ஜோசப் ஹென்றி
ஜோசப் ஹென்றி | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 17, 1797 ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்), ஐ.அ |
இறப்பு | மே 13, 1878 வாசிங்டன், டி. சி., ஐ.அ | (அகவை 80)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அல்பனி அகாதமி |
அறியப்படுவது | மின்காந்தத் தூண்டல், மின்னியல் வாயில்மணிக்கும் உணாத்திக்கும் முன்னோடியை கண்டுபிடித்தவர் |
சமயம் | பிரெசுபைட்டீரிய திருச்சபை |
வாழ்க்கைத் துணை | ஹாரியத் ஹென்றி (முன்னர் அலெக்சாண்டர்) |
பிள்ளைகள் | வில்லியம் அலெக்சாண்டர் (1832–1862) மேரி அன்னா (1834–1903) ஹெலன் லூயிசா (பி. 1836) கரோலின் (பி. 1839) |

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry, திசம்பர் 17, 1797 – மே 13, 1878) இசுமித்சோனியன் கழகத்தின் முதல் செயலாளராகவும் இந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் ஊக்குவிற்பிற்கான தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார்.[1] தமது வாழ்நாளில் மிகவும் மதிக்கப்பட்டவராக விளங்கினார். மின்காந்தங்களை உருவாக்குகையில் மின்காந்தவியல் நிகழ்வான தன்-தூண்டத்தை கண்டறிந்தார். தவிரவும் மைக்கேல் பரடே(1791-1867) கண்டறிந்த பரிமாற்றத் தூண்டலை தானும் தன்னிச்சையாக கண்டறிந்தவர்; இருப்பினும் பரடேதான் தனது ஆய்வை முதலில் வெளியிட்டவர்.[2][3] ஹென்றி மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கினார். மின்சார வாயிற்மணிக்கு (குறிப்பாக மின் கம்பி வழியாக சற்றுத்தொலைவில் இருக்கும் மணியை ஒலிக்கச் செய்தல்,1831) முன்னோடியானதொரு கருவியை உருவாக்கினார்.[4] மின்சார உணாத்தியின் முன்னோடியையும் (1835) வடிவமைத்தார்.[5] தூண்டத்திற்கான அனைத்துலக அலகான என்றி இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவர் உருவாக்கிய மின்காந்த உணாத்திகளே சாமுவேல் மோர்சும், (1791-1872) சேர் சார்லசு வீட்சுடோனும் (1802-1875) தனித்தனியே கண்டறிந்த நடைமுறை மின்சாரத் தந்திக்கு அடித்தளமாயிற்று.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Planning a National Museum". Smithsonian Institution Archives. 3 ஆகஸ்ட் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ulaby, Fawwaz (2001-01-31). Fundamentals of Applied Electromagnetics (2nd ). Prentice Hall. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-032931-2. https://archive.org/details/fundamentalsofap0000ulab_u4z9.
- ↑ "Joseph Henry". Distinguished Members Gallery, National Academy of Sciences. 2006-12-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Scientific writings of Joseph Henry, Volume 30, Issue 2. Smithsonian Institution. 1886. பக். 434. http://books.google.com/books?id=w6cKAAAAIAAJ&pg=PA434&lpg=PA434&dq=%22joseph+henry%22+%22i+arranged+around+one+of+the+upper+rooms%22&source=bl&ots=_Cfy9EEoIK&sig=dhoJ0Ox6SINDh6N02cxqjomU2jU&hl=en&sa=X&ei=BuBtUOKYD4T68gTr14HoDw&ved=0CDQQ6AEwBA#v=onepage&q=%22joseph%20henry%22%20%22i%20arranged%20around%20one%20of%20the%20upper%20rooms%22&f=false.
- ↑ "The electromechanical relay of Joseph Henry". Georgi Dalakov.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: ஜோசப் ஹென்றி |
- The Joseph Henry Papers Project பரணிடப்பட்டது 2009-01-16 at the வந்தவழி இயந்திரம்
- Finding Aid to the Joseph Henry Collection
- Biographical details — Proceedings of the National Academy of Sciences (1967), 58(1), pages 1–10.
- Dedication ceremony for the Henry statue (1883)
- Published physics papers பரணிடப்பட்டது 2012-09-30 at the வந்தவழி இயந்திரம் — On the Production of Currents and Sparks of Electricity from Magnetism and On Electro-Dynamic Induction (extract)
- Joseph Henry Collection, Smithsonian Institution
- National Academy of Sciences Biographical Memoir