மின் உற்பத்தி
மின்னாக்கம் அல்லது மின் உற்பத்தி (Electricity generation) மற்ற முதன்மை ஆற்றல்களிலிருந்து மின்திறனை உருவாக்குவதாகும். பயனர்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்பகிர்மான நிறுவனங்களின் முதற் செயற்பாடே மின்னாக்கம் ஆகும்; மற்றவை செலுத்தல், வழங்கல் ஆகியனவாம். மின் நிலையங்களில் பெரும்பாலும் எரிப்பு அல்லது அணுக்கரு பிளவால் இயங்கும் வெப்ப எந்திர மின்னியக்க ஆக்கிகளால் மின்னாக்கம் நடைபெறுகின்றது; பாயும் நீர்/ வளிமங்களின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தியும் கதிரொளியின் ஒளிமின்னழுத்தியம் மற்றும் புவி வெப்பத்தைப் பயன்படுத்தியும் மின்னாக்கம் நடைபெறுகின்றது.
மின்னியக்கியின் காந்தப்புலத்தின் நடுவே ஓர் மின்கடத்து பொருள் சுழலும் போது அந்த சுழலும் மின் கடத்தும் பொருளில் மின்சாரம் உருவாகிறது. இதுதான் அடிப்படையான விஷயம். இது சூரியமின் சக்தி தவிர மற்ற அனைத்து வகையான மின் உற்பத்தியும் இந்த முறையிலே நடைபெறுகின்றன. அந்த மின் கடத்தும் பொருளைச் சுற்ற பல்வேறு சக்தியை உபயோகிக்கின்றோம். நீர், நீராவி, அனல், அணு, மற்றும் காற்று, போன்ற பிற சக்தியினால் மின்சாரத்தை பெறுகின்றனர். மின் உற்பத்தி என்பது மின் அல்லாத வடிவில் உள்ள ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் வழிமுறை ஆகும். மின் செலுத்துதலும், மின் வழங்கலும் இதனோடு இணைந்த செயற்பாடுகள் ஆகும். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் மின்திறன் துறை முக்கிய இடத்தை வகிக்கிறது.
நீர் மின் நிலையங்களே அதிகம் பரவலாக பயன்படுத்தப்படும் மின் உற்பத்தி முறை. இது தவிர மின்னாற்றலை உற்பத்தி செய்ய வேறு பல வழிமுறைகள் உண்டு. அவை பின்வருமாறு: