சுற்றோட்டத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதச் சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஒட்சியேற்றப்பட்ட குருதியையும், நீலம் ஒட்சியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.

சுற்றோட்டத் தொகுதி (Circulatory system) என்பது, ஊட்டச்சத்துகள், வளிமம், இயக்குநீர்கள், கழிவுகள் என்பவற்றைக் கலங்களுக்கும், கலங்களிலிருந்தும் கொண்டு செல்லும் உறுப்புத் தொகுதியாகும். இது, நோய்களை எதிர்ப்பதற்கும்; உடல் வெப்பநிலையையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து நீர்ச் சமநிலையைப் (homeostasis) பேணுவதற்கும் உதவுகிறது.

நமது உடலில் உள்ள அனைத்துச் கலங்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்கள், ஆக்சிசன் தேவை. கலங்களில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்கள் மூலம் அங்கு தோன்றும் கழிவுப் பொருட்களையும், காபனீரொட்சைட்டு போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான கலங்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. இதயத்தின் இயக்கத்தால் இரத்தத்தைக் கடத்தும் குருதிக்குழல்கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.

இத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், நிணநீரைக் கொண்டு செல்லும் நிணநீர்த் தொகுதியையும் உள்ளடக்கியது என்கின்றனர். மனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.

மனிதச் சுற்றோட்டத் தொகுதி[தொகு]

மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் இதயம், குருதி, குருதிக் கலங்கள் (நாடி, நாளம், நுண்துளைக்குழாய்கள் அல்லது மயிர்த்துளைக் குழாய்கள்) என்பனவாகும். ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை ஒட்சிசனேற்றுவதற்காக நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட நுரையீரல் சுற்றோட்டத்தையும் (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் தொகுதிச் சுற்றோட்டத்தையும் (systemic circulation) உள்ளடக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றோட்டத்_தொகுதி&oldid=1828755" இருந்து மீள்விக்கப்பட்டது