ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கான்சு கிருசிட்ய்ன் ஆர்ச்டேட்
தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர்

ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் (ஓன்ஸ் கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்) (Hans Christian Orsted, 14 ஆகத்து 1777 - 9 மார்ச்சு 1851 ) என்பவர் ஒரு தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர் . மின்காந்தவியலின் முக்கிய பங்கான , காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்ற கருத்தை கண்டறிந்தது இவரின் ஆய்வில் சிறந்ததாகும். முதன்முதலில் அலுமினிய உலோகத்தைப் பிரித்தறிந்த பெருமைக்குரியவர். அலுமினியம் குளோரைடை ஒடுக்கமடையச் செய்து அலுமினியத்தை இவர் தயாரித்தார். நீரற்ற அலுமினியம் குளோரைடை பொட்டாசியம் ரசக்கலவையுடன் வினைப்படுத்தும் போது தகரத்தை(Tin) ஒத்த ஓர் உலோகம் கிடைக்கப்பெற்றதாக, 1825 ஆம் ஆண்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டார் ஆர்ஸ்டெட். இவரின் சோதனையைத் திரும்பச்செய்த பிரீட்ரிச் வோஹ்லர் என்ற அறிவியலாளர், கிடைக்கப்பெற்ற உலோகம் அலுமினியம் அல்ல பொட்டாசியம் என அறிவித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர். வேங்கட ராமன், "முழுமை அறிவியல் உதயம்" மார்ச் 2012 இதழ், பக். 3606