மார்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்பகம்
Weibliche brust en.jpg
முலைக்காம்புத்தோல், முலைக்காம்பு, முலையின் கீழ்மடிப்பு ஆகியவற்றையுடைய மார்பகங்களின் உருவம்.
Identifiers
TA A16.0.02.001
FMA 9601
Anatomical terminology

மார்பகம், பெண் பாலூட்டிகளின் உடலில் மேற்பகுதியில் இரு பக்கங்களிலும் அமைந்து, பாற்சுரப்பியைக் கொண்டு பாற்சுரந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இருபாலருக்கும் ஒரே கருவியல் இழையங்களில் இருந்து மார்பகங்கள் வளருகின்றன. எனினும், பருவமடையும் போது, பெண்களின் பாலின இயக்குநீர்கள் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், ஆண்களில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் காரணமாக மார்பக வளர்ச்சி ஊக்குவிப்பதில்லை. இதன் விளைவாக பெண்களின் மார்பகங்கள் ஆண்களை விட முதன்மை வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

கருவுற்ற காலத்தில் தாய்ப்பாலைச் சுரக்கும் பொருட்டு, அதன் இயக்குநீர்கள் மார்பகத்தில் இழைய வளர்ச்சியும், விரிவாக்கமும் செய்கின்றன. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், புரோலாக்டின் இம்மூன்று இயக்குநீர்களும் மார்பகத்தில் சுரப்பிழையத்தை உருவாக்குகிறது. மேலும், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகத்திலும், கருப்பையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு மார்பகமும் 15 முதல் 20 மடல்களைக் கொண்டிருக்கின்றது. தோலடிக் கொழுப்பிழையங்கள் மடல்களை உள்ளடக்கி இருப்பதால், மார்பகத்திற்கு அளவும், வடிவமும் கொடுக்கின்றன. ஒவ்வொரு மடலும், பல சேர்க்கும் சிறுகுழாய்களுடன், முடிவில் பைகளுடன் அமைந்துள்ளன; அவை இயக்குநீரின் குறிகைகளுக்குப் பாலை உற்பத்திச் செய்கின்றன.

அமைப்பு[தொகு]

பெண்களில் மார்பகங்கள் முதன்மை மார்புத்தசைகளின் மேலடுக்கிலும், பொதுவாக மனித விலா எலும்புக்கூடு முன் இரண்டாவது விலாயெலும்பு நிலையிலுருந்து ஆறாவது விலாயெலும்பு நிலை வரையிலும் நீட்டிக்கின்றது; இதனால், மார்பகங்கள் மிகுந்த மார்புப்பகுதியியையும், மார்புச்சுவர்களையும் மறைத்தபடியுள்ளன. மார்பு முன்னுள்ள மார்பக இழையங்கள் கழுத்துப்பட்டை எலும்பிலிருந்து மார்பெலும்பின் மையத்திற்கு வரையிலும் நீட்டிக்கின்றன. மார்புப் பக்கங்களிலுமுள்ள மார்பக இழையங்கள் அக்குள் வரையிலும், பின்னே கீழ் முதுகிலிருந்து மேற்கையெலும்பு வரை நீட்டித்த மேற்கையெலும்பு ஒடுக்கிநீட்டி உட்சுழட்டுத்தசை வரையிலும் நீட்டிக்கின்றன. ஒரு பாற்சுரப்பியென மார்பகம் பல்வேறு இழையங்களாலான அடுக்குகளைக் கொண்டது; அதில் கொழுப்பிழையமும், சுரப்பிழையமும் மார்பகங்களில் பாற்சுரத்தலைச் செயல்பாடுத்தும் பெரும்பான்மையான இரண்டு இழையங்கள்.

வடிவ அமைப்பியல் படி மார்பகம் ஒரு கூம்பாகத் தளத்தில் மார்புச்சுவரையும், நுனியில் முலைக்காம்பையும் கெண்டிருக்கிறது. மேலோட்டமான இழையப்படலத் தோலில் இருந்து கொழுப்பிழையத்தில் 0.5 முதல் 2.5 செ.மீ., வரைப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாரிழையமான கூப்பரின் தொங்கித் தசைநார்கள் மேலோட்டமான இழையப்படலத்திலிருந்து தோலுறை வரைப்பரவி நீட்டிக்கின்றது. வயது வந்தோரின் மார்பில் 14 முதல் 18 ஒழுங்கற்ற பாற்சுரக்கும் மடல்கள் காம்பிலும், நாளங்களிலும் 2.0 முதல் 4.5 மிமீ விட்டம் வரை ஒருங்கிணைத்துக் காணப்படுகிறன. பாற்நாளங்கள் உடனடியாக ஒர் ஆதரவுக் கட்டமைப்பைச் செயல்படுவதற்கு அடர்ந்த இணைப்பிழையத்தால் சூழப்பட்டுள்ளன. மார்பகத்தில் சுரப்பிழைய உயிர்வேதியியல் படி ஈஸ்ட்ரோஜனை ஆதரிக்கின்றது; இதனால், ஒரு பெண் மாதவிடாய் நிறுத்தம் அடையும் போது, அவளினுடல் எஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது; பாற்சுரப்பிழையம் பின்னர் மெலிந்தும், உலர்ந்தும் மறைந்துவிடும்; இதன் விளைவாக மார்பகம் கொழுப்பிழையத்தையும், மேலோட்டமான இழையப்படலத்தையும், தொங்கித் தசைநார்களையும், தோலுறையையும் கொண்டிருக்கும்.

மார்பகத்தின் பரிமாணங்களும், எடையும் பெண்கள் மத்தியில் வேறுபடுகின்றன; ஒவ்வொன்றும் சுமார் 500 முதல் 1,000 கிராம்கள் வரை எடை கொண்டது. ஒரு சிறு நடுத்தர அளவுள்ள மார்பகம் 500 கிராம்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ எடையுடையது; ஒரு பெரிய மார்பகம் சுமார் 750 முதல் 1000 கிராம்கள் வரை எடையுடையது. மார்பகத்தில் இழைய அமைப்பு விகிதங்களும் இதேபோல் பெண்கள் மத்தியில் வேறுபடுகின்றன; சில மார்பகங்களில் கொழுப்பிழையமோ, இணைப்பிழையமோ சுரப்பிழையத்தை விட அதிகவிகிதத்திலோ, குறந்தவிகிதத்திலோ இருக்கும்; எனவே, கொழுப்பு, இணைப்பு இழையங்களின் விகிதம் மார்பகத்தின் அடர்த்தியைத் (உறுதியைத்) தீர்மானிக்கிறன. ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையில் பருவமடைந்து மார்பகம் வளர்வதிலும், மாதவிடாயிலும், கருவுற்ற நிலையிலும், ஒரு குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டலிலும், மாதவிடாய் நிறுத்தத்திலும் தன்னுடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளது மார்பகங்களின் அளவும், வடிவமும், எடையும் மாற்றமடையும்.

கிளாண்டுலாரின் அமைப்பு[தொகு]

மார்பகம் பாற்சுரப்பியாக இருப்பதால் ஒரு குழந்தைக்குப் பாலூட்ட தாய்ப்பாலை உற்பத்திச் செய்கிறது;

வளர்ச்சி[தொகு]

டேன்னர் நிலைகள் பெண்களின் இரண்டாம் பாலியல் பண்புகள் (மார்பகங்கள், அந்தரங்க முடி) ஐந்து வளர்ச்சி நிலைகளில் குறிக்கப்படும்.

மனித மார்பகத்தின் அடிப்படை வடிவ அமைப்பு இருபாலின குழந்தைகளுக்கும் ஒத்தே அமைகிறது. சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் பூப்பெய்திய பின்னரே மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இவற்றின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மார்பகங்கள் தளர்வடையத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவது இதனை விரைவுபடுத்தும் என்ற கருத்து நிலவினாலும், சில ஆய்வு முடிவுகள் இதனை மறுக்கின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சமச்சீரின்மை[தொகு]

மார்பகத்தொய்வு[தொகு]

மார்பகத்தொய்வின் ஏழு நிலைகள்.

தொய்வு வயதானால் ஏற்படும் ஒரு வழக்கமான விளைவு இதனால், மார்பிலுள்ள மார்பகத்திசுக்கள் கீழ்வளைந்தும், முலைக்காம்பு கீழ்நோக்கியும் காணப்படும். ஒரு பெண்ணிற்குத் தொய்வு உருவாகின்ற விகிதம் பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது அவற்றுள்: மரபியல், புகைத்தல், உடல் நிறை குறியீட்டெண், கருவுற்ற எண்ணிக்கை, கருத்தரிப்பதற்கு முன் மார்பகங்களின் அளவு, அகவை.

மார்பகத் தொய்வை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவ வல்லுநர்கள் முலைக்காம்பின் நிலையை முலையின் கீழ்மடிப்பிற்கு ஒப்பீட்டு மதிப்பிட்டு வகைப்படுத்துகின்றனர் (மார்பக அடிப்பகுதியும், மார்புச்சுவரும் சந்திக்குமிடம்). இதன் அளவீடு முலைக்காம்பு மையத்திலிருந்து கழுத்துக்குழி வரையென்று தீர்மானிக்கப்படுகின்றது (மார்பெலும்பிற்கு மேலாக). நிலையான மனிதரளவையியல் படி இளம் பெண்களின் அளவு 21 செ.மீ ஆகும். இந்த அளவீடு மார்பகத்தெய்வையும், மார்பகச்சமச்சீரையும் மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அறுவை மருத்துவ வல்லுநர்கள் மார்பகங்களின் எறிகோணத்தை மதிப்பிட்டுக் கொள்வர். மார்பகத்தின் நுனி முலைக்காம்பையும் சேர்த்து தட்டையான எறிகோணமாகவும் (180 பாகைகள்), குறுகிய எறிகோணமாகவும் (180 பாகைகளுக்கு மேலாக) இருக்கலாம். மார்பக நுனி அரிதாக 60 பாகைகளுக்கும் மேலாகவும் இருக்கும். கூப்பரின் தொங்கித் தசைநார்கள் வரைப்புத்தன்மையைக் கொண்டும் ஓரளவு தீர்மானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் படுத்திற்கும் போது, மார்பக நுனி தட்டை கோணமாகவும், விகோணமாகவும் மாற்றமடையக்கூடும் (180 பாகைகளுக்கு குறைவாக), அதே நேரத்தில் மார்பகத்தின் அடிப்பகுதியிலிருந்து நீள விகிதம் 0.5 முதல் 1.0 வரை நீடிக்கின்றது.

பணியும் உடல் நலமும்[தொகு]

பாற்சுரத்தல்[தொகு]

ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலால் ஊட்டமளிக்கிறாள்.

இனப்பெருக்கம்[தொகு]

மனிதனைக் கருத்தில் கொள்ளும் போது, விலங்கியல் ஆய்வாளர் மனிதப்பெண் முதனி மட்டுமே கருவுறாக் காலத்திலும் நிலையான, முழு வடிவ மார்பகங்களைக் கொள்ள முடியுமென்று முன்மொழிந்தனர். மற்றப் பெண்பாலூட்டிகளில் மார்பகங்கள் கருவுற்ற காலத்தில் மட்டுமே முழுமையடைகின்றன.

மருத்துவத் தொடர்பான தகவல்கள்[தொகு]

மார்பகம் பல தீங்கற்ற, கேடு விளைவிக்கின்ற, நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றது. முலையழற்சி, மார்பக இழைமநீர்க்கட்டி, முலைவலி போன்றவை மிக அடிக்கடி ஏற்படுகின்ற தீங்கற்ற நிலைமைகள். மார்பகப் புற்றுநோய் பெண்களின் இறப்பிற்கு முதன்மையானக் காரணங்களுள் ஒன்றாகத் இருக்கிறது.

ஆடை[தொகு]

வடநமீபியாவைச் சார்ந்த ஹிம்பா பெண்மணி தங்களது பண்பாட்டின் வழக்கமாக வெற்று மார்பகங்களுடன் பாரம்பரிய தலைப்பாகையும் பாவாடையையும் அணிந்திருக்கிறாள்.

மார்பகங்கள் பெரும்பாலும் கொழுப்புத்திசுவாக இருப்பதால் உள்ளாடைப் போன்ற ஆடைகளை அணிவதால் அவற்றின் வடிவம் எல்லைக்குள் வார்ப்படும். மார்பக்கச்சுகள் பொதுவாக மேற்கத்தியப் பெண்கள் சுமார் 90% தங்கள் மார்பகங்களைத் தாங்குவதற்கு அணிகின்றனர்.

பாலியல் சிறப்பியல்பு[தொகு]

சில பண்பாடுகளில், மார்பகங்கள் மனிதப்பாலுறவுச் செயற்பாட்டில் ஒரு பங்கு வகிக்கிறது. மார்பகங்களும் குறிப்பாக முலைக்காம்புகளும் பல்வேறு காமவுணர்ச்சிப் பகுதிகளுள்ளடங்கும். நரம்பு நுனிகளில் பல இருப்பதால், அவை தொடுதலுக்கு உணர்ச்சி மிகுந்துள்ளன; கைகளாலோ வாய்வழியாகவோ அவற்றைப் பாலுறவுச் செயற்பாட்டின் போதோ அதன் முன்னரோ அழுத்துவதும், உடற்பிடிப்புச் செய்வதும் வழக்கமானது. பெண்கள் சிலர் இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். ஆராய்ச்சியில், முலைக்காம்பைக் கிளர்சியூட்டுவதன் மூலம் பிறப்புறுப்பில் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகின்றது என்றும், மேலும் நேரடியாக "மூளையின் பிறப்புறுப்புப் பகுதியில்" இணைக்கப்பட்டுள்ளது என்றும் பரிந்துரைக்கப்பட்டது. முலைக்காம்பு, புணர்ப்புழை, பெண்குறி, கருப்பை வாய் இவற்றிலிருந்து வரும் உணர்ச்சிகள் மூளையின் ஒரே பகுதிற்குப் பயணிக்கின்றன. முலைக்காம்பைக் கிளச்சியூட்டுவதால் கருப்பையில் சுருக்கங்களைத் தூண்டுகிறது; பின்னர் மூளையில் பிறப்புறுப்புப் பகுதியில் ஒர் உணர்ச்சியை உருவாக்குகிறது. பண்டைய இந்தியப் படைப்புக் காம சூத்திரத்தில் நகத்தால் மார்பங்களை மெலிதாகக் கீறுவதும், பற்களால் கடிப்பதும் சிற்றின்பமாகக் கருதப்படுகிறது. காம விழிப்புணர்ச்சியின் போது, மார்பக அளவு அதிகரித்தும், மார்பகங்கள் முழுவதும் சிரை வடிவங்கள் மேலுந்தெரிந்தும், முலைக்காம்புகள் உறுதியடைந்தும் காணப்படும். மற்ற உயர் விலங்குகளுடன் ஒப்பிடும்போது, மனித மார்பகங்கள் வயதுவந்த பெண்களின் வாழ்நாள் முழுவதும் பெரும் விகிதத்தில் இருந்துவருகிறது. சில எழுத்தாளர் மார்பகம் உருவாவது பாலியல் முதிர்ச்சிக்கும், கருவுறுதலுக்கும் ஏற்பாடாவதெனக் கருத்துத் தெரிவித்தனர்.

மக்கள் மனிதப்பெண்ணுடலின் மார்பகங்கள் அழகுணர்ச்சியில் மனமகிழ்வதற்கும், சிற்றின்பத்திற்கும் ஒரு முதன்மையானச் சிறப்பியல்பாகக் கருதுகின்றனர். வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்கள் பெரும்பாலும் மற்ற உடற்பாகங்களை விட முதலாக மார்பகங்களை வெகுநேரமாகப் பார்கின்றனர் என்று தெரிந்தது; ஆய்வெழுத்தாளர் தொடக்கத்தில் இதற்குக் காரணம் உட்சுரப்பி என்றும், பெரிய மார்பகங்கள் உயரளவு ஈத்திரோசனையும், கூடுதலானக் கருவுறுத்தன்மையும் கொண்டது என்றும் சிந்தித்தனர்; ஆனால், ஆய்வாளர் "ஆண்கள் பெரும்பாலும் மார்பகங்களின் அளவை பொருட்படுத்தாமல் அழகுணர்ச்சியில் மனமகிழ்வதற்கு மட்டுமே அடிக்கடி பார்கின்றனர்", என்று கூறுகின்றனர்.

மக்கள் பலர் பெண்னின் வெற்று மார்பகங்களைச் சிற்றின்பமாகவும், பல பண்பாடுகளில் ஆண்களின் காம ஆசைகளை உயர்த்துவதாகவும் கருதுகின்றனர். சிலர் காம கவர்ச்சியை முற்றிலும் வேறுபட்ட பெண்னின் மார்பகங்கள் மீதுக் காட்டுகின்றனர்; இதை மார்பகக் காமம் என்று கருதப்படுகின்றது. அமெரிக்க பண்பாடு இளமையான நிமிர்ந்த மார்பகங்களை விரும்புகின்றது, சில பண்பாடுகளில் பெண்களின் தொங்கிய மார்பகங்களையும், தாய்மை குறிப்பிடையும், பட்டறிவு மதிநலத்தையும் போற்றுகின்றன.

குறியீட்டமர்வு[தொகு]

கிறித்துவ உருவக்கலையின் சில கலைப் படைப்புகளில், பெண்கள் ஒரு புனிதத்தியாகியாக மார்பங்களைத் துண்டித்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் கைகளிலோ, ஒரு தட்டிலோ வைத்து உயிர்நீத்தனர் என்று குறிப்பிட்டுச் சித்தரிக்கப்படுகின்றன; இதற்கு ஒர் எடுத்துக்காட்டு சிசிலியாவின் புனித அகதா.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பகம்&oldid=1908526" இருந்து மீள்விக்கப்பட்டது