உள்ளடக்கத்துக்குச் செல்

போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் (Bose–Einstein condensate) என்பது 1924 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியலாளரான சத்தியேந்திர நாத் போசு மற்றும் ஐன்ஸ்டைன் ஆகியோரால் முன்னுரைக்கப்பட்ட போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் என்ற குவாண்டம் விளைவினால் உருவாக்கப்படும் ஒரு நிலை. திண்மம், திரவம், வளிமம் மற்றும் பிளாஸ்மா ஆகிய பொருள்களின் நான்கு நிலைகளுக்கு அடுத்து ஐந்தாவது நிலையாகக் கருதப்படுகிறது இந்த போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்.

நோபல் பரிசு[தொகு]

1995-இல் முதன் முதலில் இந்த போசு செறிபொருளை உருவாக்கியதற்காக கார்னெல், வெய்மேன், கெட்டர்லே ஆகிய இயற்பியலாளர்களுக்கு நோபல் பரிசு 2001-இல் வழங்கப்பட்டது.

போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம்[தொகு]

போசு செறிபொருளில் உள்ள அணுக்களின் டீ பிராய் (de Broglie) அலைநீளமானது சராசரி அணுவிடைத்தொலைவிற்கு சமமாக இருப்பதால் அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அடிநிலையை அடைகின்றன. எனவே அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அலைச்சார்புகளைப் பெறுகின்றன. இதுவே போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் ஆகும்.

போசு செறிபொருளின் பயன்பாடுகள்[தொகு]

  • போசு செறிபொருள்கள் அணு லேசர்களை உருவாக்கப் பயன்படுகின்றன—லேசர்களில் உள்ள ஃபோட்டான்(ஒளித்துகள்?)களுக்குப் பதில் அணுக்கள் இருந்தால் அதுவே அணு லேசர் ஆகும்.
  • மீபாய்மத்தன்மை(superfluidity)யைப் பற்றி அறிய உதவுகிறது.