அக ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெப்ப இயக்கவியலில், அக ஆற்றல் அல்லது உள்ளாற்றல் (internal energy) என்பது வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த ஆற்றல் ஆகும்.[1] அக ஆற்றலில் இரண்டு கூறுகள் உண்டு. அவை, இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகும். இயக்க ஆற்றலானது, ஒர் அமைப்பில் உள்ள துகள்களின் இடப்பெயர்ச்சி, சுழற்சி, அதிர்வு ஆகிய இயக்கம் காரணமாக அமையும் ஆற்றல். நிலை ஆற்றலானது, மூலக்கூறுகளின் உள்ளே உள்ள அணுக்களின் மின் ஆற்றல் மற்றும் வேதிப் பிணைப்புகளின் ஆற்றல் ஆகும். ஒரு அமைப்பின் அக ஆற்றலை அவ்வமைப்பை வெப்பமூட்டியோ அல்லது அவ்வமைப்பின் மீது வேலை செய்தோ மாற்றலாம்; அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது அதன் அக ஆற்றலை மாற்ற முடியாது. முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின்படி, ஓர் அமைப்பினுள் உட்செலுத்திய வெப்பத்தில் இருந்து அவ்வமைப்பு சுற்றுச்சூழலில் செய்த வேலையைக் கழித்தால், அது அவ்வமைப்பில் கூடிய உள்ளாற்றலுக்குச் சமமாக இருக்கும்.

வரைவிலக்கணம்[தொகு]

வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ள அனைத்து வகை ஆற்றல்களினதும் மொத்தம் (Ei) அதன் அக ஆற்றல் (U) எனப்படும்.

இது அமைப்பை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றல் ஆகும்.

இங்கு, - நிலை ஆற்றல், - இயக்க ஆற்றல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Peter Atkins, Julio de Paula (2006). Physical Chemistry (8 ). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக_ஆற்றல்&oldid=2223075" இருந்து மீள்விக்கப்பட்டது