இதழ் (பிறப்புறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித இதழ்கள் (இப்படங்களில் பொச்சு மயிர் மேல்லிதழ்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது):
மேலே: கீழ்ழிதழ்களை ஓரளவு மறைத்தவாறு நிற்கும் நிலையிலுள்ள பெண்
கீழே: மேல்லிதழ்களை விரித்து கீழ்ழிதழ்களைக் காட்டப்பட்டுள்ளன

பிறப்புறுப்பு இதழ்கள் (labia) என்பன பெண் பிறப்புறுப்பின் ஓர் உடற்கூற்று அமைப்புகளாகும். அவை பெண்குறிக்கு வெளிப்புறமாகத் தெரியும் முதன்மைவாய்ந்த பகுதிகளாகும். மனித இனத்தில் இவை இரு இணையாக உள்ளன: ஓரிணை வெளி இதழ்கள் அல்லது மேல் இதழ்கள் (லாபியா மேஜரா) பெருத்தும், கொழுத்தும் அமைந்திருப்பவை. மற்றொரிணை உள் இதழ்கள் அல்லது கீழ் இதழ்கள் (லாபியா மைனரா) வெளி இதழ்களினுள் மறைக்கப்பட்ட தோல் மடிப்புக்களாலானவை. இவ்விதழ்கள் பெண்குறிக் காம்பையும், யோனியின் துளைகளையும், சிறுநீர்வழியையும் சுற்றிச்சூழ்ந்தமைந்து பாதுகாக்கிறன.[1][2][3]

சொற்பிறப்பு[தொகு]

லாபியம் (பன்மை: லாபியா) என்பது இலத்தீன் மொழிச் சொல். அஃது "உதடு" எனப் பொருள்படும். மனித உதடு போல் இவை தோற்றம் கொண்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தமிழ் மொழியில் பிறப்புறுப்பு இதழ்கள் எனக்கூறப்படுகின்றன.

உடற்கூற்றியல்[தொகு]

பன்முகத்தன்மை[தொகு]

கீழிதழ்களின் நிறம், அளவு, நீளம், வடிவம் ஆகியவை ஒவ்வொரு பெணிடமிருந்து பரவலாக மாறுபட்டு அமைந்திருப்பன. இவை சிலப் பெண்ணிடம் ஏறக்குறைய இல்லா நிலையிலும், மற்ற சிலரிடம் சதைப்பற்றி முனைப்பாகத் தெரிகின்ற நிலையிலும் அமைந்திருக்கக்கூடும். இவை ஒவ்வொருவரிடமும் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து பழுப்புக் கருப்பு நிற வரையிலும், இழையமைப்பு மெல்லிழைந்தும் சுரள் மடிப்புகள் வாய்ந்தும் வேறுபட்டு அமைந்திருப்பன.

கரு வளர்ச்சியும் அமைப்பொப்பியலும்[தொகு]

பெண்ணினப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி நிலைகள்

காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள்[தொகு]

பெண்களது டேன்னர் நிலைகளின் விளக்கப்படம். பருவமடையும் போது ஏற்படும் உடற்மாற்றங்களைக் கண்காணிக்க உதவும் ஒர் அளவு. அந்தரங்க மயிர் வளர்ச்சியடைவதை வலப்பக்கத்தில் காணலாம்.

காமக்கிளர்ச்சியும் எதிர்செயலும்[தொகு]

இடம்: கிளர்ச்சியற்ற நிலையிலுள்ள பெண்ணின் கருவாய்.
வலம்: காமக்கிளர்ச்சி ஏற்பட்டதால் பெண்ணின் இருவிதழ்கள் வீங்கியும், கீழ்ழிதழ்கள் சற்றுப் பின்வாங்கியும், கருவாய் உயவிட்டும் காணப்படுகின்றன.

பிறப்பிதழ்கள் ஒரு பெண்ணிற்குரிய காமவுணர்ச்சி வலையங்களில் ஒன்றாகும். கீழிதழ்கள் காமவுணர்ச்சிக்கு எதிர்குறிப்பு அளிப்பன, இவற்றின் உணர்திறன் பெண்களுக்கிடையில் மிகவும் வேறுபடுகின்றன. உணர்ச்சி மிகுதியால் சிலப்பெண்ணிடம் மென்மையான தொடுதலுக்குத்தவிர மற்றவைக்கு இதமின்றி இருக்கும். அப்படி இருக்கையில், சிலப்பெண்ணிடம் தூண்டுதல் காமத்தை வெளிப்படுத்தாமலும் இருக்கும். தன்னின்பம் மூலமாகவும், தன்னிணையுடன் வாய்வழியும், விரல் கொண்டு தொட்டும் பாலுறவு கொள்வதன் மூலமாகவும் இதழ்கள் பாலுணர்ச்சித் தூண்டுதலடையும். கீழிதழ்களை அசைவிப்பதால், மிகவுணர்ச்சியுடைய பெண்குறிக் காம்பு தூண்டுதலடையும்.

பாலியல் விழிப்புணர்ச்சியின் போது, மேலிதழ்களின் மிகுதியான குருதி ஓட்டத்தால் வீங்குகின்றன பிறகு அவை சமநிலைக்கு யோனி சற்றுத்திறந்து திரும்புகின்றன. கீழிதழ்கள் குருதியோட்டத்தால் விரிவடைவதால், அவற்றின் குறுக்களவு இரண்டு முதல் மூன்று மடங்கு வரை விரிவடைந்து, கருத்தோ சிவந்தோ காணப்படுகின்றன. சூல், பிள்ளைப் பேறு ஆகியவற்றை அடைவதால் இனப்பெருக்கவுறுப்புக் குருதி நாளங்கள் வளர்ச்சியடைகின்றன. அத்தகைய பெண்களுக்கு மேலிதழ்களும், கீழிதழ்களும் விரைந்து விரிவடையக்கூடும்.

பாலியல் தூண்டல் காலத்திற்குப்பிறகு, கீழ்ழிதழ்கள் 30 விநாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை குருதியால் மென்மேலும் விரிவடைந்தும், மென்மேலும் சிவந்தும் புணர்ச்சிப் பரவசநிலைக்கு முன்னர் காணப்படும். இத்தகைய காலத்தில், பிள்ளைப்பேறு அடைந்த பெண்களின் கீழிதழ்கள் குறிப்பாக வீங்கியும், கருஞ்சிவந்தும் காணப்படலாம். தொடர்ந்து தூண்டுதல் புணர்ச்சிப் பரவசநிலைக்கு வழிவகுக்கும், இதனால் ஏற்பட்ட சுருக்கங்கள் மேலிதழ்களிலும், கீழிதழ்களிலும், பெண்குறிக் காம்பிலும், யோனியின் மற்ற பகுதிகளிலும் செயலறு நிலையிலுள்ள குருதியை அகற்றுவதற்கு உதவுதன் மூலம் இன்பக் காமக்கிளர்ச்சி ஏற்படுத்துகின்றன.

புணர்ச்சிப் பரவசநிலையைத் தொடர்ந்தோ, ஒரு பெண்ணுக்குக் காமவிழிப்புணர்ச்சி நீளாமல் தொடர்ந்தோ இருப்பின் இதழ்கள் கிளர்ச்சியற்ற நிலைக்குத் திரும்புகின்றன. கீழிதழ்கள் இரண்டு நிமிடங்களில் அதன் இயல்பு நிறத்திற்கு திரும்புகின்றன, ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றின் குருதி வீக்கமும் மறைவுறும். மேலிதழ்கள் கிளர்ச்சியற்ற நிலைக்குத் திரும்ப கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாகும்.

அந்தரங்க மயிருடன் உள்ள இதழ்கள்

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Farage, Miranda A.; Maibach, Howard I. (2006). The Vulva - Anatomy, Physiology, and Pathology. பக். 1–4, 14, 28–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-3608-9. https://books.google.com/books?id=beenEjKmvPwC&q=The+Vulva+Anatomy%2C+Physiology+and+Pathology&pg=PP1. 
  2. Moore, Keith L.; Agur, Anne M. R.; Dalley II, Arthur F. (2010). Essential Clinical Anatomy, Fourth Edition. பக். 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781609131128. 
  3. Jones, Richard E.; Lopez, Kristin H. (2006). Human reproductive biology. Elsevier Science. பக். 55, 133–138, 154, 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080508368. https://books.google.com/books?id=LqG5ngEACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதழ்_(பிறப்புறுப்பு)&oldid=3768900" இலிருந்து மீள்விக்கப்பட்டது