ஆந்த்ரே-மாரி ஆம்பியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்த்ரே-மாரி ஆம்பியர்
Ampere Andre 1825.jpg
ஆந்த்ரே-மாரி ஆம்பியரின் செதுக்கிய சித்திரம்
பிறப்புசனவரி 20, 1775(1775-01-20)
லியோன், பிரான்சு
இறப்பு10 சூன் 1836(1836-06-10) (அகவை 61)
மர்சேய், பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
துறைஇயற்பியல்
பணியிடங்கள்இகோல் பாலிடெக்னிக்
அறியப்படுவதுஆம்ப்பியர் விதி, ஆம்பியரின் விசை விதி
கையொப்பம்

ஆந்த்ரே-மாரி ஆம்பியர் ( André-Marie Ampère, /ˈæmpɪər/;[1] பிரெஞ்சு மொழி: [ɑ̃pɛʁ]; 20 சனவரி 1775 – 10 சூன் 1836)[2] பிரான்சிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பொதுவாக அறிவியலில் மரபார்ந்த இயக்க மின்னியல் எனப்படும் செவ்வியல் மின்காந்தவியல் பிரிவை நிறுவியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மின்னோட்டத்திற்கான அனைத்துலக முறை அலகு இவர் நினைவாக ஆம்பியர் எனப் பெயரிடபட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆம்பியர் 1775ஆம் ஆண்டில் பிரான்சின் லியோனில் பிறந்தார். சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் கற்றுக் கொடுத்தார். கணிதத்தில் நாட்டம் மிக்க ஆம்பியர் லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் இதனால் ஆம்பியர் கணிதத்தில் மட்டுமன்றி வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளில், ஆம்பியரின் தந்தையை புரட்சியாளர்கள் கொன்றனர். இது ஆம்பியர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1796இல் லியோனில் அண்மையில் வசித்த வந்த கொல்லர் குடும்பத்தின் சூலி கேரோனைச் சந்தித்தார். சந்திப்பு காதலாக மாற, 1799இல் இவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, ஆம்பியர் லியோனில் கணிதம், வேதியியல், மொழிகள் மற்றும் இயற்பியல் கற்பிக்கும் பேராசிரியராக வேலை செய்தார். 1803இல் தமது மனைவியின் மரணத்திற்கு பிறகும் இதே வேலையில் நீடித்திருந்தார். இருப்பினும் மனைவியின் இழப்பு அவரை வாழ்நாள் முழுமையும் வாட்டியது. மர்சேயில் உயிரிழந்த ஆம்பியர் பாரிசிலுள்ள சிமெட்டியர் டெ மோன்மார்த்ரெயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவர் எழுதிய தன்வாழ்க்கை சரிதமான மடல்களும் பதிவேடும் (Journal et correspondence) அவரது குழந்தைத்தனமான பண்பையும் எளிமையையும் சித்தரிக்கிறது.

பங்களிப்பு[தொகு]

ஆம்பியர் மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்தியதற்காக மிகவும் அறியப்படுகிறார். இவற்றை இரண்டையும் இணைத்து புதிய துறையாக மரபார்ந்த மின்காந்தவியல், அல்லது மரபார்ந்த இயக்க மின்னியலை நிறுவினார். செப்டம்பர் 11, 1820 அன்று ஆர்ஸ்டெட்டின் கண்டுபிடிப்பு மூலமாக காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என அறிந்தார். இதற்கு ஒரு வாரத்திலேயே இத்தகைய பண்புக்கு மிக விரிவான மேம்பட்ட விளக்கத்தை வழங்கினார். அதேநாளில் ஒரேபோன்ற மின்மங்கள் எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்மங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்றும் கண்டறிந்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Ampère". Random House Webster's Unabridged Dictionary.
  2. Dictionary of Scientific Biography. United States of America: Charles Scribner's Sons. 1970. https://archive.org/details/dictionaryofscie0000unse_s3y8. 

மேலறிதலுக்கு[தொகு]

  • Williams, L. Pearce (1970). "Ampère, André-Marie". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 139-147. ISBN 0684101149. 

வெளி இணைப்புகள்[தொகு]