உள்ளடக்கத்துக்குச் செல்

புறவுறைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறவுறைத் தொகுதி என்பது உடலைச் சேதங்களில் இருந்து பாதுகாக்கும் உறுப்புக்களின் தொகுதியாகும். இது, தோலையும், அதனோடு சேர்ந்த உரோமம், செதில், நகம் போன்றவற்றையும் உள்ளடக்குகிறது. புறவுறைத் தொகுதி பல செயற்பாடுகளைச் செய்கிறது. விலங்குகளில், இது அவற்றின் உடலுள் நீர் புகாது தடுத்தல், உள்ளேயுள்ள இழையங்களைப் பாதுகாத்தல், கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல், வெப்பநிலையைச் சமநிலையாக்குதல் போன்ற தொழில்களைச் செய்கின்றது. அத்துடன், வலி, தொடுகை, வெப்பம், அழுத்தம் ஆகியவற்றை உணரக்கூடிய உணரிகளும் இங்கேயே அமைந்துள்ளன. மனிதர்களில் இது உயிர்ச்சத்து டி ஐயும் உற்பத்தி செய்கின்றது.

புறவுறைத் தொகுதியே உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்புத் தொகுதி. இத்தொகுதி உடலைப் புறச் சூழலிலிருந்து பிரிப்பதுடன், அச் சூழல் பற்றிய தகவல்களை விலங்குக்கு வழங்கிச் சூழலின் சாதகமற்ற நிலைமைகளில் விலங்கின் உடல் பாதிப்படையாமலும் காக்கிறது. நீரில் வாழுகின்ற அல்லது தொடர்ச்சியாக ஈரலிப்பான வாழிடங்களில் வாழும் சிறு உடல் கொண்ட முதுகெலும்பிலிகள் மூச்சு விடுவதற்கும் புறவுறைத் தொகுதியே பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவுறைத்_தொகுதி&oldid=1565110" இலிருந்து மீள்விக்கப்பட்டது