காந்தப் புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னோட்டம் ஒரு மின்கம்பியில் இருக்கும்பொழுது அக்கம்பியை சுற்றி காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும் அதாவது

- காந்தப்பாய்வு- magnetic flux (T)
where is the magnetic flux and B is the magnetic flux density.

வரலாற்று ரீதியில் H காந்தபுலப் பலத்தைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இது நேர் நிலையில் தொடர்பு கொண்டிருப்பதால் B, H ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டுதல் முக்கியம்.  • - காந்தப் புலம் - Magnetic Field
  • - காந்தப் புல பலம் (காந்தப் புலச் செறிவு)- Magnetic Field Strength
  • - காந்தப் பாயம் - Magnetic Flux (T)

காந்தப் புலத்திற்கும் காந்தப் புல பலத்துக்கும் இருக்கும் தொடபு:

இங்கே, காந்தஉட்புகுதிறன் ஆகும்.

காந்தப்புலம் உருவாக அடிப்படைக் காரணம் மின்னோட்டம் ஆகும். அதாவது ஏற்றம் ஒன்று ஒரு குறித்த திசையில் ஒரு குறித்த வேகத்துடன் செல்லும் போது அதனால் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும். நிலையான காந்தங்களிலும் காந்தப்புலத்துக்கு மின்னோட்டமே காரணம். உதாரணமாக இரும்பாலான சட்டக் காந்தம் ஒன்றினுள் உள்ள இரும்பு அணுக்களின் ஒழுக்கு இலத்திரன்களின் குறித்த திசைப்படுத்தப்பட்ட சுழற்சி இயக்கமே அவற்றின் காந்தப் புலத்துக்குக் காரணமாக அமைகின்றது.

மேலே உள்ள சமன்பாடு அசையும் ஏற்றம் ஒன்றால் உண்டாக்கப்படும் காந்தப் புலச் செறிவை வகைக்குறிக்கின்றது.

Right hand grip rule: வெள்ளை நிறக் கதிரின் திசையில் மின்னோட்டம் பாயும் போது உருவாகும் காந்தப்புலம் சிவப்பு நிறக் கதிரின் திசையில் செயல்படும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தப்_புலம்&oldid=2318983" இருந்து மீள்விக்கப்பட்டது