சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி
[[Image:‎|300px|center|]]
ஆண் உடற்கூறு
உள் உணர்வுத் தமனியின் ஆழ்ந்த கிளைகள. (சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி இடது மையத்தில் குறியிடப்பட்டுள்ளது.)
இலத்தீன் glandulæ bulbourethrales
கிரேயின்

subject #264 1253

தமனி சிறுநீர்க்குழாய் மொட்டின் தமனி
முன்னோடி சிறுநீரகப் பாலின எலும்பு அறை
ம.பா.தலைப்பு Bulbourethral+Glands

சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (bulbourethral gland) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.

உடற்கூறு[தொகு]

சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.

பயன்கள்[தொகு]

பாலுறவுத் தூண்டலின்போது இரு சுரப்பிகளும் விந்து தள்ளலுக்கு முன்னர் முன்பீச்சுப் பாய்மம் என்ற தெளிவான நிறமற்ற நீர்மத்தை சுரக்கின்றன. இந்த நீர்மம் சிறுநீர்க் குழாயில் விந்தணு எளிதாக பயணித்திட உயவூட்டுகிறது. இந்தப் பாதையிலுள்ள சிறுநீரையும் தூசுகளையும் நீக்கிடவும் உதவுகிறது.[2]

படிமங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray's Anatomy, 38th edn, p 1861
  2. A neglected gland: a review of Cowper's gland