பயனர்:கி.மூர்த்தி

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  இன்று வியாழன், மார்ச் 23 , 2023, தமிழ் விக்கிப்பீடியாவில் 1,53,015 கட்டுரைகள் உள்ளன..

  பக்கங்கள்= 4,84,538
  கட்டுரைகள்= 1,53,015
  கோப்புகள்= 8,008
  தொகுப்புகள்= 36,71,608
  பயனர்கள் = 2,16,864
  சிறப்பு பங்களிப்பாளர்கள்= 339
  தானியங்கிகள் = 189
  நிருவாகிகள் = 31
  அதிகாரிகள் = 4


  கி.மூர்த்தி
  பெயர்கி.மூர்த்தி
  பால்ஆண்
  பிறந்த நாள்1965
  தற்போதைய வசிப்பிடம்திருவாரூர்,
  தேசியம்இந்தியன்
  இனம்தமிழன்
  கல்வி, தொழில்
  தொழில்கூடுதல் கருவூல அலுவலர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை
  கல்விஇளம் அறிவியல், முதுகலை தமிழ், இளம் கல்வியியல்.
  பல்கலைக்கழகம்சென்னை பல்கலைக் கழகம்
  கொள்கை, நம்பிக்கை
  சமயம்இந்து சமயம்
  தொடர்பு விபரம்
  மின்னஞ்சல்murthy.vellore@yahoo.com
  விக்கி விபரம்
  இணைந்தது15.06.2013
  Heart-beat.gif
  என்றென்றும் விக்கிமீடியா ...Ball mill.gif

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்[தொகு]

  Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  மூர்த்தி, வணக்கம்! நீங்கள் வேதியியல் தொடர்பான தலைப்புகளில் எழுதுவது கண்டு மகிழ்ச்சி. உங்கள் தொகுப்புகள் அருமை, தகவல்களும் கூட! உதவி தேவையென்றால் இதே பக்கத்தில் கீழே கேளுங்கள். - அன்புடன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:21, 27 சூலை 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  சிறந்த உழைப்பாளர் பதக்கம்[தொகு]

  Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
  Commons sibi (பேச்சு) 04:45, 13 செப்டம்பர் 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  வேதியியல் பதக்கம்[தொகு]

  Wiki gold medal chemistry.PNG வேதியியல் பதக்கம்
  சிறப்பாக எழுதி வரும் வேதியியல் கட்டுரைகளுக்காக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது.-- mohamed ijazz(பேச்சு) 07:21, 2 அக்டோபர் 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  உங்களுக்குத் தெரியுமா? திட்டம்[தொகு]


  முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]  மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

  வணக்கம், கி.மூர்த்தி!

  250 Raketna Brigada.png

  நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

  குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  --நந்தகுமார் (பேச்சு) 08:50, 5 அக்டோபர் 2014 (UTC)

  பதக்கம்[தொகு]

  Barnstar of Diligence.png விடாமுயற்சியாளர் பதக்கம்
  நன்றி! - அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 13 சூன் 2015 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  பதக்கம்[தொகு]

  Wiki medal.jpg சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
  முக்கியமான பல வேதியியற் சேர்மங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தொடங்கியதற்காகவும் விரிவாக்கியதற்காகவும். மதனாகரன் (பேச்சு) 07:11, 14 சூன் 2015 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  ஆயிரம் கட்டுரைகள்[தொகு]

  Aayiravar.jpg ஆயிரவர் பதக்கம்
  மூர்த்தி, தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகளைத் தொடங்கி எழுதியிருப்பதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெருமளவு வேதியியல் சார்ந்த விரிவான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு. அண்மையில், சேலம் பெரியார் பல்கலையில் நடந்த கருத்தரங்கில் உங்கள் கட்டுரைகளை எடுத்துக்காட்டாக காட்டி, துறை சார் வல்லுநர்கள் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 07:07, 21 அக்டோபர் 2015 (UTC)

  பதக்கம்[தொகு]

  Tireless Contributor Barnstar.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
  விக்கிப்பீடியாவில் வரும்போதெல்லாம் நான் அதிகமாக அண்மைய மாற்றங்களில் உங்களுடைய பெயரையே காண்கிறேன். களைப்படையாமல் புதிய கட்டுரைகளை உருவாக்கும் உங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.  மாதவன்  ( பேச்சு  ) 17:19, 9 திசம்பர் 2015 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  Science Barnstar Hires.png அறிவியல் பதக்கம்
  அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக உருவாக்கி விரிவாக்கி வரும் தங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:59, 2 சனவரி 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பதக்கம்[தொகு]

  Wikicup ta (second).png விக்கிக்கோப்பை வெற்றியாளர்
  தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 324 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது மிரள வைக்கிறது ! தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 09:38, 31 சூலை 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பதக்கம்[தொகு]

  Map of Punjab.png பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
  பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 15:05, 16 ஆகத்து 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பதக்கம்[தொகு]

  Real life Barnstar Hires.png மெய்வாழ்வுப் பதக்கம்
  --நந்தகுமார் (பேச்சு) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


  <2000 கட்டுரைக்கும் அப்பால் ...[தொகு]

  Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
  மூர்த்தி, தமிழ் விக்கிப்பீடியாவில் 2000 கட்டுரைகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதுகின்றமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெருமளவு வேதியியல் சார்ந்த விரிவான கட்டுரைகள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. உங்களைப் போன்ற துறைசார் அறிஞரின் பங்களிப்புகள், விக்கியின் வரலாற்றில் மிகவும் போற்றதக்கது. நீங்கள் எனக்கு வழியுறுத்தியபடி, வரும் தைத்திங்கள் முதல் திறநிலை தொழினுட்பக் கட்டுரைகளை நிகழ்பட பாடங்களாகவும், கட்டுரைகளை எழுதுவேன். அப்பொழுது உங்களது வழிகாட்டல் மேலும் தேவைப்படும். வணக்கம்.--உழவன் (உரை) 01:58, 2 திசம்பர் 2016 (UTC)

  பதக்கம்[தொகு]

  Trophy.png விக்கிக்கோப்பை வாகையாளர்
  தமிழ் விக்கிப்பீடியாவில் 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட விக்கிக்கோப்பைப் போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய தங்களுக்கு இப்பதக்கம் உரித்தாகட்டும்! இது போல் மேலும் தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும்!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 2 மார்ச் 2017 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பதக்கம்[தொகு]

  Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
  விக்கி 15 தொடர் போட்டியில் நிறைய கட்டுரைகளை எழுதி அசத்துவதற்காக . தோடருட்டும் உங்கள் சாதனை பணி. --குறும்பன் (பேச்சு) 17:16, 3 சூன் 2017 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  பதக்கம்[தொகு]

  Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
  விக்கிப்பீடியா 15 போட்டியில் அசத்துவதற்காக. --குறும்பன் (பேச்சு) 17:18, 3 சூன் 2017 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  மூவாயிரம் கட்டுரைகள்[தொகு]

  வாழ்த்துகள்

  தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை வேதியியல் சார்ந்த முழுமையான கட்டுரைகள் என்பது மற்ற பயனர்களுக்கு உந்துதலாக அமையும் சிறப்பு வாய்ந்தவை. உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:02, 27 மார்ச் 2018 (UTC)

  மூவாயிரவர் பதக்கம்[தொகு]

  Three thousand certificate.jpg மூவாயிரவர் பதக்கம்
  மூர்த்தி, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புகள் நல்கி வரும் நீங்கள் 3,000 கட்டுரைகளுக்கும் மேலாக உருவாக்கியுள்ளதைக் கண்டு மகிழ்ந்து என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 09:03, 3 சூன் 2018 (UTC)

  நான்காயிரம் கட்டுரைகள்[தொகு]

  Four thousand barnstar.png
  நாலாயிரவர் பதக்கம்
  தங்களது அயராத உழைப்பால் நான்காயிரம் கட்டுரைகளை உருவாக்கி உள்ளீர்கள். மிகக் குறைவான காலத்தில் உங்களது கட்டுரை எண்ணிக்கையினைப் பார்த்து பிரம்மித்து தங்களுக்கு நாலாயிரவர் பதக்கத்தை வழங்குகிறேன். வாழ்க வளமுடன்.ஞா. ஸ்ரீதர்

  ஓய்வாகக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பங்களிப்பதையே தன் முதன்மை நோக்கமாகக் கொண்டு இடைவிடாது பணியாற்றி தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தி வரும் தங்களுக்கு நல்வாழ்த்துகள். TNSE Mahalingam VNR (பேச்சு) 02:27, 16 மார்ச் 2019 (UTC)

  நாலாயிரம் கட்டுரைகள் எழுதி சாதனை படைத்ததிற்காக தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்-குறும்பன் (பேச்சு) 12:50, 24 மார்ச் 2019 (UTC)

  பதக்கம்[தொகு]

  Five Thousand Certificate.png ஐயாயிரவர் பதக்கம்
  பயனர் கி. மூர்த்தி அவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பால் தமிழ் விக்கிப்பீடியாவில் 5000 கட்டுரைகளை உருவாக்கியமைக்காகவும், மற்ற பயனர்களுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்து கலங்கரை விளக்கமாக வழிகாட்டி வருவதற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்து இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 06:53, 31 திசம்பர் 2020 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  ஆறாயிரவர் பதக்கம்[தொகு]

  Application-certificate.svg ஆறாயிரவர் பதக்கம்
  சரியாக கடந்த ஆண்டு 5000 கட்டுரைகளைக் கடந்தீர்கள். ஓராண்டுக்குள் 6000 கட்டுரைகளைத் தொடங்கி மேலும் சாதனை புரிந்ததற்கு வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவிற்குள் எங்களுக்கு ஊக்கமாக மட்டுமில்லாமல் வெளியிலும் பலருக்கு முன்னுதாரணமாக அமையும் பொருட்டுச் செய்திக் கட்டுரையாகவும் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து பங்களிப்போம். நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 31 திசம்பர் 2021 (UTC)

  விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்[தொகு]

  பதக்கம்

  விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
  வணக்கம் கி.மூர்த்தி,
  விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


  வாழ்த்துக்களுடன்,
  அன்ரன்
  தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
  27-12-2021

  ஏழாயிரம் கட்டுரைகள்[தொகு]

  Seven Thousand Articles - Tamil Barnstar.png ஏழாயிரவர்
  அன்பின் நண்பர் கி. மூர்த்தி, இணையத்தின் மாபெரும் கட்டற்ற தமிழ் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் ஏழாயிரம் கட்டுரைகள் தொடக்கம் என்ற மாபெரும் சாதனையைச் செய்து தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகளை அளித்து வருவதற்காக தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 17:29, 26 சனவரி 2023 (UTC)

  சிறந்த துப்புரவாளர் பதக்கம்[தொகு]

  சிறந்த துப்புரவாளர் பதக்கம்
  வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022 திட்டம் அக்டோபர் 1 முதல் 31 வரை நடைபெற்றது. இதன்மூலம் 50 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்களின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வாழ்த்துகள்.

  -- ஒருங்கிணைப்பாளர்கள் மா. செல்வசிவகுருநாதன், Sridhar G

  ஆர்வங்கள்[தொகு]

  ஆர்வம்
  இலக்கியம்
  படிப்பது
  பிடித்ததை படைப்பது
  படைத்ததை இரசிப்பது
  மொழிக்காக எதையாவது செய்வது
  விக்கிப்பீடியா

  எதிர்காலம்[தொகு]

  உலக நலம்


  • விக்கிபீடியாவில் இணைந்து விக்கிபீடியாவில் வாழ்வது
  • முனைப்பான பங்களிப்பாளாராக மேலும்...மேலும்....
  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கி.மூர்த்தி&oldid=3649314" இருந்து மீள்விக்கப்பட்டது