முன்னிற்கும் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்துப்பை அல்லது விந்துநீர்ச்சுரப்பி

புராசுட்டேட் சுரப்பி அல்லது முன்னிற்கும்சுரப்பி என்னும் பகுதி சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே உள்ளது. இது சற்று வலுவான சுரப்பித் தன்மையும், நார்த் தசைத் தன்மையும் கொண்டிருக்கும். இவ்வுறுப்பு 5 செ.மீட்டர் குறுக்களவு உடையது. இதன் எடை 8 கிராம் ஆகும். புராசுட்டேட் சுரப்பியின் தசைத் தன்மையால் விந்து நீர்மம் கலவியின் போது கட்டுப்பாடுடன் விந்து பீச்சு நாளங்களால் செலுத்தப்படுவது எளிதாகிறது. வயது முதிரும் நிலையில் இச்சுரப்பி பெரிதடைகின்றது. இதனால் சிறுநீர் கழித்தலில் தடைகள் ஏற்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் புராசுட்டேட் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னிற்கும்_சுரப்பி&oldid=2758319" இலிருந்து மீள்விக்கப்பட்டது