மீப்பாய்மத்தன்மை
பொருளானது பிசுக்குமையற்ற பாய்மமாக செயல்படும் பொருட்களின் நிலையே மீப்பாய்மத்தன்மை (Superfluidity) என்றழைக்கப்படுகிறது; இந்நிலையில் பொருளானது புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பு இழுவிசை ஆகியவற்றை எதிர்த்து தன்னிச்சையாக செயல்படுகிறது. வானியற்பியல், மீஉயர்-ஆற்றல்-இயற்பியல் மற்றும் குவாண்டம் புவியீர்ப்பு தேற்றங்களில் மீப்பாய்மைத்தன்மை நிலை காணப்பெறுகிறது. இந்நிகழ்வு போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் உடன் தொடர்புடையதாகும்; ஆனாலும் அனைத்து போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருட்களும் மீப்பாய்மத்தன்மையுடையதாகவோ அல்லது மீப்பாய்மத்தன்மையுடைய அனைத்தும் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருளாகவோ கொள்ளப்படமுடியாது.