தொடர் மற்றும் பக்க மின்சுற்றுக்கள்
Appearance
மின்காந்தவியல் |
---|
மின் உறுப்புகள் மின் சுற்றுக்களால் பல வகைகளில் இணைக்கப்படலாம். இரண்டு அடிப்படை முறைகள் தொடர் மற்றும் பக்க மின்சுற்றுக்கள் ஆகும். சிக்கலான மின் சுற்றுக்கள் தொடர் மற்றும் பக்க மின்சுற்றுக்களாக பிரித்தாயப் படலாம்.
மின் உறுப்புகள் தொடராக ஒரே மின்பாதையில் இணைக்கப்படும் போது அச்சுற்று தொடர் மின் சுற்று ஆகும். இதில் ஒரே மின்னோட்டம் எல்லா உறுப்புகளின் ஊடாகவும் பாயும். மின் உறுப்புகள் இடையே ஒரே மின்னழுத்தம் அமையுமாறான இணைப்பு பக்க மின் சுற்று எனப்படுகிறது.