தனிச்சுழி வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனிச்சுழி வெப்பநிலை −273.15°செ, அல்லது 0 கெ.

தனிச்சுழி வெப்பநிலை (absolute zero) அல்லது தனிவெப்பக் கீழ்வரம்பு என்பது கருத்தியலில் மட்டுமே எட்டப்படக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும். எனவே ஒரு அமைப்பின் மிகக்குறைந்த மொத்த ஆற்றலும் இந்த வெப்பநிலையிலேயே எட்டப்படும் என்று கருத்தியல் இயற்பியலில் கூறப்படுகிறது.[1]

பன்னாட்டு உடன்பாட்டின்படி, தனிச்சுழி வெப்பநிலை கெல்வின் அளவுத்திட்டத்தில் 0கெ என்றும் செல்சியசு அளவில் −273.15°செ என்றும் கொள்ளப்படும்.[2][3] இது பாரன்ஃகைட்டு அளவில் −459.67° ஆகும்.[4], ரான்கைன் அளவில் 0 R ஆகும்.[3]

வெப்பஇயங்கியல் விதிகளின் படி தனிச்சுழி வெப்பநிலை என்பது இயற்கையிலோ செயற்கையிலோ எட்டவே இயலாத ஒன்றாகும். 100 விழுக்காடு பயனுறுதிறன் உடைய இயந்திரம் அல்லது இடையறா இயக்கம் இல்லை என்பதைப் போன்றதே இதுவும். எனினும், அறிவியலாளர்கள் தனிச்சுழி வெப்பநிலைக்கு ஏறத்தாழக் கிட்டவாக அடைந்துள்ளனர். இவ்வெப்பநிலைப் பகுதியில் பொருள் ஒன்று மீக்கடத்துதிறன், மீப்பாய்மத்தன்மை, போன்ற குவாண்டம் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.

தனிச்சுழி வெப்பநிலையில் அனைத்து இயக்கங்களும் நின்று விடும் என்று எண்ணத் தோன்றினாலும் ஐசன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் சுழிப்புள்ளி ஆற்றல் (zero point energy /அடிமட்ட ஆற்றல்) என்றழைக்கப்படும் எஞ்சிய இயக்க ஆற்றல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] daviddarling
  2. "Unit of thermodynamic temperature (kelvin)". SI Brochure, 8th edition Section 2.1.1.5. Bureau International des Poids et Mesures (13 March 2010 1967). குறிப்பு: நீரின் மும்மைப் புள்ளி 0.01 °செ, (0 °செ அல்ல); எனவே 0 K என்பது −273.15 °செ, (−273.16 °செ அல்ல.
  3. 3.0 3.1 Arora, C. P. (2001). Thermodynamics. Tata McGraw-Hill. பக். Table 2.4 page 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-462014-2. http://books.google.com/books?id=w8GhW3J8RHIC&pg=PA43. 
  4. "Absolute Zero". Smithsonian Institution (1 January 2008). மூல முகவரியிலிருந்து 2013-04-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிச்சுழி_வெப்பநிலை&oldid=3297498" இருந்து மீள்விக்கப்பட்டது