அணுக்கரு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவிட்சர்லாந்தில் "குரோக்கஸ்" என்ற சிறு அணுக்கரு உலை

அணுக்கரு உலை (Nuclear reactor) அணு உலை என்பது அணுக்கரு தொடர்வினையைத் தொடங்கி முழுமையான கட்டுப்பாட்டோடு நிகழ்த்தும் ஓர் அமைப்பாகும். இதற்கு எதிர்மாறாக அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் அணுக்கருத் தொடர்வினை ஏற்படுவதால் வெடிப்பு ஏற்படுகிறது.

அணுக்கரு உலைகள் மின்னாற்றலை உருவாக்க பேரளவில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் இருந்து வெளியேறும் ஆற்றல் வெப்ப வடிவில் வெளிவருகின்றது. அணுக்கரு உலையில் வெளிவரும் வெப்ப ஆற்றல் உண்டாக்கும் நீராவி நீராவிச்சுழலிகளை இயக்குகிறது. இவை கப்பல்களை இயக்கவும் மின் நிலையங்களில் மின்னாக்கியை இயக்கவும் உதவுகின்றன.மேலும் இந்நீராவி தொழிலகச் செயல்முறைகளுக்கு வெப்பம் தரவும் அறைகளைச் சூடுபடுத்தவும் பயன்படுகிறது. அணுக்கரு உலைகள் ஓரகத் தனிமங்களை உருவாக்கவும் அணுக்கரு மருத்துவத்துக்கும் அணுக்கருப் படைக்கலன்களை உருவாக்கவும் அமைக்கப்படுகின்றன.சில ஆராய்ச்சிக்காகவும் உயராற்றல் புளூட்டோனியத்தை உண்டாக்கவும் பயன்படுகின்றன.இப்போது உலகின் பல நாடுகளில் 450 க்கும் மேற்பட்ட அணுக்கரு மின் நிலையங்கள் மின்னாக்கத்துக்கு இயங்கி வருகின்றன.[1]

முதலாவது அணுக்கரு உலை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் CP1 என்ற சிக்காகோ உலை-1 (Chicago Pile-1) என்ற பெயரில் 1942 இல் என்றிகோ பெர்மியின் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இயங்குமுறை[தொகு]

ஓர் தூண்டிய அணுக்கருப் பிளவு வினை. யுரேனியம்-235 அணு நொதுமியை உட்கவர்கிறது. இது நொதுமியால் பிளவுபட்டு பல கட்டற்ற வேகமாக இயங்கும் நொதுமிகளையும் எடை குறைந்த தனிமங்களையும் உருவாக்குகிறது. அணுக்கரு உலைகளும் அணுகுண்டும் அணுக்கருத் தொடர்வினையையே பயன்படுத்தினாலும் உலையில் வினைவீதம் குண்டைவிட மிக மெதுவாக நடைபெறுகிறது.

வழக்கமாக அனல்மின் நிலையங்களில் எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடைபெறுகிறது; அணுக்கரு மின் நிலையங்களில் அணுக்கரு உலைகளின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடக்கிறது.

அணுப்பிளவு வினை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_உலை&oldid=2118810" இருந்து மீள்விக்கப்பட்டது