விந்து
விந்தணு அல்லது விந்து (Sperm) என்பது ஆண் இனப்பெருக்க அணு. Sperm என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா(σπέρμα) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு கிரேக்கத்தில் விதை என்று பொருள். விந்தணுக்கள் விதைப்பைகளில் சேமிக்கப்பட்டாலும், PROSTATE GLAND -லிருந்து வரும் திரவம் 98 விழுக்காடும், விந்தணுக்கள் 2 விழுக்காடும் இருக்கும். விந்தணுக்கள் விந்தகங்களில் உற்பத்தியாகும். பின்பு ஆண்குறியில் இருக்கும் விந்துகொள்பையில் இந்த விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன.
விந்தணுவிற்கு தலை, உடல், வால் என மூன்று பகுதிகள் உள்ளன. இந்த வால் பகுதியானது, பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் நீந்திச் சென்று முட்டையுடன் கருக்கட்ட உதவுகிறது. கருக்கட்டலின்போது, ஒருமடிய நிலையிலுள்ள ஆணின் விந்தணுவில் உள்ள 23 நிறப்புரிகள்/குரோமோசோம்கள், ஒருமடிய நிலையிலுள்ள பெண்ணின் முட்டையிலுள்ள 23 நிறப்புரிகள்/குரோமோசோம்களுடன் இணைந்து இருமடிய நிலையுள்ள கருவை உருவாக்குகின்றது. கொள்கின்றன.[1][2][3]
சில தகவல்கள்
[தொகு]- ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
- வாழ்நாளில் ஒரு மனிதன் விந்துப் பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
- வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
- ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
- புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
- ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
- ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
- விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
- பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Spermatium definition and meaning". Collins English Dictionary (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
- ↑ Kumar, Anil (2006). Botany for Degree Gymnosperm (in ஆங்கிலம்) (Multicolor ed.). S. Chand Publishing. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-2618-8.
- ↑ "Animal reproductive system - Male systems". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.