நீர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு கண்ணாடி கோப்பையில் உள்ள நீர்மம்

நீர்மம் (இலங்கை வழக்கு: பாயம்) (திரவம், liquid) என்பது நீர் வடிவில் இருக்கும் ஒரு பொருள். நீர், எண்ணெய், உருகிய மாழை (உலோகம்), பழச்சாறு போன்றவை நீர்மப் பொருள்கள் ஆகும். ஒரு பொருள் இயல்பாய் உள்ள நான்கு[1] நிலைகளில் நீர்ம நிலையும் ஒன்று. நீர்மப்பொருளின் சில அடிப்படைப் பண்புகள்:

  • நீர்மப்பொருள் தனக்கென ஒரு வடிவம் கொள்ளாது, தான் இருக்கு கொள்கலத்தின் வடிவைக் கொண்டு இருக்கும்.
  • நீர்மப்பொருளை ஒரு கொள்கலத்தில் இருந்து மற்றொரு கொள்கலத்திற்கு ஊற்ற முடியும்.
  • நீர்மத்தில் இருக்கும் அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலைத்த இணைப்பு ஏதும் கொண்டிராது.
  • நீர்மத்தில் இருக்கும் அணுக்களோ மூலக்கூறுகளோ நீர்மத்துக்குள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து அலைந்து கொண்டு இருக்கும்.
  • நீர்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு அணுக்களின் அல்லது மூலக்கூறுகளின் அளவைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. பொருள்களின் நான்கு நிலைகள்: திண்மம், நீர்மம், வளிமம், பிளாஸ்மா (இயற்பியல்) (மின்மவளிம நிலை)

மேற்கோள்[தொகு]

  1. Melissa Rayon. "Phases of Matter". பார்த்த நாள் 2009-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மம்&oldid=1343517" இருந்து மீள்விக்கப்பட்டது