உள்ளடக்கத்துக்குச் செல்

மின்காந்தப் புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்காந்தப் புலம் (electromagnetic field, அல்லது EMF அல்லது EM field) என்பது மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நகர்வினால் ஏற்படும் ஓர் இயற்பில் புலமாகும். இதன் அண்மையில் இருக்கும் மின்மமூட்டப்பட்ட பொருட்களின் நடத்தையை பாதிக்கிறது. இது பெருவெளியெங்கும் எல்லையற்று நீள்கிறது; மின்காந்தவியல்|மின்காந்தப் பண்புகளை தீர்மானிக்கிறது.இயற்கையின் அடிப்படை விசைகள் எனப்படும் நான்கினுள் ஒன்றாக விளங்குகிறது.

இந்தப் புலம் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தங்களின் சேர்க்கையாகத் திகழ்கிறது. நிலைத்திருக்கும் மின்மப் பொருட்கள் மின்புலத்தையும் நகரும் மின்மப் பொருட்கள் (மின்னோட்டம்) காந்தப் புலத்தையும் ஏற்படுத்துகின்றன; மின்காந்தப்புலத்தின் மூலங்களாக இவை பொதுவாக விளக்கப்படுகின்றன. மின்காந்தப்புலத்துடன் எவ்வாறு மின்மங்களும் மின்னோட்டங்களும் ஈடுபடுகின்றன என்பதை மாக்ஸ்வெல் சமன்பாடுகளும் லோரன்ட்சின் விசை விதியும் விவரிக்கின்றன.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்தப்_புலம்&oldid=2745134" இலிருந்து மீள்விக்கப்பட்டது