சுழலி மின்னாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புடாபெசுட்டு நகரில் 1986 இல் உருவாக்கப்பட்ட கன்சு நிறுவனத்தின் தண்ணீர் சுழலி மின்னாக்கி
1904 இல் கன்சு தண்ணீர் சுழலி மின்னாக்கியின் மின்னகமாக ஓட்டோ பிளேட்டி
நீராவி இயக்க ஊர்திகளுக்கான ஆர்.பி4 வகை சுழலி மின்னாக்கி, இடதுபுறம் மின்னாக்கியும் வலதுபுறம் சுழலியும் உள்ளன.
செருமனியின் எபர்பெல்டிலுள்ள பார்சனின் மெகாவாட் மின் திறன் அளவு மின்னுற்பத்தி திட்டம்

சுழலி மின்னாக்கி (Turbo generator) என்பது மின்சார உற்பத்திக்காக ஒரு விசையாழியும் மின்னாக்கியும் நேரடியாக இணைக்கப்பட்ட ஒர் அமைப்பாகும். நீராவியால் இயங்கும் பெரிய சுழலி மின்னாக்கிகள் உலகின் மின்சாரத் தேவையில் பெரும்பான்மையை வழங்குகின்றன. நீராவியால் இயங்கும் சுழலி-மின் கப்பல்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன [1].

வாயு விசையாழிகளுடன் கூடிய சிறிய சுழலி-மின்னாக்கிகள் பெரும்பாலும் துணை மின் அலகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் மின்னாக்கிகள் வழக்கமாக சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன, ஆனால், மறுபுறத்தில், டீசல் மின்னாக்கிகள் குறைவான சக்தி அடர்த்தியைப் பெற்றிருப்பதால் இவற்றுக்கு கூடுதல் இடம் தேவைப்படுகிறது.

பெரிய வாயு விசையாழி மின்னாக்கிகளின் செயல்திறனை ஒர் ஒருங்கிணைந்த சுழற்சியைப் பயன்படுத்தி அதிகப்படுத்தப்படலாம், இத்திட்டத்தில் சூடான வெளியேற்ற வாயுக்கள் மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்க நீராவியை உருவாக்குகின்றன. இந்நீராவி மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்கப் பயன்படுகிறது.

வரலாறு[தொகு]

தண்ணீர் சுழலிகளே முதலாவது சுழலி மின்னாக்கிகள் ஆகும். இவை மின்சார மின்னாக்கிகளை உந்தி மின்சாரத்தைத் தோற்றுவித்தன. 1866 இல் முதலாவது நீர் விசையாழி அங்கேரியில் கன்சு நிறுவனத்தின் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. தொழில்துறை அளவிலான மின்னாக்கிகளின் உற்பத்தி 1883 ஆம் ஆண்டில் தொடங்கியது [2]. சுழலி மின்னாக்கியை 1903 ஆம் ஆண்டில் அங்கேரிய பொறியாளரான ஓட்டோ பிளேட்டி கண்டுபிடித்தார்[3]. ஆனால் பார்சன்சு என்பவர் ஏற்கனவே நேர்மின்னோட்ட நீராவி இயக்க சுழலி மின்னாக்கியை 1887 ஆம் ஆண்டில் ஒரு மின்னாக்கியைப் பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்திருந்தார்[4], 1901 இல் செருமனியின் எபர்பெல்டிலுள்ள மெகாவாட் மின் திறன் அளவு மின்னுற்பத்தி திட்டத்திற்கு மாறுமின்னோட்ட சுழலி மின்னாக்கியை விநியோகம் செய்திருந்தார் [5]. நீராவி வகை இயங்கு வாகனங்களில் வாகனத்தின் ஒளியமைப்பு மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளுக்கான ஆற்றல் மூலமாகவும் சுழலி மின்னாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

ஐதரசன் குளிர்விப்பு சுழலி மின்னாக்கிகள்[தொகு]

காற்று குளிர்விப்பு மின்னாக்கிகளின் அடிப்படையில் ஐதரசன் வாயுவை குளிர்விப்பானாக பயன்படுத்தி ஐதரசன் குளிர்விப்பு சுழலி மின்னாக்கிகள், அமெரிக்காவில் 1937 ஆம் ஆண்டு டேய்டான் மின் மற்றும் ஒளி நிறுவனம் உருவாக்கியது. ஐதரசன் வாயுவானது, சுழலகத்தில் குளிர்விப்பானாகவும் சிலசமயங்களில் நிலையகத்தில் குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 99.0% செயல்திறனை எட்டமுடிகிறது. ஐதரசன் வாயுவின் உயர் வெப்பக்கடத்தல், தன்வெப்ப ஏற்புத்திறன், குறைவான அடர்த்தி முதலியன இதற்கான காரணங்களாகும். மின்னாற்பகுப்பு மூலம் ஐதரசன் வாயு தளத்திலேயே தயாரிக்கப்படுகிறது.

மின்னாக்கியானது காற்றுப்புகாத அளவுக்கு மூடப்படுகிறது. இதனால் ஐதரசன் வாயு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இவ்விடத்தில் வளிமண்டல ஆக்சிசன் இல்லாததால் மின்காப்பு சுற்றுகளால் ஒளிவட்ட மின்னிறக்கத்திற்கான பாதிப்பு வெகுவாக குறைகிறது. ஐதரசன் வாயி சுழலகத்தின் உட்பகுதியில் சுழற்றப்படுகிறது. வாயு-நீர் வெப்பப் பரிமாற்றிகளால் குளிர்விக்கப்படுகிறது [6].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழலி_மின்னாக்கி&oldid=3300909" இருந்து மீள்விக்கப்பட்டது