இணைப்பிழையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணைப்பிழையம் அல்லது தொடுப்பிழையம் எனப்படுவது நாரிழை வகையைச் சேர்ந்த ஒரு இழையம் ஆகும்[1]. இது விலங்குகளில் உள்ள நான்கு இழைய வகைகளில் ஒன்றாகும். (ஏனைய மூன்றும், புறவணியிழையம், தசையிழையம், நரம்பிழையம்). உடலின் எல்லாப் பாகங்களிலும் இவ்வகை இணைப்பிழையம் காணப்படும். இது மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டது. அவையாவன: உயிரணுக்கள், நாரிழை, உயிரணு வெளிப்பொருள் தாயம். இணைப்பிழையமானது தசைநாண்கள் (tendons), கசியிழையம் (cartilage), எலும்பு (bone), குருதி (blood), கொழுப்பிழையம் (adipose tissue), நிணநீர் இழையம் (lymphatic tissue) போன்ற பல இயற்பியல் அமைப்புக்களை உருவாக்கும்.

விலங்குகளின் இணைப்பிழையமானது முக்கியமாக கொலாஜின் (Collagen) வகைப் புரதத்தைக் கொண்டிருக்கும். இதுவே முலையூட்டிகளில் அதிகளவில் காணப்படும் புரதமாகவும், கிட்டத்தட்ட மொத்த புரதத்தின் அளவில் 25% ஆகவும் இருக்கும்[2].

நாரிழை வகைகள்[தொகு]

  • கொலாஜின் நார் (Collagenous fibre)
  • மீண்மநார் (Elastin fibre)
  • நுண்வலை நார் (Reticular fibre)

இணைப்பிழையத்தின் இயல்புகள்[தொகு]

  • உயிரணுக்கள் பிரிந்து தனித்தனியாக இருக்கும்.
  • உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும், உயிரற்ற தாயம்.
  • நாரிழை - எல்லா வகை இணைப்பிழையங்களும் நாரிழைகளைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக குருதியும், கொழுப்பிழையமும் காணப்பட்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

[[பகுப்பு:இழையங்கள்]]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்பிழையம்&oldid=1995958" இருந்து மீள்விக்கப்பட்டது