வேலை (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியலில் வேலை (Work) என்பது ஒரு விசையினால் பரிமாறப்பட்ட ஆற்றலைக் குறிக்கும்.[1] ஒரு பொருளின் மீது விசை ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி நகர்ந்தால், விசையினால் வேலை செய்யப்படுகிறது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் எண்ணிக் கணியமாகும்.[2] இது அனைத்துலக முறை அலகுத்திட்டத்தில் யூல் என்னும் அலகால் தரப்படும்.[3]

அடிபந்தை எறிபவரால் பந்துக்கு ஆற்றலைக் கொடுப்பதன் மூலம் இங்கு வேலை செய்யப்படுகிறது.

ஒரு பொருளின் மீது மாறா விசை F ஒன்று செயற்பட்டு D என்ற இடப்பெயர்ச்சியை விசையின் திசையில் அடைந்தால் அவ்விசையினால் செய்யப்பட்ட வேலை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்.

            (1)

எப்போதும் விசையும் இடப்பெயர்ச்சியும் ஒரு திசையில் அமைவதில்லை. விசை F, இடப்பெயர்ச்சி D உடன் கோணத்தை ஏற்படுத்தின், வேலையானது இவ்விரு காவிகளின் புள்ளிப் பெருக்கல் மூலம் தரப்படும்.

            (2)


அனைத்துலக முறை அலகுகளில் ஒரு நியூட்டன் அளவுள்ள விசை செயற்பட்டு, அப்பொருள் ஒரு மீட்டர் இடப்பெயர்ச்சியை அடைந்தால் செய்யப்படும் வேலை 1 யூல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Work". Encyclopædia Britannica (2014 செப்டம்பர் 12). பார்த்த நாள் 2015 சூலை 19.
  2. "Scalars and Vectors". National Aeronautics and Space Administration. பார்த்த நாள் 2015 சூலை 19.
  3. க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலை_(இயற்பியல்)&oldid=2225282" இருந்து மீள்விக்கப்பட்டது