பால் (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண் விலங்குகள் உருவாக்கும் விந்தணுவும், பெண் விலங்கு உருவாக்கும் சினை முட்டையும் ஒன்று சேருதல்.

ஓர் உயிரினத்தின் பால் (ஆண்பால், பெண்பால்), அது உருவாக்கும் பாலுக்குரிய உயிரணுக்களினால் வரையறுக்கப்படுகிறது. ஆண் பால் உயிரினம் விந்தணுக்களையும், பெண் பால் உயிரினம் சூல் முட்டைகளையும் உருவாக்குகின்றன. ஒரே உயிரினத்தின் உடலில் இரண்டு பாலுக்குரிய உயிரணுக்களும் உருவாகுமாயின் அவ்வுயிரினம் இருபாலுயிரி (hermaphroditic) எனப்படுகின்றது. பொதுவாக வெவ்வேறு பால்களைச் சேர்ந்த உயிரினங்களின் உடல் தோற்றத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது பால்சார் இருநிலை வளர்ச்சி எனப்படுகின்றது. இவ் வேறுபாடு உயிரினங்கள் உட்படுகின்ற வேறுபாடான இனப்பெருக்கம் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_(உயிரியல்)&oldid=1985802" இருந்து மீள்விக்கப்பட்டது