காந்த நிலையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்த நிலையியல் (Magnetostatics) மின்னோட்டங்கள் நிலையாக இருக்கும்போது (நேரத்திற்கேற்ப மாறாதபோது) காந்தப் புலங்களைக் குறித்த ஆய்வாகும். இது மின்மங்கள் நிலையாக இருக்கும்போது ஆயப்படும் நிலை மின்னியலுக்கு இணையானது. காந்தமாக்கம் நிலையாக இருக்க வேண்டியதில்லை; நானோவிநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் நிகழும் விரைவான காந்தநிலை மாற்றங்களை முன்னறியவும் காந்த நிலையியலின் சமன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.[1] மின்னோட்டங்கள் நிலையாக இல்லாதவிடத்தும், அவை மிக விரைவாக மாறாதவிடத்து, காந்த நிலையியலை கொண்டு மிக அண்மைய முடிவுகளைப் பெறலாம். பயன்பாடுகளான காந்தமய தரவு சேமிப்பு கருவிகளின் முன்மாதிரிகள் போன்ற குறுகாந்தவியல் பயன்பாடுகளில் காந்த நிலையியல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_நிலையியல்&oldid=3265117" இருந்து மீள்விக்கப்பட்டது