அறிவியல் தமிழ் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். "தமிழக அரசு தமிழை அறிவியல் தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் துறையாக அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பையே தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக உருவாக்கியுள்ளது. மைய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்துள்ளதன் விளைவாக மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கித் தமிழ் வளர்ச்சியில், குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது." [1]

இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]