தமனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமனி
Arterial System en.svg
மனித உடலில் உள்ள முதன்மையான தமனிகள்.
Latin Arteria (plural: arteriae)


தமனியின் வெட்டுத் தோற்றம்.

தமனிகள் (Artery) அல்லது நாடிகள் எனப்படுபவை, குருதியை இதயத்தில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்லும் குழாய்கள் ஆகும். இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனப்படுகின்றன.

உடலின் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் கொண்டு செல்வதிலும் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் தமனிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் இறப்புக்கு முதன்மையான காரணிகள் மாரடைப்பும் (Heart Attack) பக்கவாதமும் (Stroke) ஆகும். இவை நாளடைவில் தமனிகள் பழுதடைவதால் ஏற்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமனி&oldid=1706106" இருந்து மீள்விக்கப்பட்டது