் அதிக பக்கப்பார்வையை பெறாமல் காத்திருக்கின்றன என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். அதிக நீளமான கட்டுரைகள் எழுதுவதைக் காட்டிலும் அதைப் பகுதிபகுதியாகப் பிரித்து வெவ்வேறு கட்டுரைகளாக ஆக்கினால் அதிக பயனளிக்கும் என்ற ஒரு பார்வையும் அலசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உடற் பகுதி பத்திகளுக்கு ஏற்ப அளவான முன்னுரைப் பகுதியை அமைப்பது கட்டுரைக்கு அழகு சேர்க்கும் என்பது பதிவு செய்யப்பட்டது. மூன்று பத்திகள் கொண்ட கட்டுரைக்கு மூன்று பத்திகளில் முன்னுரை கொடுப்பது நன்றாக இருக்காது.

கட்டுரையின் உடற்பகுதி 15000 எழுத்துருக்கள் என்றால் இரண்டு பத்தி முன்னுரை போதும். கட்டுரையின் உடற்பகுதி 30000 எழுத்துருக்கள் என்றால் மூன்று பத்தியைப் பற்றி சிந்திக்கலாம். கட்டுரையின் உடற்பகுதி 30000 எழுத்துருக்களுக்கு மேல் என்றால் மூன்று பத்திகளுக்கு மேற்பட்ட முன்னுரையை முயற்சிக்கலாம் என புரிதலுக்காக ஓர் உதாரணம் அரங்கில் அலசப்பட்டது.

முன்னுரையைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள ஏழு விதி அமைப்பைப் பின்பற்றினால் விக்கி கட்டுரையின் உடற்பகுதி சிறப்பாக அமையும் என்று விளக்கப்பட்டது.

https://en.wikipedia.org/wiki/The_Magical_Number_Seven,_Plus_or_Minus_Two

தேவைக்கு அதிகமாக விவரித்தல், பொருத்தமில்லாத படங்களை இணைத்தல், போலியான இணைப்புகளைக் கொடுத்தல், தலைப்பை விட்டு விலகிச் செல்லுதல், நடுநிலைமை இன்றி எழுதுதல், சுய விமர்சனங்களை இடுதல், தேவையில்லாத சிவப்பு இணைப்புகளை விட்டுவிடுதல், எழுத்துப் பிழைகள். ஒரே மூலத்தை சார்ந்திருத்தல், குறிப்பிடத்தக்கமை இல்லாத பொருளை எழுதுதல், பதிப்புரிமை மீறல், நம்பகத்தன்மையில் குறைவு, சரியான மேற்கோள்கள் இல்லாமல் எழுதுதல், பொருத்தமில்லாத தலைப்புகள் இடுதல், நிறுத்தற் குறிகளில் கவனம் செலுத்தாமல் எழுதுதல் உள்ளிட்டவை கட்டுரையின் அழகைக் குறிக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது.

https://tools.wmflabs.org/topviews/?project=mr.wikipedia.org&platform=all-access&date=2017-06&excludes=

Wikipedia:Manual of Style/Layout -https://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style/Layout#Order_of_article_elements

தங்கள் மொழி விக்கிப்பீடியாயில் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வடிவமைப்பு, சிறப்புகள், குறைகள் முதலியவற்றை அலசிய பயிற்சியாளர்கள் மேடைக்கு ஒவ்வொரு குழுவாக முன்வந்து சொற்பொழிவாற்றியது ஓர் இனிய அனுபவமாக அமைந்தது.

 • விக்கி நூலகம்

முதல் நாளின் முடிவில் விக்கி நூலகத்தின் வரலாறு என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அதை எவ்வாறு உருவாக்குவது? நமக்கு மேற்கோள்களை அது எவ்வாறு அள்ளித் தர இயலும்? என்பது தொடர்பான தலைப்பை முன்வைத்து கிருட்டிண சைதன்யா வேல்கா ஓர் அழகான பயிற்சி வகுப்பை நடத்தினார். आंबेडकर - https://mr.wikipedia.org/s/3v73

https://wikipedialibrary.wmflabs.org/

செவிகளுக்கும் கண்களுக்கும் கிடைத்த விருந்தை மட்டும் சொல்லிவிட்டு நாவுக்கு கிடைத்த அறுசுவை உணவைப்பற்றி சொல்லாவிட்டால் நான் நடுநிலை தவறியவனாவேன்.

மூன்று வேளையும் அறுசுவை உணவு என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் எத்தனை வகை என்பதை என்னால் எண்ணிச் சொல்ல முடிவில்லை. உணவுக் கட்டுப்பாடு என்பதெல்லாம் இயலாத காரியமானது. வெள்ளைச் சோறு கிடைக்கவில்லை என்றபோதிலும் வீட்டு உணவு நினைப்பே வரவில்லை என்பது நிசம். ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.--கி.மூர்த்தி (பேச்சு) 18:38, 4 சூலை 2018 (UTC)

@கி.மூர்த்தி:அருமை. உங்கள் குறிப்பைப் படிப்பது நேரில் பயிற்சி பெற்றது போல் இருக்கிறது. வழமைக்கு மாறாக மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டது சிறப்பு. வருங்காலப் பயிற்சிகள், வாய்ப்புகளையும் நாம் இது போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். @உலோ.செந்தமிழ்க்கோதை and Info-farmer: உங்கள் கருத்துகளையும் பதிவு செய்தால் மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.--இரவி (பேச்சு) 19:05, 4 சூலை 2018 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 00:06, 5 சூலை 2018 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:36, 5 சூலை 2018 (UTC)

காப்பிடுக[தொகு]

மு. க. ஸ்டாலின் பக்கத்தில் விசமத் தொகுப்புகள் அதிகமாக உள்ளிடுவதால் [2], தானாக உறுதியளித்த பயனர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன் .. . நன்றி ...

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:35, 17 சூலை 2018 (UTC)