அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய ஆட்ரான் மோதுவியின் ஒரு பகுதி, இயற்பியல் பரிசோதனைக் கருவி
Animation of the structure of a section of DNA. The bases lie horizontally between the two spiraling strands.[1]

அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.

வரலாறு[தொகு]

முதன்மைக் கட்டுரை: அறிவியல் வரலாறு

அறிவியல் நோக்கில் அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் அறிவொளிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்னைய சீன, இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அல்லது தெரிந்து அறிவியல் வழிமுறை சீர் செய்யப்பட்டது.

துறைகள்[தொகு]

இயற்கை அறிவியல்[தொகு]

அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் ஆகியவற்றையே சிறப்பாகக் குறிக்கிறது. இவை இயற்கை அறிவியல் என்று இப்போது அறியப்படுகின்றன. இயற்கை அறிவியலில் கணிதம் பன்முக வலுவோடு பயன்படுகிறது. இவை பற்றி துல்லியமாகப் புறவயமாக ஆய முடிவதால் இவற்றை வலு அறிவியல் துறைகள் (hard sciences) என்பர்.(bulletin)

சமூக அறிவியல்[தொகு]

சமூகவியல், மானிடவியல், அரசறிவியல், பொருளியல் போன்ற துறைகள் சமூக அறிவியல் துறைகள் ஆகும். இத்துறைகளில் மனிதர் தொடர்புடையவை. அகம் தொடர்புடையவை. ஆகையால் அறிவியல் முறைமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, உறுதியான கோட்பாடுகளை உருவாக்குவது சிரமமானது.

அறிவியல் வழிமுறை[தொகு]

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் நுணுக்கங்கள் ஆகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். அவதானிக்கப்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அவ்வாதாரங்கள் பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Created from PDB 1D65

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்&oldid=2276899" இருந்து மீள்விக்கப்பட்டது