வெப்ப ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப இயக்கவியலில், வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு ஏற்ப இருக்கும் அக ஆற்றலைக் குறிக்கும்[1]. இயற்பியலிலோ அல்லது வெப்ப இயக்கவியலிலோ இதனைத் திட்டவட்டமாக வரைவிலக்கணப்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படாமலேயே அக ஆற்றலில் மாறுதல் நிகழலாம் என்பதுடன், அக ஆற்றலின் எந்தப் பகுதி வெப்பத்தால் நிகழ்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் இருப்பதுமாகும். ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடுபடுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப வெப்ப ஆற்றலும் மாறுபடும். ஒரு பொருளின் வெப்பம் (இயக்கவியல்) மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று சொல்லப் படுகிறது.

வெப்பம் என்பது வேறுபட்ட வெப்பநிலைகளைக் கொண்டிருக்கும், ஒரு அமைப்புக்கும், அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையில், அவற்றுக்கிடையே இருக்கும் எல்லையின் இரு பக்கங்களுக்குமிடையில் காணப்படும் வெப்பநிலை வேறுபாட்டால் ஏற்படக்கூடிய ஆற்றல் நிலைமாற்றம் ஆகும்[2].

அடிப்படை அளவில், ஒரு பொருளின் அணு, மூலக்கூறு நகர்ச்சியால் உண்டாகும் இயக்க ஆற்றலின் ஒரு வகையே வெப்ப ஆற்றல் என்பது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thermal energy". Encyclopædia Britannica. Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Thomas W. Leland, Jr. "Basic Principles of Classical and Statistical Thermodynamics" (PDF). Department of Chemical Engineering, University of Illinois at Chicago. pp. 15, Heat and Thermal Energy. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேலும் படிக்க[தொகு]

வெப்பத்தின் பருமச்சுருக்கம்தான் துகள் அணு மூபேநேநேநோபலக்கூறு மற்றும் திட திரவ வாயுத்தொகுப்புகளால் ஆன பொருள் நிலைகள் ஆகும். எனவே பொருளாய் ஆனது வெப்பம். பொருளுக்குள் விரவி பரவி இருப்பது வெப்ப ஆற்றல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_ஆற்றல்&oldid=3572307" இலிருந்து மீள்விக்கப்பட்டது