வெப்பம் (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெப்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணுக்கரு இணைவு மூலம் சூரியனில் வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது மின்காந்த கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகிறது.இது புவியில் உயிர்வாழ்வதற்கான முலதாரமாக விளங்குகிறது

இயற்பியல், வேதியியல், பொறியியல், வெப்பஇயக்கவியலில், வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வேலை தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.

சாதாரண மொழியில், தொழில்நுட்ப மொழி இருந்து மாறுபட்டதாக, வெப்பம் என்ற வார்த்தைக்கு பரந்த பொருள் உண்டு. வார்த்தைகளின் பல்வகைமையை மறந்து பயன்படுத்தினால் இந்தகுழப்பம் உண்டாகும்.

வெப்பஇயக்கவியலில், வெப்ப கதிர்வீச்சு, உராய்வு மற்றும் பாகுத்தன்மை மூலம் மற்றும் இரசாயன சிதறல் முலம் வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது பரிமாற்றலாம்.

பொறியிலில் வெப்ப பரிமாற்றம்; திணிவுபரிமாற்றம் மூலம், கதிர்வீச்சு, வெப்பச்சலனம் மூலம், மற்றும் வெப்பக்கடத்தலின் மூலமான வெப்ப பரிமாற்றத்தை கருதுகிறது.

மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி சமமான அல்லது அதிக வெப்பநிலையில் உள்ள உடலில் இருந்து மற்றொரு உடலிற்கு ஆற்றல் பரிமாற்றம் வெப்ப எக்கி மூலமான இயந்திர வேலை, அல்லது இதற்கு ஒத்த செயல்முறை உதவியுடன் செய்யலாம் என்கிறது. இதன்போது பிரபஞ்ச இயல்பாற்றல் அதிகரிக்கும் அதேவேளை குளிரான பொருளின் இயல்பாற்றல் வெப்பத்தை அதிலிருந்து உறிஞ்சுவதால் குறைகிறது.

இயற்பியலில், குறிப்பாக வெப்பஅளவீடு, மற்றும் வானிலை ஆய்வில், உள்ளுறை வெப்பம் மற்றும் உணர்வெப்பம் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெப்பத்துடன் தொடர்புடைய ஓர் குழப்பமான சொல்லாக வெப்ப ஆற்றல் உள்ளது. இது ஒர் அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றலை பற்றி கூறுகிறது. ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடாக்கும் அல்லது குளிர்விக்கும்போது அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பம்_(இயற்பியல்)&oldid=1629928" இருந்து மீள்விக்கப்பட்டது