மின்காந்தவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்காந்தவியல் (electromagnetism) மின்காந்த அலைகளின் தன்மைகள், பயணிக்கும் முறைகள், பயன்பாடுகள் ஆகியவற்றை ஆயும் இயல். இத் துறை இயற்பியலின் ஒரு முக்கியப் பிரிவு.

மின்காந்தவியல் மின்சாரத்தால் திறனேற்றப்பட்ட துகள்கள் இடையே ஏற்படும் விசைகள் தொடர்புடைய அறிவியலின் பிரிவாகும். மின்காந்த கோட்பாடில் இந்த விசைகள் மின்காந்த புலங்களை கொண்டு விளக்கப்படுகிறது. மின்காந்த விசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும்,மற்றவை பொருள் ஈர்ப்பு விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை என்பனவாகும்.

மின்னல், ஒரு மின்னியல் நிகழ்வு
காந்தம்
மின்னியலும் காந்தவியலும் வெவ்வேறு துறைகள் என பலகாலம் நம்பப்பட்டு வந்தாலும், மைக்கல் ஃபரடே மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவால் மின்காந்தவியல் கண்ட்டறியப்பட்டது. மின்னல் மற்றும் காந்தம் இரண்டும் மின்காந்தவியல் விசையின் விளைவுகளேயாகும்.

மின்காந்தவியல் புவியீர்ப்பு தவிர, தினமும் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொறுப்பான விசை ஆகும். எதிமின்னியும் நேர்மின்னியும் பிரதானமாக மின்காந்தவியல் விசையாலேயே ஒன்றிணைக்கப்பட்டு அணுக்களை உருவாக்குகின்றன.

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அலகுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்தவியல்&oldid=1830409" இருந்து மீள்விக்கப்பட்டது