உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்குறி
ஆசிய யானை ஒன்றின் ஆண்குறி
விளக்கங்கள்
முன்னோடிஅம்னியோட்டா
அமைப்புஇனப்பெருக்கத் தொகுதி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்penis
உடற்கூற்றியல்

ஆண்குறி (Penis) என்பது முதுகெலும்புள்ள, முதுகெலும்பற்ற உயிரினங்களின் இனப்பெருக்க உறுப்பாகும். இவ்வுறுப்பே சிறுநீரை வெளியேற்ற பயன்படுகின்ற கழிவேற்ற உறுப்பாகவும் செயல்படுகிறது. இஃது ஆணுறுப்பு என்று அறியப்பெறுகிறது. ஆண் உயிரிகளும், இரு பாலின உயிரிகளும் பெண் உயிரியினுள் விந்துவை செலுத்த இவ்வுறுப்பினை பயன்செய்கின்றன.

ஆனால் ஆண்குறியின்றியே இனப்பெருக்கம் செய்கின்ற உயிர்களும் உள்ளன. ஆண் தன்மையையும், பெண் தன்மையும் தன்னகத்தே கொண்ட சில உயிர்கள் இப்பிரிவினை சார்ந்தவை. பழங்காலத்தில் வாழந்த (Pterosaur) என்ற பறக்கும் தன்மையுடைய தொன்ம உயிரினம் உதாரணமாக கூறப்பெறுகிறது.

சொல்லிலக்கணம்

penis என்ற ஆங்கில வார்த்தையானது, இலத்தீன் வார்த்தையான வால் என்பதிலிருந்து எடுக்கப்பெற்றதாகும். இந்தோ - ஐரோப்பிய வார்த்தையானது, கிரேக்க சொல்லான πέος என்பதிலிருந்து வந்ததாகவும் நம்பிக்கையுண்டு. மேலும் ஆண் குறியானது யார்டு (yard) என்றும் காக் (cock) என்றும் அறியப்பெறுகிறது. லிங்கம் என்ற சொல்லும், பீசம் , சுன்னி , குஞ்சி எனும் சொல்லும் தமிழில் ஆண்குறியை குறிக்க பயன்படுகிறது.

மனித ஆண்குறி

மனித ஆண்குறி

மனித ஆண்குறியானது மற்றைய பாலூட்டும் விலங்குகளின் ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் எலும்புகள்) காணப்படுவதில்லை. மாறாக இரத்த அழுத்தம் காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. இவ்வாறான எழுச்சி நிலையில் ஆண்குறி சமநிலையில் அல்லாமல் சற்று வளைந்த நிலையில் காணப்படுகிறது. மற்ற விலங்குகளின் உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது.

உடலுறவின் போது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்கு விந்தானது விந்து பீச்சு நாளத்தின் மூலம் செலுத்தப்பெறுகிறது. அந்த விந்து திரவத்திலிருந்து முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட விந்தனுக்கள் கருப்பாதையில் பயனிக்கின்றன. இறுதியாக ஒரே ஒரு விந்தனு மட்டும் அண்டத்தினை துளைத்து கருவினை உண்டாக்குகிறது. மற்றவை கழிவாக வெளியேற்றப்படுகின்றன.பல்வேறு, கலாச்சார, மத, மற்றும் அரிதாக மருத்துவ காரணங்களுக்காக ஆண்குறியின் மொட்டுப் பகுதியை மறைக்கும் முனைத்தோல் எனும் சளிச்சவ்வினை அகற்றுதல் விருத்த சேதனம் எனப்படுகிறது. இவ்வாறு செய்பவர்களின் ஆண்குறி மொட்டு உலர்ந்து காணப்படும். இவ்வாறு விருத்த சேதனம் செய்வது குறித்து கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

மனித ஆண்குறி - ஆண்குறி தண்டுப்பகுதி (radix), ஆண்குறி மொட்டு(glans penis), முனைவளைவு(corona of glans), சளிச்சவ்வு ஆகிய வெளிப் பகுதிகளை கொண்டுள்ளது. உட்பகுதியில் விந்து சுரபி, விரைப்பை அல்லது விந்துக் கொள்பை, சிறுநீர்க் கால்வாய், சுரபிகள் போன்றவற்றினை கொண்டுள்ளது.

விந்து கொள்பைகள்

உற்பத்தியான விந்தணுக்களை சேகாரம் செய்துவைத்திருக்கும் இரு கொள்பைகள் விந்து கொள்பைகளாகும். மனித உடலிலுள்ள வெப்பம் விந்தணுக்களை பாதிக்கும் தன்மையுடையது என்பதால், உடலிருந்து தனித்து இந்த விந்து கொள்பைகள் வெளியில் வந்துள்ளன.

விந்து பீச்சு நாளம்

விந்து கொள் பையிலிருந்து விந்து நாளத்துடன் இணைந்து சுமார் 2.5 செ.மீ நீளமுள்ளது விந்து பீச்சு நாளமாகும். இது சிறுநீரை வெளியேற்றும் கால்வாயக்குள் முடிவடைகிறது.

சிறுநீர்க் கால்வாய்

ஆணுறுப்பில் சிறுநீர் வெளியேறவும், விந்து வெளியேறவும் இருக்கின்ற பொதுவான பாதைக்கு சிறுநீர்க் கால்வாயென பெயர். இது புராஸ்டேட் யூரித்ரா, மென்படல யூரித்ரா, பீனிஸின் யூரித்ரா என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.

மூடநம்பிக்கைகள்

ஆண்குறியைப் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. அதிலும் மிகப்பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களுக்கு உள்ளது. ஆண்களின் ஆண்குறி அளவை வைத்தே அவனின் ஆண்மையை கணக்கிட வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும். சராசரி ஆண்குறி அளவைக் காெண்டே பெண்கள் திருப்தியடைகின்றனர். அவை பொதுவாக 3 அங்குலம் முதல் 7 அங்குலம் வரை இருக்ககூடும்.

விலங்குகளின் ஆண்குறி

பகுலம் (Baculum) அல்லது ஓஎஸ் பீனிஸ் என்ற எலும்பானது பெரும்பாலான பாலூட்டிகளில் காணப்படுகின்றது என்ற போதும், மனிதர்களிடமும், குதிரைகளிடமும் காணப்படுவதில்லை.

பாலூட்டிகளில் ஆண்குறியானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

ஆண்குறியின் தண்டுப்பகுதி - ஆண்குறியின் உடல் - ஆண்குறியின் மொட்டுப்பகுதி - ஆண்குறியின் நுனியில் அமைந்துள்ளது.

இதர முதுகெலும்பு விலங்குகளின் ஆண்குறி

பெரும்பாலான ஆண் பறவைகள் (எ.கா., ரூஸ்டர், வான்கோழி) ஒரு எச்ச துவாரத்தில் ஆண்குறி போன்ற ஒன்று உள்ளது. இது போலி ஆண்குறி (Pseudo-penis) என்ற சொற்பதத்தினால் குறிக்கப்பெறுகிறது.

ஆண்குறி தொடர்புடைய கட்டமைப்பு

ஆண்குறியை ஒத்த கட்டிடம்

சில கட்டிடங்கள் தற்செயலாகவோ, படைப்பின் திறனை ஆண்குறியாக பெருமை கொள்ளவோ ஆண்குறி அமைப்பினை ஒத்து அமைக்கப்பெறுகின்றன. இவ்வாறான கட்டிடங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான இடங்களாகவும், பண்டைய கலாச்சாரங்களை தெரிவிப்பதாகவும், பாரம்பரியமான தொன்பொருள்களாகவும் உள்ளன.

ஆண்குறி அமைப்புடைய கட்டிடங்கள்:

படைப்பாற்றல் என கொள்ளும் அளவிற்கு ஆண்குறி தொடர்புடைய சிலைகள் பெரும்பாலும் கற்காலத்திலும், வெண்கலக் காலத்திலும் அதிகமாக படைக்கப்பெற்றுள்ளன. ஆண்குறி வெளியே தெரியும்படியான ஆண்களின் சிலைகள், ஆண்குறியை பயன்படுத்தி அலங்காரப் பொருள்கள் போன்றவையும் இதில் அடங்கும். கிரேக்கத்தில் பல கடவுள்களின் சிலைகள் ஆண்குறி தெரியும்படி நிர்வாணமாகவே, ஆடை விலகிய நிலையிலோ படைக்கப்பட்டுள்ளன.

மதங்களில் ஆண்குறி

சைவ சமயம்

இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்

சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக வணங்கப்பெறும் சிவபெருமானை கோவில்களில் லிங்க வடிவில் அமைக்கின்றார்கள். இந்த லிங்க வடிவமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். இந்த லிங்கமானது ஆண் பாகமென்றும், ஆவுடையார் பெண் பாகமென்றும் வழங்கப்பெறுகிறது. இவை இணைந்தும் ஆலிங்கனம் செய்வதை சிவாலயங்களில் மூலவராக வழிபடுகின்றனர்.[1][2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.eegarai.net/t88713-topic
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2013-06-05.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்குறி&oldid=4113126" இலிருந்து மீள்விக்கப்பட்டது