சுய இன்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"Mulher sentada de coxas abertas", 1916 drawing by Gustav Klimt

சுய இன்பம் (Masturbation) என்பது பாலுறவு தவிர்ந்த வழிமுறைகள் மூலம் பாலுறுப்புக்களை தொடுகை மூலமோ, வேறு வழிகளாலோ தூண்டி பால்கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை, புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.

மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையை அவதானிக்கலாம்.

இந்நடத்தையும் இது தொடர்பான பொது உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கலாச்சார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது.

சுய இன்பத்துக்கான பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில் அவதானிக்கப்படக்கூடிய இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.

விலங்கு இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப் பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம்.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?[தொகு]

சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தனியார் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் சுயஇன்பத்தைப் பற்றியதான பயம் மக்களிடையே உள்ளது.

சுய இன்பத்தால் நரம்புத் தளர்ச்சி, ஆணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வராது என மருத்துவ உலகம் கூறுகிறது. இதனை நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

கருவியை பயன்படுத்தி சுய இன்பம் காணும் பெண்
அவள் கை உதவியால் பெண் சந்தோஷமாக இருக்கிறது
தனது கையைப் பயன்படுத்தி சுய இன்பம் காணும் ஆண்

கட்டுப்பாடு[தொகு]

பண்டைய கிரேக்க நாடுகளில் சிறுவர்கள் இப்பழக்கத்தை செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆண்குறிக்கு பூட்டு போடப்பட்டது. அதன் சாவியை அவன் தந்தையிடம் கொடுத்து விடுவர். சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அதை திறந்து கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. உயிர், விகடன் பிரசுரம், சென்னை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுய_இன்பம்&oldid=2702583" இருந்து மீள்விக்கப்பட்டது