உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்ப எந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப எந்திரம் என்பது வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாய் மாற்றும் ஓர் எந்திரம். வெப்பநிலை வேறுபாடுகளைப் பயன்படுத்தி, உயர் வெப்பநிலையில் இருந்து தாழ் வெப்பநிலைக்கு மாறும்பொழுது வெப்ப ஆற்றலை (நகர்ச்சி போன்ற) இயங்கு ஆற்றலாக மாற்ற இயலும். பெரும்பாலும் ஒரு நீர்மம் (திரவம்) அல்லது வளிமம் (வாயு) விரிவடைவதன் மூலம் வேலை நிகழ்கின்றது. நீராவி எந்திரம், உள் எரி பொறியால் இயங்கும் தானுந்து, 'டீசல் எந்திரம் இவையெல்லாம் இந்த வெப்ப எந்திரத்தின் அடைப்படையிலேயே, வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாக மாற்றுகிறது. இதனை விளக்கும் துறை வெப்ப இயக்கவியல் என்பதாகும்.

குளிர்ப்பதனப் பெட்டி (Refrigerator) அல்லது குளிர்வி என்பது வெப்ப எந்திரத்திற்கு நேர் எதிரான முறையில் இயங்குகிறது. இதை இயக்க வேலை செய்து (ஆற்றல் செலவழித்து), வெப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திகிறது. வெப்ப எந்திரம் வெப்ப வேறுபாடுகளைப் பயன்படுத்தி வேலை செய்விக்கிறது.

சுழற்சி/இயக்கமுறை அமுக்கழுத்தம் வெப்பம் கூட்டல் விரிவடைதல் வெப்பம் விலக்கல்
கார்னோ வெப்பமிழக்காத ஒரேவெப்பநிலை வெப்பமிழக்காத ஒரேவெப்பநிலை
ஒட்டோ(பெட்றோல்) வெப்பமிழக்காத ஒரேகொள்ளளவு வெப்பமிழக்காத ஒரேகொள்ளளவு
'டீசல் வெப்பமிழக்காத ஒரே அழுத்தநிலை வெப்பமிழக்காத ஒரேகொள்ளளவு
பிரேய்ட்டன் பீய்ச்சு எந்திரம் (Brayton (Jet)) வெப்பமிழக்காத ஒரே அழுத்தநிலை வெப்பமிழக்காத ஒரே அழுத்தநிலை
ஸ்டர்லிங் ஒரேவெப்பநிலை ஒரேகொள்ளளவு ஒரேவெப்பநிலை ஒரேகொள்ளளவு
எரிக்சன் (Ericsson) ஒரேவெப்பநிலை ஒரே அழுத்தநிலை ஒரேவெப்பநிலை ஒரே அழுத்தநிலை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_எந்திரம்&oldid=3419604" இலிருந்து மீள்விக்கப்பட்டது